வரலாறு - பாடச் சுருக்கம் - தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம் | 11th History : Chapter 5 : Evolution of Society in South India
பாடச் சுருக்கம்
•
தமிழை எழுதுவதற்காக எழுத்துமுறை பயன்பாட்டில் இருந்தமை, மேலும் கல்வெட்டுகள், இலக்கியங்கள் ஆகிய எழுத்துவடிவச் சான்றுகள் கிடைப்பதால், தென் இந்தியாவின் வரலாற்றை பொ.ஆ.மு மூன்றாம் நூற்றாண்டிலிருந்து தெளிவாக அறிய முடிகிறது.
• இரும்புக் காலத்தில் தலைமை உரிமை கொண்டவர்களாக இருந்த சேர, சோழ, பாண்டியர் சங்க காலத்தில் வேந்தர் என்னும் பட்டப் பெயரோடு அரசர்களாயினர்.
• ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரப் பகுதிகளை ஆட்சி செய்த சாதவாகனர்கள் மூவேந்தர்களின் சமகாலத்தவர்.
• தென்னிந்தியாவில் பௌத்தமும் சமணமும் வலுவான நிலையிலிருந்தன. ஆளும் வர்க்கத்தினரிடையே வேதக் கருத்துக்கள் செல்வாக்கு செலுத்தத் தொடங்கின.
• இந்தியப் பெருங்கடல் பகுதிகளோடும் ரோமானிய உலகத்தோடும் கடல் சார் வணிகம் வளர்ந்தது.
• முன்பிருந்ததைப் போலவே களப்பிரர் காலத்திலும் பண்பாட்டு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றது.