Home | 12 ஆம் வகுப்பு | 12வது இயற்பியல் | மின்காந்த அலைகளின் பரவல்

தகவல்தொடர்பு அமைப்புகள் | இயற்பியல் - மின்காந்த அலைகளின் பரவல் | 12th Physics : UNIT 10b : Communication Systems

   Posted On :  03.12.2023 10:01 pm

12 வது இயற்பியல் : அலகு 10b : தகவல்தொடர்பு அமைப்புகள்

மின்காந்த அலைகளின் பரவல்

தகவல்களைக் கொண்ட சைகையானது ஊர்தி அலையுடன் (ரேடியோ அலை) பண்பேற்றப்பட்டு ஒரு விண்ண லைக்கம்பியினால் பரப்பப்படுகிறது.

மின்காந்த அலைகளின் பரவல்

தகவல்களைக் கொண்ட சைகையானது ஊர்தி அலையுடன் (ரேடியோ அலை) பண்பேற்றப்பட்டு ஒரு விண்ண லைக்கம்பியினால் பரப்பப்படுகிறது. அது வெளியில் பயணம் செய்து, மறுமுனையில் ஏற்கும் விண்ண லைக்கம்பியால் ஏற்கப்படுகிறது. 2 kHz முதல் 400 GHz வரை அதிர்வெண் உள்ள அலைகள் கம்பியில்லா தகவல் தொடர்பின் மூலமாக பரப்பப்படுகின்றன. பரப்பியில் இருந்து ஏற்பிக்கு  பயணிக்கும் போது, மின்காந்த அலையின் வலிமை குறைந்து கொண்டே இருக்கும். பரப்பியினால் பரப்பப்படும் மின்காந்த அலை அதன் அதிர்வெண் நெடுக்கத்திற்கு ஏற்றாற்போல் மூன்று மாறுபட்ட வகையில் பயணம் செய்கிறது.

* தரை அலைப் பரவல் (அல்லது) மேற்பரப்பு அலைப் பரவல் (ஏறத்தாழ 2 kHz முதல் 2 MHz)

* வான் அலைப் பரவல் (அல்லது) அயனி மண்டலப் பரவல் (ஏறத்தாழ 3 MHz முதல் 30 MHz)

* வெளி அலைப் பரவல் (ஏறத்தாழ 30 MHz முதல் 400 GHz)

Tags : Communication Systems | Physics தகவல்தொடர்பு அமைப்புகள் | இயற்பியல்.
12th Physics : UNIT 10b : Communication Systems : Propagation of Electromagnetic Waves Communication Systems | Physics in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது இயற்பியல் : அலகு 10b : தகவல்தொடர்பு அமைப்புகள் : மின்காந்த அலைகளின் பரவல் - தகவல்தொடர்பு அமைப்புகள் | இயற்பியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது இயற்பியல் : அலகு 10b : தகவல்தொடர்பு அமைப்புகள்