Home | 12 ஆம் வகுப்பு | 12வது இயற்பியல் | செல்பேசி தகவல்தொடர்பு

பயன்பாடுகள் - செல்பேசி தகவல்தொடர்பு | 12th Physics : UNIT 10b : Communication Systems

   Posted On :  03.12.2023 10:03 pm

12 வது இயற்பியல் : அலகு 10b : தகவல்தொடர்பு அமைப்புகள்

செல்பேசி தகவல்தொடர்பு

செல்பேசி தகவல் தொடர்பானது கம்பிகள் அல்லது கம்பிவடங்கள் போன்ற எந்த இணைப்புக்களும் இன்றி வெவ்வேறு இடங்களில் உள்ளவர்களுடன் தொடர்பு கொள்ள உதவுகிறது.

செல்பேசி தகவல்தொடர்பு

செல்பேசி தகவல் தொடர்பானது கம்பிகள் அல்லது கம்பிவடங்கள் போன்ற எந்த இணைப்புக்களும் இன்றி வெவ்வேறு இடங்களில் உள்ளவர்களுடன் தொடர்பு கொள்ள உதவுகிறது. அதிகமான பரப்பிற்கு இணைப்பு இன்றியே பரப்புகையை அனுமதிக்கிறது. வீடு, அலுவலகம் போன்ற குறிப்பிட்ட இடத்தில் இருந்து மட்டுமல்லாமல், எந்த இடத்திலிருந்தும் பிறருடன் தொடர்பு கொள்ள வழிசெய்கிறது. தொலைதூர இடங்களுக்கும் தகவல்தொடர்பு வசதியை ஏற்படுத்துகிறது (படம் 10.9).


படம் 10.9 செல்பேசி தகவல் தொடர்பு

இது இடம்பெயரும் (roaming) வசதியை அளிக்கிறது. அதாவது தகவல் தொடர்பு முறிவு இன்றி, பயனாளர் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகரலாம். இந்தத் தகவல் தொடர்பு வலை அமைப்பை நிறுவுவதற்கு மற்றும் பராமரிப்பதற்கு ஆகும் செலவு குறைவானதாகும். 


பயன்பாடுகள்

i) இது தனிப்பட்ட தகவல்தொடர்புக்கு பயன்படுகிறது. மற்றும் செல்பேசிகளுக்கு உயர் வேகத்தில் குரல் மற்றும் தரவு இணைப்பை வழங்குகிறது.

ii) உலகம் முழுவதும் ஒரு சில வினாடிக்குள் செய்திகளைப் பரப்பமுடியும். 

iii) இணையத்தின் வழியே பொருட்களைப் பயன்படுத்தும் (Internet of Things, IoT) முறையில், ஒரு சாதனத்தின் மூலம் பல்வேறு சாதனங்களைக் கட்டுப்படுத்துவது சாத்தியமாகிறது. எடுத்துக்காட்டு: செல்பேசியைப் பயன்படுத்தி, வீட்டு உபயோகப்பொருட்கள் 

iv) இது கல்வித்துறையில் நவீன வசதிகளுடன் கூடிய வகுப்பறைகள், இணையதளத்தில் பாடம் தொடர்பான குறிப்புகள் கிடைப்பது, மாணவர்களின்  செயல்பாடுகளை கவனித்தல் ஆகியவற்றில் பயன்படுகிறது.

 

உங்களுக்குத் தெரியுமா?

சமீப காலமாக, செல்பேசி  தகவல்தொடர்பு தொழில் நுட்பமானது 2G, 3G, 4G, 5G, WiMAX, Wibro, EDGE, GPRS மற்றும் இது போன்றவை என பல்வேறு கட்டங்களைக் கடந்து வந்துள்ளது. இது தகவல்தொடர்பு வேகத்தையும், செயல்பாட்டு நெடுக்கத்தையும் அதிகரிக்க உதவுகிறது. நம்பகமான மற்றும் பாதுகாப்பான இணைப்புகளால் இணைப்பு தொடர்பான சிக்கல்கள் குறைக்கப்பட்டுள்ளன. GPS (உலகளாவிய நிலையறியும் அமைப்பு) மற்றும் GSM (செல்பேசி தகவல் தொடர்பிற்கான உலகளாவியமுறை) ஆகிய தொழில்நுட்பங்கள், செல்பேசி தகவல் தொடர்பில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. வலையமைப்பின் பட்டை அகலத்தைப் பயன்படுத்துதல், வலையமைப்புகளைப் பகிர்ந்து கொள்ளுதல், பிழை கண்டறிதல் ஆகிய செயல்களை இது அதிகரிக்கின்றது. இலக்கமுறை மாறுதல் (Digitalswitching), TDMA, CDMA போன்ற பல தகவல் தொடர்பு வகைகளின் செயல்பாட்டை எளிமையாக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

Tags : Applications பயன்பாடுகள்.
12th Physics : UNIT 10b : Communication Systems : Mobile Communication Applications in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது இயற்பியல் : அலகு 10b : தகவல்தொடர்பு அமைப்புகள் : செல்பேசி தகவல்தொடர்பு - பயன்பாடுகள் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது இயற்பியல் : அலகு 10b : தகவல்தொடர்பு அமைப்புகள்