கேள்விகளுக்கான பதில்கள் - சரியான விடையினை தெரிவு செய்க | 11th Chemistry : UNIT 3 : Periodic Classification of Elements
மதிப்பீடு
I சரியான விடையினை தெரிவு செய்க
1. அணு எண் 222ஐ கொண்ட தனிமத்தின் IUPAC பெயர் என்னவாக இருக்கும்?
அ) bibibiium
ஆ) bididium
இ) didibium
ஈ) bibibium
[விடை: ஈ) bibibium]
2. A மற்றும் B ஆகிய தனிமங்களின் எலக்ட்ரான் அமைப்பு முறையே 1s2, 2s2, 2p6, 3s2 மற்றும் 1s2, 2s2, 2p6, 3s2, 3p5 ஆகும், இவ்விரு தனிமங்களுக்கிடையே தோன்றும் அயனி சேர்மத்தின் மூலக்கூறு வாய்பாடு.
அ) AB
ஆ) AB2
இ) A2B
ஈ) எதுவும் இல்லை
[விடை: ஆ) AB2 ]
3. வேறுபடுத்திக் காட்டும் எலக்ட்ரான், (differentiating electron) தனிமத்தின் வெளிக்கூட்டிற்கு முந்தைய ஒன்றுவிட்ட உள்கூட்டில் (anti penultimate shell) சென்று சேரும் தனிமங்களைக் கொண்டுள்ள தொகுதி.
அ) p-தொகுதி தனிமங்கள்
ஆ) d-தொகுதி தனிமங்கள்
இ) s-தொகுதி தனிமங்கள்
ஈ) f-தொகுதி தனிமங்கள்
[விடை: ஈ) f − தொகுதி தனிமங்கள்]
4) பின்வரும் வாய்ப்புகளில் கொடுக்கப்பட்ட வரிசைகளுக்கு அவற்றிற்கு எதிராக குறிப்பிடப்பட்டுள்ள பண்பினைப் பொருத்து சரியாக அமைந்திருக்காத வரிசை இடம்பெற்றுள்ள வாய்ப்பு எது? (NEET 2016 Phase I)
அ) I < Br < Cl < F (எலக்ட்ரான் நாட்டம் அதிகரிக்கும்)
ஆ) Li < Na < K < Rb (உலோக ஆரம் அதிகரிக்கும்)
இ) Al3+ < Mg2+ < Na+ < F- (அயனி ஆரம் அதிகரிக்கும்)
ஈ) B < C < O < N (முதல் அயனியாக்கும் ஆற்றல் அதிகரிக்கும்)
[விடை: அ) I < Br < Cl < F (எலக்ட்ரான் நாட்டம் அதிகரிக்கும்)]
5) பின்வரும் தனிமங்களுள் அதிக எலக்ட்ரான் கவர்தன்மை கொண்ட தனிமம் எது?
அ) குளோரின்
ஆ) நைட்ரஜன்
இ) சீசியம்
ஈ) புளூரின்
[விடை: ஈ) புளூரின்]
6) ஒரு தனிமத்தினுடைய அடுத்தடுத்த அயனியாக்கும் ஆற்றல் மதிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன (kJ mol-1)
இத்தனிமானது
அ) பாஸ்பரஸ்
ஆ) சோடியம்
இ) அலுமினியம்
ஈ) சிலிகான்
[விடை: இ) அலுமினியம்]
7) மூன்றாம் வரிசையினுடைய முதல் அயனியாக்கும் ஆற்றலின் வரிசை
அ) Na > Al > Mg > Si > P
ஆ) Na < Al < Mg < Si < P
இ) Mg > Na > Si > P > Al
ஈ) Na < Al < Mg < P < Si
[விடை: ஆ) Na < Al < Mg < Si < P ]
8) தவறான கூற்றை கண்டறிக
அ) ஐசோ எலக்ட்ரானிக் உறுப்புகளுள், குறைவான நேர்மின்சுமையைப் பெற்றுள்ள நேர்மின் அயனி, குறைவான அயனி ஆரத்தினை பெறும்.
