Home | 12 ஆம் வகுப்பு | 12வது இயற்பியல் | தகவல்தொடர்பு அமைப்புகள் (COMMUNICATION SYSTEMS)

இயற்பியல் - தகவல்தொடர்பு அமைப்புகள் (COMMUNICATION SYSTEMS) | 12th Physics : UNIT 10b : Communication Systems

   Posted On :  03.12.2023 09:56 pm

12 வது இயற்பியல் : அலகு 10b : தகவல்தொடர்பு அமைப்புகள்

தகவல்தொடர்பு அமைப்புகள் (COMMUNICATION SYSTEMS)

இந்த உலகத்தில் உயிரினங்கள் தோன்றிய காலம் முதலே தகவல்தொடர்பு உள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியானது இடம் சார்ந்த குறைபாடுகளை திறம்பட நீக்கிவிட்டது.

தகவல்தொடர்பு அமைப்புகள் (COMMUNICATION SYSTEMS)

நல்ல தகவல்தொடர்பானது குழப்பத்திற்கும் தெளிவிற்கும் இடையே உள்ள பாலமாகும்.

                                                            - நாட்டர்னர்



 

கற்றலின் நோக்கங்கள்

இந்த அலகில் மாணவர்கள் அறிந்து கொள்ள இருப்பது

• பண்பேற்றத்தின் தேவை மற்றும் அதன் வகைகள்

• தகவல்தொடர்பு அமைப்பின் அடிப்படை உறுப்புகள்

• வெளியின் வழியே மின்காந்த அலைகளின் பரவல்

• செயற்கைக்கோள் தகவல்தொடர்பு • ஒளி இழைத் தகவல்தொடர்பு

• ரேடார்

• இணையம்

• உலகளாவிய நிலை அறியும் அமைப்பு (GPS)

• மீன் வளம், சுரங்கத்துறை மற்றும் விவசாயத்துறையில் தகவல்தொடர்பு தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள்

அறிமுகம்

இந்த உலகத்தில் உயிரினங்கள் தோன்றிய காலம் முதலே தகவல்தொடர்பு உள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியானது இடம் சார்ந்த குறைபாடுகளை திறம்பட நீக்கிவிட்டது. இந்த புவியில் எந்த இடத்தில் உள்ள ஒருவரிடமிருந்தும் மற்றொருவருக்கு தகவலைப் பரிமாறிக் கொள்ளலாம். சிறந்த அறிவியல் அறிஞர்களான ஜே.சி.போஸ், ஜி. மார்க்கோனி மற்றும் அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் ஆகியோரால் தகவல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சியில் இருந்து தகவல் தொடர்பானது அசுர வளர்ச்சியைக் கண்டுள்ளது. தகவல் தொடர்பு தொழிலானது பெரிய அளவிலானது மற்றும் தந்தி (1844), தொலைபேசி (1876), மற்றும் வானொலி (1887) ஆகியவற்றின் வழியே நூற்றாண்டுகளுக்கு முன்பே தகவல்தொடர்பு தொடங்கப்பட்டதால் மிகவும் பழமையானதும் ஆகும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடு மற்றும் இறுதியில் மேற்கொள்ளப்பட்ட தீவிர ஆராய்ச்சியானது குறுகிய காலத்தில் நெடுந்தொலைவு பரப்புகையின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. எனினும், இருபதாம் நூற்றாண்டானது வேகம் மற்றும் பாதுகாப்பான தரவு மாற்றத்தின் தேவையை நிறைவு செய்யும் வகையில் தகவல்தொடர்பு அதீத வளர்ச்சியை கண்டது. உலகத்தின் ஒவ்வொரு பகுதியும் உலகளாவிய நிலை அறியும் அமைப்பு (GPS), செயற்கைக்கோள், செல்லிடப்பேசி மற்றும் ஒளி இழை தகவல்தொடர்புஆகியவற்றின் வருகையால் குறிப்பிடத்தக்க நன்மைகளை அடைந்தன. இந்த அலகில் எலக்ட்ரானிய தகவல் தொடர்பின் அடிப்படைக்கருத்துகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகளைக் காணலாம்.

Tags : Physics இயற்பியல்.
12th Physics : UNIT 10b : Communication Systems : Communication Systems Physics in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது இயற்பியல் : அலகு 10b : தகவல்தொடர்பு அமைப்புகள் : தகவல்தொடர்பு அமைப்புகள் (COMMUNICATION SYSTEMS) - இயற்பியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது இயற்பியல் : அலகு 10b : தகவல்தொடர்பு அமைப்புகள்