சீரான காந்தப்புலத்தில் உள்ள சட்டகாந்தத்தின் மீது செயல்படும் திருப்புவிசை: தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு சிக்கல்கள்
எடுத்துக்காட்டு 3.7
புறகாந்தப்புலம் ஒன்றில் உள்ள காந்த இருமுனையைக்கருதுக. புறகாந்தப்புலம் செயல்படும்போது காந்த இருமுனை இரண்டு வழிகளில் மட்டுமே ஒருங்கமையும். அதாவது ஒன்று புறகாந்தப்புலத்தின் திசையில் (புறகாந்தப்புலத்திற்குஇணையாக) மற்றொன்று புறகாந்தப்புலத்தின் திசைக்கு எதிர்த்திசையில் இவ்விரண்டு நிகழ்வுகளிலும் தோன்றும் ஆற்றலைக் கணக்கிட்டு அதற்கான வரைபடங்களை வரைக.
தீர்வு
சட்டகாந்தத்தின் இருமுனைதிருப்புத்திறன்
என்க. புறகாந்தப்புலம் செயல்படாத நிலையில் எவ்வித ஒருங்கமைவும் ஏற்படாது. எனவே ஆற்ற ல் U = 0.
புறகாந்தப்புலம் செயல்பட்ட உடன், காந்த இருமுனை புறகாந்தப்புலத்தின் திசையில் (θ = 0°) ஒருங்கமையும்போது அதன் ஆற்றல்
Uஇணை = Uசிறுமம் =-pmBcos 0°
Uஇணை = -pmB
ஏனெனில் cos 0° = 1
அவ்வாறு இல்லையெனில், காந்த இருமுனை புறகாந்தப்புலத்தின் திசைக்கு எதிர்த்திசையில் (θ= 180°) ஒருங்கமையும் போது அதன் ஆற்றல்
Uஎதிர்-இணை = Uபெருமம் =-pmBcos180°
= Uஎதிர்-இணை= pmB
ஏனெனில் cos 180° = -1