LC அலைவுகள் மற்றும் தனிச்சீரிசை அலைவுகள் இடையே உள்ள ஒப்புமைகள்
LC அமைப்பின் மின்காந்த அலைவுகளை ஒரு சுருள்வில்-நிறை
அமைப்பின் இயந்திரவியல் அலைவுகளுடன் ஒப்பிடலாம்.
LC அலைவுகளில் இரு வகையான ஆற்றல் உள்ளன. ஒன்று
மின்னேற்றம் செய்யப்பட்ட மின்தேக்கியின் மின் ஆற்றல்; மற்றொன்று மின்னோட்டம் தாங்கிய
மின் தூண்டியின் காந்த ஆற்றல்.
இதுபோன்று, சுருள்வில் - நிறை அமைப்பின் இயந்திர ஆற்றலும் இரு வகையாக உள்ளன; அமுக்கப்பட்ட அல்லது நீட்டப்பட்ட சுருள்வில்லின் நிலையாற்றல் மற்றும் நிறையின் இயக்க ஆற்றல். இந்த இரு ஆற்றல் சோடிகள் அட்டவணை 4.3 இல் காட்டப்பட்டுள்ளன.
அட்டவணை 4.2 ஐ ஆய்வு செய்வதன் மூலம், பல்வேறு
அளவுகளுக்கு இடையே உள்ள ஒப்புமைகளைப் புரிந்து கொள்ளலாம். இந்தத் தொடர்புகள் அட்டவணை
4.3 இல் கொடுக்கப்பட்டுள்ளன.
சுருள்வில் - நிறை அமைப்பில் நடைபெறும் அலைவுகளின்
கோண அதிர்வெண் ஆனது பின்வருமாறு (XI இயற்பியல் பாடப்புத்தகத்தின் பகுதி 10.4.1 - இன்
சமன்பாடு 10.22 ஐக் காண்க).
அட்டவணை 4.3 இல் இருந்து மற்றும்
m à L. எனவே
LC அலைவுகளின் கோண அதிர்வெண் ஆனது