Home | 11 ஆம் வகுப்பு | 11வது வேதியியல் | சரியான விடையினை தெரிவு செய்க

கேள்விகளுக்கான பதில்கள் - சரியான விடையினை தெரிவு செய்க | 11th Chemistry : UNIT 3 : Periodic Classification of Elements

   Posted On :  24.12.2023 07:00 am

11 வது வேதியியல் : அலகு 3 : தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு

சரியான விடையினை தெரிவு செய்க

11 வது வேதியியல் : அலகு 3 : தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு : சரியான விடையினை தெரிவு செய்க

மதிப்பீடு


I சரியான விடையினை தெரிவு செய்க

1. அணு எண் 222 கொண்ட தனிமத்தின் IUPAC பெயர் என்னவாக இருக்கும்?

) bibibiium

) bididium

) didibium

) bibibium

[விடை: ) bibibium]


2. A மற்றும் B ஆகிய தனிமங்களின் எலக்ட்ரான் அமைப்பு முறையே 1s2, 2s2, 2p6, 3s2 மற்றும் 1s2, 2s2, 2p6, 3s2, 3p5 ஆகும், இவ்விரு தனிமங்களுக்கிடையே தோன்றும் அயனி சேர்மத்தின் மூலக்கூறு வாய்பாடு.

) AB

) AB2

) A2B

) எதுவும் இல்லை

[விடை: ) AB2 ]


3. வேறுபடுத்திக் காட்டும் எலக்ட்ரான், (differentiating electron) தனிமத்தின் வெளிக்கூட்டிற்கு முந்தைய ஒன்றுவிட்ட உள்கூட்டில் (anti penultimate shell) சென்று சேரும் தனிமங்களைக் கொண்டுள்ள தொகுதி.

) p-தொகுதி தனிமங்கள்

) d-தொகுதி தனிமங்கள்

) s-தொகுதி தனிமங்கள்

) f-தொகுதி தனிமங்கள்

[விடை: ) f − தொகுதி தனிமங்கள்]


4) பின்வரும் வாய்ப்புகளில் கொடுக்கப்பட்ட வரிசைகளுக்கு அவற்றிற்கு எதிராக குறிப்பிடப்பட்டுள்ள பண்பினைப் பொருத்து சரியாக அமைந்திருக்காத வரிசை இடம்பெற்றுள்ள வாய்ப்பு எது? (NEET 2016 Phase I)

) I < Br < Cl < F (எலக்ட்ரான் நாட்டம் அதிகரிக்கும்)

) Li < Na < K < Rb (உலோக ஆரம் அதிகரிக்கும்)

) Al3+ < Mg2+ < Na+ < F- (அயனி ஆரம் அதிகரிக்கும்)

) B < C < O < N (முதல் அயனியாக்கும் ஆற்றல் அதிகரிக்கும்)

[விடை: ) I < Br < Cl < F (எலக்ட்ரான் நாட்டம் அதிகரிக்கும்)] 


5) பின்வரும் தனிமங்களுள் அதிக எலக்ட்ரான் கவர்தன்மை கொண்ட தனிமம் எது?

) குளோரின்

) நைட்ரஜன்

) சீசியம்

) புளூரின்

[விடை: ) புளூரின்]


6) ஒரு தனிமத்தினுடைய அடுத்தடுத்த அயனியாக்கும் ஆற்றல் மதிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன (kJ mol-1)


இத்தனிமானது

) பாஸ்பரஸ் 

) சோடியம் 

) அலுமினியம் 

) சிலிகான்

[விடை: ) அலுமினியம்]


7) மூன்றாம் வரிசையினுடைய முதல் அயனியாக்கும் ஆற்றலின் வரிசை

) Na > Al > Mg > Si > P

) Na < Al < Mg < Si < P

) Mg > Na > Si > P > Al

) Na < Al < Mg < P < Si

[விடை: ) Na < Al < Mg < Si < P ]


8) தவறான கூற்றை கண்டறிக

) ஐசோ எலக்ட்ரானிக் உறுப்புகளுள், குறைவான நேர்மின்சுமையைப் பெற்றுள்ள நேர்மின் அயனி, குறைவான அயனி ஆரத்தினை பெறும்.

