உலகளாவிய நிலையறியும் அமைப்பு (GLOBAL
POSITIONING SYSTEM)
GPS என்ப து Global Positioning System - உலகளாவிய
நிலையறியும்அ மைப்பு - என்பதன் சுருக்கமாகும். இது வழி நடத்தும் செயற்கைக்கோள்களின்
உலகளாவிய அமைப்பு ஆகும். இதன்மூலம் புவிக்கு அருகிலோ அல்லது வேறு எந்த இடத்திலோ இருக்கும்
GPS ஏற்பிக்கு, புவிசார் அமைவிடம் மற்றும் காலம் தொடர்பான தகவல்களை வழங்குகிறது.
பல்வேறு செயற்கைக் கோள்களின் வலையமைப்பு உதவியுடன்
GPS செயல்படுகிறது (படம் 10.10). இந்த செயற்கைக்கோள்கள் ஒவ்வொன்றும் ரேடியோ அலைகள்
போன்ற ஒரு துல்லிய சைகையை ஒலிபரப்புகிறது. இருப்பிடம் குறித்த தரவை அளிக்கும் இந்த
சைகைகள், விண்ணலைக்கம்பியினால் பெறப்பட்டு, பிறகு GPS மென்பொருளால் தகவல்களாக மாற்றம்
செய்யப்படுகிறது. மென்பொருளானது குறிப்பிட்ட செயற்கைக்கோளை கண்டுணர்ந்து, அதன் இருப்பிடம்
மற்றும் ஒவ்வொரு செயற்கைக்கோளில் இருந்தும் சைகைகள் செய்ய
படம் 10.10 புவியைச் சுற்றி GPS செயற்கைக்கோள்களின்
திரள்
பிறகு, மென்பொருள் ஆனது ஒவ்வொரு செயற்கைக்
கோளில் இருந்தும் பெறும் தரவுகளை செயல்முறைப்படுத்தி, ஏற்பியின் இருப்பிடத்தைக் கணிக்கிறது.
பயன்பாடுகள்:
உலகளாவிய நிலையறியும் அமைப்பு பல துறைகளில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அவையாவன: இயங்கும் வாகன நிர்வாகம் (கார்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் பேருந்துகள் ஆகியவற்றின் தடம் பின்பற்றல்), வனவிலங்கு நிர்வாகம் (ஆபத்தான வனவிலங்குகளைக் கணக்கிடல்) மற்றும் பொறியியல் துறை (சுரங்கப்பாதைகள், பாலங்கள் ஆகியவற்றை உருவாக்குதல்) ஆகியவை ஆகும்.