அணு எண் 100 ஐ விட அதிகம் பெற்றுள்ள தனிமங்களுக்கு IUPAC முறையில் பெயரிடுதல்
புதிய தனிமங்கள் கண்டறிப்படும் போது, அத்தனிமத்தினை கண்டறிந்தவர், IUPAC வழிமுறைகளைப் பின்பற்றி ஒரு பெயரினைப் பரிந்துரைப்பார். அப்பரிந்துரையானது பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின்னர் IUPAC யால் அங்கீகரிக்கப்படும். இந்த இடைப்பட்டக்காலத்தில் புதிதாக கண்டறியப்ப்பட்ட தனிமமானது IUPAC விதிகளின் அடிப்படையில், தற்காலிக பெயரால் அழைக்கப்படும். தற்காலிக பெயரிடுதலுக்கான வழிமுறைகள் பின்வருமாறு
1. புதியதாகக் கண்டறியப்பட்ட தனிமத்தின் அணு எண்ணிலிருந்து நேரடியாக பெயருக்கான எண்சார் மூலம் (Numerical root) வருவிக்கப்படுகிறது.
அட்டவணை - 3.8: அணு எண் 100 ஐ விட அதிகம் பெற்றுள்ள தனிமங்களுக்கு IUPAC முறையில் பெயரிடுதலுக்கான குறியீடு
2. அணு எண்ணிற்கு இணையான எண் மூலங்கள் ஒன்றாக்கப்பட்டு, 'ium' பிற்சேர்க்கையாக எழுதப்படுகிறது.
3. 'enn' ஆனது 'nil' முன்னர் எழுதப்படும் போது, 'enn' ன் இறுதியில் உள்ள 'n' எழுதாமல் விடப்படுகிறது (enn + nil = enil). இதை போலவே 'ium' க்கு முன்னர் ‘bi' மற்றும் 'tri' ஆகியவை எழுதப்படும் போது அவற்றின் இறுதியில் உள்ள 'i' எழுதாமல் விடப்படுகிறது (bi + ium = bium; tri + ium= trium)
4. எண் சார் மூலங்களின் முதல் எழுத்துக்களிலிருந்து புதிய தனிமத்தின் குறியீடு உருவாக்கப்படுகிறது. இதனை கீழக்கண்டுள்ள அட்டவணை எடுத்துக்காட்டுடன் விளக்குகிறது.
அட்டவணை 3.9 அணு எண் 100 ஐ விட அதிகமுடைய தனிமங்களுக்கான பெயர்கள்
தன்மதிப்பீடு
2) அணு எண் 120 உடைய தனிமம் இந்நாள் வரை கண்டறியப்படவில்லை. இத்தனிமத்திற்கு IUPAC வழிமுறையின் அடிப்படையில் வழங்கப்படும் பெயர் மற்றும் குறியீடு என்னவாக இருக்கும்? இத்தனிமம் பெற்றிருக்க வாய்ப்புள்ள எலக்ட்ரான் அமைப்பினையும் நிர்ணயிக்கவும்.
தீர்வு
IUPAC விதிகளின் படி
1− Un; 2 − bi; 0 − Nil
எனவே IUPAC தற்காலிகப் பெயர் : Unbinilium
IUPAC தற்காலிகக் குறியீடு : ubn
எலக்ட்ரான் அமைப்பு : [Og] 8s2