) ஐசோ எலக்ட்ரானிக் உறுப்புகளுள், அதிகமான எதிர்மின்சுமையைப் பெற்றுள்ள எதிர்மின் அயனி, அதிகமான அயனி ஆரத்தினை பெறும்.

) தனிம வரிசை அட்டவணையில் முதல் தொகுதியில் மேலிருந்து கீழாக வரும்போது தனிமங்களின் அணு ஆரம் அதிகரிக்கின்றது.

) தனிம வரிசை அட்டவணையின் இரண்டாம் வரிசையில் இடமிருந்து வலமாக செல்லும் போது அணு ஆரம் குறைகிறது.

[விடை: ) ஐசோ எலக்ட்ரானிக் உறுப்புகளுள், குறைவான நேர்மின்சுமையைப் பெற்றுள்ள நேர்மின் அயனி, குறைவான அயனி ஆரத்தினை பெறும்.]


9) பின்வரும் வகைப்பாடுகளில் குறைவான எலக்ட்ரான் நாட்டத்திலிருந்து அதிகமான எலக்ட்ரான் நாட்டத்தினை குறிப்பிடும் வரிசை எது?

) Al < O < C < Ca < F

) Al < Ca < O < C < F

) C < F < O < Al < Ca

) Ca < Al < C < O < F

[விடை: ) Ca < Al < C < O < F ]


10) 9, 17, 35 மற்றும் 53 ஆகியவற்றை முறையே அணு எண்களாக பெற்றுள்ள தனிமங்களான F, Cl, Br மற்றும் I ஆகியவற்றின் எதிர் குறியுடன் கூடிய எலக்ட்ரான் நாட்ட மதிப்புகளின் வரிசை

) I > Br > Cl > F

) F > Cl > Br > I

) Cl > F > Br > I

) Br > I > Cl > F

[விடை: ) Cl > F > Br > I]


11) பின்வரும் தனிமங்களுள் குறைவான எலக்ட்ரான் கவர்தன்மை கொண்ட தனிமம் எது?

) புரோமின்

) குளோரின்

) அயோடின்

) ஹைட்ரஜன்

[விடை: ) ஹைட்ரஜன்]


12) நேர் குறி எலக்ட்ரான் நாட்ட மதிப்பினை பெற்றுள்ளத் தனிமம்.

) ஹைட்ரஜன்

) சோடியம்

) ஆர்கான்

) புளூரின்

[விடை: ) ஆர்கான்]


13) 4, 8, 7 மற்றும் 12 முறையே அணு எண்ணாக பெற்ற தனிமங்கள் X, Y, Z மற்றும் Z ஆகியவைகளின் எலக்ட்ரான்கவர் தன்மை மதிப்புகள் குறையும் சரியான வரிசை

) Y > Z > X > A

) Z > A > Y > X

) X > Y > Z > A

) X > Y > A > Z

[விடை: ) Y > Z > X > A ]


14) கூற்று: கண்டுபிடிக்கப்பட்டுள்ள அனைத்து தனிமங்களுள் ஹீலியம் அதிக அயனியாக்கும் ஆற்றல் மதிப்பினை பெற்றுள்ளது.

காரணம்: கண்டுபிடிக்கப்பட்டுள்ள அனைத்து தனிமங்களுள் ஹீலியம் அதிக எலக்ட்ரான் நாட்ட மதிப்பினை பெற்றுள்ளது.

) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரியானது, மேலும் காரணமானது கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்.

) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரியானது, ஆனால் காரணமானது கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.

) கூற்று சரியானது ஆனால் காரணம் தவறானது.

) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் தவறானது.