ஆ) ஐசோ எலக்ட்ரானிக் உறுப்புகளுள், அதிகமான எதிர்மின்சுமையைப் பெற்றுள்ள எதிர்மின் அயனி, அதிகமான அயனி ஆரத்தினை பெறும்.
இ) தனிம வரிசை அட்டவணையில் முதல் தொகுதியில் மேலிருந்து கீழாக வரும்போது தனிமங்களின் அணு ஆரம் அதிகரிக்கின்றது.
ஈ) தனிம வரிசை அட்டவணையின் இரண்டாம் வரிசையில் இடமிருந்து வலமாக செல்லும் போது அணு ஆரம் குறைகிறது.
[விடை: அ) ஐசோ எலக்ட்ரானிக் உறுப்புகளுள், குறைவான நேர்மின்சுமையைப் பெற்றுள்ள நேர்மின் அயனி, குறைவான அயனி ஆரத்தினை பெறும்.]
9) பின்வரும் வகைப்பாடுகளில் குறைவான எலக்ட்ரான் நாட்டத்திலிருந்து அதிகமான எலக்ட்ரான் நாட்டத்தினை குறிப்பிடும் வரிசை எது?
அ) Al < O < C < Ca < F
ஆ) Al < Ca < O < C < F
இ) C < F < O < Al < Ca
ஈ) Ca < Al < C < O < F
[விடை: ஈ) Ca < Al < C < O < F ]
10) 9, 17, 35 மற்றும் 53 ஆகியவற்றை முறையே அணு எண்களாக பெற்றுள்ள தனிமங்களான F, Cl, Br மற்றும் I ஆகியவற்றின் எதிர் குறியுடன் கூடிய எலக்ட்ரான் நாட்ட மதிப்புகளின் வரிசை
அ) I > Br > Cl > F
ஆ) F > Cl > Br > I
இ) Cl > F > Br > I
ஈ) Br > I > Cl > F
[விடை: இ) Cl > F > Br > I]
11) பின்வரும் தனிமங்களுள் குறைவான எலக்ட்ரான் கவர்தன்மை கொண்ட தனிமம் எது?
அ) புரோமின்
ஆ) குளோரின்
இ) அயோடின்
ஈ) ஹைட்ரஜன்
[விடை: ஈ) ஹைட்ரஜன்]
12) நேர் குறி எலக்ட்ரான் நாட்ட மதிப்பினை பெற்றுள்ளத் தனிமம்.
அ) ஹைட்ரஜன்
ஆ) சோடியம்
இ) ஆர்கான்
ஈ) புளூரின்
[விடை: இ) ஆர்கான்]
13) 4, 8, 7 மற்றும் 12 ஐ முறையே அணு எண்ணாக பெற்ற தனிமங்கள் X, Y, Z மற்றும் Z ஆகியவைகளின் எலக்ட்ரான்கவர் தன்மை மதிப்புகள் குறையும் சரியான வரிசை
அ) Y > Z > X > A
ஆ) Z > A > Y > X
இ) X > Y > Z > A
ஈ) X > Y > A > Z
[விடை: அ) Y > Z > X > A ]
14) கூற்று: கண்டுபிடிக்கப்பட்டுள்ள அனைத்து தனிமங்களுள் ஹீலியம் அதிக அயனியாக்கும் ஆற்றல் மதிப்பினை பெற்றுள்ளது.
காரணம்: கண்டுபிடிக்கப்பட்டுள்ள அனைத்து தனிமங்களுள் ஹீலியம் அதிக எலக்ட்ரான் நாட்ட மதிப்பினை பெற்றுள்ளது.
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரியானது, மேலும் காரணமானது கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரியானது, ஆனால் காரணமானது கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரியானது ஆனால் காரணம் தவறானது.
ஈ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் தவறானது.
