Home | 7 ஆம் வகுப்பு | 7வது கணிதம் | பாடச்சுருக்கம்

புள்ளியியல் | மூன்றாம் பருவம் அலகு 5 | 7ஆம் வகுப்பு கணக்கு - பாடச்சுருக்கம் | 7th Maths : Term 3 Unit 5 : Statistics

7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 5 : புள்ளியியல்

பாடச்சுருக்கம்

7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 5 : புள்ளியியல் : பாடச்சுருக்கம்

பாடச்சுருக்கம்

நோக்கத்தின் அடிப்படையில், தரவுகளின் பிரதிநிதித்துவ மதிப்பைக் கண்டுபிடிக்கப் பொருத்தமான தரவுகளைச் சேகரித்து ஒழுங்கமைக்க வேண்டும்

தரவின் பிரதிநிதித்துவ மதிப்பானது மையப்போக்கு அளவு என அழைக்கப்படுகிறது

கூட்டுச்சராசரி என்பது தரவுகளில் மிகப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பிரதிநிதித்துவ மதிப்பு. இந்த மதிப்பானது பின்வரும் சூத்திரத்தாலும் கணக்கிடப்படுகிறது.

கூட்டுச் சராசரி = மதிப்புகளின் கூடுதல்/மதிப்புகளின் எண்ணிக்கை 

முகடு என்பது அதிகபட்ச எண்ணிக்கையிலான தரவுகளின் மதிப்பு ஆகும்

தரவுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட முகடுகள் இருக்கலாம். அதேபோல், முகடு இல்லாமலும் இருக்கலாம்

தரவுகள் பெரிய எண்ணிக்கையில் இருந்தால் முகடைக் கண்டுபிடிக்கத் தரவுகளை வரிசைப்படுத்த வேண்டும்.

தரவுகளிலிருந்து இடைநிலையைக் கண்டுபிடிக்க 

(i) தரவுகளை ஏறுவரிசையிலோ அல்லது இறங்குவரிசையிலோ அமைக்கவும்

(ii) உறுப்புகளின் எண்ணிக்கை (n) ஆனது ஒற்றைப்படை என்றால், பின்னர் (n+1/2) ஆவது உறுப்பானது இடைநிலை ஆகும்.

(iii) உறுப்புகளின் எண்ணிக்கை (n) இரட்டைப்படையாக இருந்தால், பின்னர் (n/2), (n/2+1) ஆவது உறுப்புகளின் சராசரியானது இடைநிலையாகும்.


இணையச் செயல்பாடு

புள்ளியில்

செயல்பாட்டின் இறுதியில் கிடைக்கப் பெறுவது


படி 1

கீழேக் கொடுக்கப்பட்டுள்ள உரலியை தட்டச்சு செய்து அல்லது விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி இணையத்தினுள் நுழைந்த பின் ஜீயோ ஜீப்ரா என்னும் இணையப் பக்கத்தில் "கூட்டுச்சராசரி - இடைநிலை - முகடு (Mean – Median - Mode)" என்னும் பணித்தாள் திறக்கும். உங்களது எண்ணை தட்டச்சு செய்வதன் மாணவர்களின் எண்ணிக்கை மாற்றம் பெறும். பின்னர் அந்த இணையப்பக்கத்தின் வலது புறத்தில் கூட்டுச்சராசரி, இடைநிலை மற்றும் முகடு ஆகியவற்றின் மதிப்பைக் காணலாம்.

படி 2


செயல்பாட்டின் உரலி 

கூட்டுச்சராசரி - இடைநிலை -முகடு https://www.geogebra.org/m/

 f4w7csup#material/sanzgm9n

அல்லது விரைவுக் குறியீட்டை ஸ்கேன் செய்க.



Tags : Statistics | Term 3 Chapter 5 | 7th Maths புள்ளியியல் | மூன்றாம் பருவம் அலகு 5 | 7ஆம் வகுப்பு கணக்கு.
7th Maths : Term 3 Unit 5 : Statistics : Summary Statistics | Term 3 Chapter 5 | 7th Maths in Tamil : 7th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 5 : புள்ளியியல் : பாடச்சுருக்கம் - புள்ளியியல் | மூன்றாம் பருவம் அலகு 5 | 7ஆம் வகுப்பு கணக்கு : 7 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 5 : புள்ளியியல்