[விடை: ) கூற்று சரியானது ஆனால் காரணம் தவறானது. ]


15. முதல் மற்றும் இரண்டாம் அயனியாக்கும் ஆற்றல் மதிப்புகளுள் அதிக வேறுபாடு கொண்ட அணுவின் எலக்ட்ரான் அமைப்பு

) 1s2, 2s2, 2p6, 3s1

) 1s2, 2s2, 2p6, 3s2

) 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1

) 1s2, 2s2, 2p6, 3s2, 3p1

[விடை: ) 1s2, 2s2, 2p6, 3s1]


16. பின்வரும் தனிமங்களுள் இரண்டாவதாக அதிக எலக்ட்ரான் கவர்தன்மை கொண்ட தனிமம் எது?

) குளோரின்

) புளூரின் 

) ஆக்ஸிஜன்

) சல்பர்

[விடை: ) ஆக்ஸிஜன்]


17. Mg-ன் IE1 மற்றும் IE2 முறையே 179 மற்றும் 348 kcal mol-1 ஆகும். Mg Mg2+ + 2e- என்ற வினைக்கு தேவைப்படும் ஆற்றல்

) +169 kcal mol−1

) -169 kcal mol−1

) +527 kcal mol−1

) -527 kcal mol−1

[விடை: ) +527 Kcal Mol−1]


18. கூடுகளின் திரைமறைத்தல் விளைவின் சரியான வரிசை

) s > p > d > f

) s > p > f > d

) f > d > p > s

) f > p > s > d

[விடை: ) s > p > d > f]


19. பின்வரும் வரிசைகளுள் அயனி ஆரங்களின் சரியான வரிசை எது?

) H- > H+ > H

) Na+ > F- > O 2-

) F > O2- > Na+

) இவைகள் எதுவுமில்லை

[விடை: ) இவைகள் எதுவுமில்லை


20. Na, Mg மற்றும் Si ஆகியவைகளின் முதல் அயனியாக்கும் ஆற்றல் முறையே 496, 737 மற்றும் 786 kJ mol-1 ஆகும். Al-ன் அயனியாக்கும் ஆற்றல் பின்வரும் எந்த மதிப்பிற்கு அருகில் இருக்கும்.

) 760 kj mol−1

) 575 kj mol−1

) 801 kj mol−1

) 419 kj mol−1

[விடை: ) 575kJ mo1−1


21. வரிசையில் இடமிருந்து வலமாகவும், தொகுதியில் மேலிருந்து கீழாகவும் செல்லும்போது உலோகப் பண்புகளை பற்றிய கூற்றில் பின்வருவனவற்றுள் எது சரியானது?

) வரிசையில் குறைகிறது, தொகுதியில் அதிகரிக்கிறது.

) வரிசையில் அதிகரிக்கிறது, தொகுதியில் குறைகிறது.

) வரிசை மற்றும் தொகுதி ஆகிய இரண்டிலும் அதிகரிக்கிறது.

) வரிசை மற்றும் தொகுதி ஆகிய இரண்டிலும் குறைகிறது.

[விடை: ) வரிசையில் குறைகிறது தொகுதியில் அதிகரிக்கிறது.]


22. தனிம வரிசை அட்டவணையில் இடமிருந்து வலமாக செல்லும்போது எலக்ட்ரான் நாட்ட மதிப்பு எவ்வாறு மாறுபடுகிறது?

) பொதுவாக அதிகரிக்கின்றது

) பொதுவாக குறைகின்றது

) எவ்வித மாற்றமுமில்லை

) முதலில் அதிகரிக்கிறது பின்பு குறைகிறது

[விடை: ) பொதுவாக அதிகரிக்கின்றது.]


23. பின்வரும் தனிம ஜோடிகளுள் மூலைவிட்ட தொடர்பினை காட்டுவது எது?

) Be மற்றும் Mg

) Li மற்றும் Be

) Be மற்றும் B

) Be மற்றும் Al

[விடை: ) Be மற்றும் Al]

Tags : with Answers and Solution கேள்விகளுக்கான பதில்கள்.
11th Chemistry : UNIT 3 : Periodic Classification of Elements : Choose the best Answer: Chemistry Periodic Classification of Elements with Answers and Solution in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வேதியியல் : அலகு 3 : தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு : சரியான விடையினை தெரிவு செய்க - கேள்விகளுக்கான பதில்கள் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வேதியியல் : அலகு 3 : தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு