Home | 11 ஆம் வகுப்பு | 11வது பொருளாதாரம் | உற்பத்தியாளர் சமநிலை

தயாரிப்பு பகுப்பாய்வு | பொருளாதாரம் - உற்பத்தியாளர் சமநிலை | 11th Economics : Chapter 3 : Production Analysis

11வது பொருளாதாரம் : அத்தியாயம் 3 : உற்பத்தி பகுப்பாய்வு

உற்பத்தியாளர் சமநிலை

உற்பத்தியாளர் சமநிலை என்பது ஒரு குறிப்பிட்ட நிலையில் உற்பத்தியாளர் உச்சபட்ச உற்பத்தியை அடையும் நிலையாகும்.

உற்பத்தியாளர் சமநிலை

உற்பத்தியாளர் சமநிலை என்பது ஒரு குறிப்பிட்ட நிலையில் உற்பத்தியாளர் உச்சபட்ச உற்பத்தியை அடையும் நிலையாகும். இது உற்பத்திக் காரணிகளின் உத்தம அளவு எனவும் அழைக்கப்படுகிறது. சுருங்கக்கூறின், உற்பத்தியாளர் இருக்கக்கூடிய தொகையைக் கொண்டு ஒரு குறிப்பிட்ட அளவு உற்பத்தியை குறைந்த செலவில் மேற்கொள்வதைக் குறிக்கும்.


காரணிகளின் உத்தம அளவு குறிப்பிடுவது

குறிப்பிட்ட அளவு உள்ளீட்டில் அதிக பட்ச உற்பத்தியைப் பெறுவது. 

குறைந்த செலவில், குறிப்பிட்ட உற்பத்தியைப் பெறுவது. 

உற்பத்தியாளர் சமநிலையை அடைய நிபந்தனை

உற்பத்தியாளர் சமநிலையை அடைய இரண்டு நிபந்தனைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

சம அளவு செலவுக்கோடு, சம உற்பத்தி வளைகோட்டிற்கு தொடுகோடாக அமைய வேண்டும்.

அந்த தொடு புள்ளியில் சம உற்பத்தி வளைகோடு தோற்றுவாய் நோக்கி குவிந்து காணப்படும் அல்லது MRTSLK குறைந்து செல்லும்.

மேற்கண்ட வரைபடத்தில் (3.11) E என்ற புள்ளியில் உற்பத்தியாளர் அதிக அளவு இலாபத்தை பெறுகிறார். அந்தப்புள்ளியில் சம அளவு உற்பத்திக்கோட்டினை சம அளவு செலவுக் கோடு தொட்டுச் செல்லும். அந்தப் புள்ளியில், அந்த இரண்டு கோடுகளின் சாய்வும் சமமாக இருக்கும்.

உழைப்பிற்கான மூலதனத்தின் இறுதிநிலை தொழில்நுட்ப பதிலீட்டு வீதம் (MRTS) உற்பத்தி காரணிகளின் விலை விகிதத்திற்கு சமமாகும்.

இதனை இவ்வாறு குறிப்பிடலாம்.

 MRTSL,K =PL / PK =10/30=1/3=0.333

E என்ற புள்ளியில் நிறுவனம் OM அலகு உழைப்பையும் ON அலகு மூலதனத்தையும் பயன்படுத்துகிறது.

சம உற்பத்தி வளைகோடு (IQ) ல் அமைந்துள்ள உற்பத்தியினை குறைந்த செலவு உற்பத்திக்கலவையினை பயன்படுத்தியோ, இரு காரணிகளின் உத்தம அளவை கலவையைப் பயன்படுத்தியோ பெற உற்பத்தியாளர் முயல்வார்.

உயர் சமசெலவுக் கோடுகளில் அமைந்துள்ள H, K, R மற்றும் S புள்ளிகள் அதிகசெலவினங்களையும், உற்பத்தியாளர் அடைய இயலாத நிலையையும் குறிக்கின்றன.


Tags : Production Analysis | Economics தயாரிப்பு பகுப்பாய்வு | பொருளாதாரம்.
11th Economics : Chapter 3 : Production Analysis : Producer's Equilibrium Production Analysis | Economics in Tamil : 11th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது பொருளாதாரம் : அத்தியாயம் 3 : உற்பத்தி பகுப்பாய்வு : உற்பத்தியாளர் சமநிலை - தயாரிப்பு பகுப்பாய்வு | பொருளாதாரம் : 11 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது பொருளாதாரம் : அத்தியாயம் 3 : உற்பத்தி பகுப்பாய்வு