[விடை: இ) கூற்று சரியானது ஆனால் காரணம் தவறானது. ]
15. முதல் மற்றும் இரண்டாம் அயனியாக்கும் ஆற்றல் மதிப்புகளுள் அதிக வேறுபாடு கொண்ட அணுவின் எலக்ட்ரான் அமைப்பு
அ) 1s2, 2s2, 2p6, 3s1
ஆ) 1s2, 2s2, 2p6, 3s2
இ) 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1
ஈ) 1s2, 2s2, 2p6, 3s2, 3p1
[விடை: அ) 1s2, 2s2, 2p6, 3s1]
16. பின்வரும் தனிமங்களுள் இரண்டாவதாக அதிக எலக்ட்ரான் கவர்தன்மை கொண்ட தனிமம் எது?
அ) குளோரின்
ஆ) புளூரின்
இ) ஆக்ஸிஜன்
ஈ) சல்பர்
[விடை: இ) ஆக்ஸிஜன்]
17. Mg-ன் IE1 மற்றும் IE2 முறையே 179 மற்றும் 348 kcal mol-1 ஆகும். Mg → Mg2+ + 2e- என்ற வினைக்கு தேவைப்படும் ஆற்றல்
அ) +169 kcal mol−1
ஆ) -169 kcal mol−1
இ) +527 kcal mol−1
ஈ) -527 kcal mol−1
[விடை: இ) +527 Kcal Mol−1]
18. கூடுகளின் திரைமறைத்தல் விளைவின் சரியான வரிசை
அ) s > p > d > f
ஆ) s > p > f > d
இ) f > d > p > s
ஈ) f > p > s > d
[விடை: அ) s > p > d > f]
19. பின்வரும் வரிசைகளுள் அயனி ஆரங்களின் சரியான வரிசை எது?
அ) H- > H+ > H
ஆ) Na+ > F- > O 2-
இ) F > O2- > Na+
ஈ) இவைகள் எதுவுமில்லை
[விடை: ஈ) இவைகள் எதுவுமில்லை]
20. Na, Mg மற்றும் Si ஆகியவைகளின் முதல் அயனியாக்கும் ஆற்றல் முறையே 496, 737 மற்றும் 786 kJ mol-1 ஆகும். Al-ன் அயனியாக்கும் ஆற்றல் பின்வரும் எந்த மதிப்பிற்கு அருகில் இருக்கும்.
அ) 760 kj mol−1
ஆ) 575 kj mol−1
இ) 801 kj mol−1
ஈ) 419 kj mol−1
[விடை: ஆ) 575kJ mo1−1]
21. வரிசையில் இடமிருந்து வலமாகவும், தொகுதியில் மேலிருந்து கீழாகவும் செல்லும்போது உலோகப் பண்புகளை பற்றிய கூற்றில் பின்வருவனவற்றுள் எது சரியானது?
அ) வரிசையில் குறைகிறது, தொகுதியில் அதிகரிக்கிறது.
ஆ) வரிசையில் அதிகரிக்கிறது, தொகுதியில் குறைகிறது.
இ) வரிசை மற்றும் தொகுதி ஆகிய இரண்டிலும் அதிகரிக்கிறது.
ஈ) வரிசை மற்றும் தொகுதி ஆகிய இரண்டிலும் குறைகிறது.
[விடை: அ) வரிசையில் குறைகிறது தொகுதியில் அதிகரிக்கிறது.]
22. தனிம வரிசை அட்டவணையில் இடமிருந்து வலமாக செல்லும்போது எலக்ட்ரான் நாட்ட மதிப்பு எவ்வாறு மாறுபடுகிறது?
அ) பொதுவாக அதிகரிக்கின்றது
ஆ) பொதுவாக குறைகின்றது
இ) எவ்வித மாற்றமுமில்லை
ஈ) முதலில் அதிகரிக்கிறது பின்பு குறைகிறது
[விடை: அ) பொதுவாக அதிகரிக்கின்றது.]
23. பின்வரும் தனிம ஜோடிகளுள் மூலைவிட்ட தொடர்பினை காட்டுவது எது?
அ) Be மற்றும் Mg
ஆ) Li மற்றும் Be
இ) Be மற்றும் B
ஈ) Be மற்றும் Al
[விடை: ஈ) Be மற்றும் Al]