பயன்பாடுகள் - இணையம் (INTERNET) | 12th Physics : UNIT 10b : Communication Systems
இணையம் (INTERNET)
இணையம் என்பது தகவல்தொடர்பு அமைப்பில் பன்முகத்தன்மை
கொண்ட கருவிகளுடன் வளர்ந்து வரும் ஒரு தொழில்நுட்பம் ஆகும். அது மக்களுடன் தொடர்பு
கொள்ள புதிய வழிமுறைகளை வழங்குகிறது. இணையம் என்பது இலட்சக்கணக்கான மக்களை கணினி வழியே
இணைக்கும், உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள மிகப்பெரும் கணினி வலை அமைப்பாகும். அது
வாழ்க்கையின் அனைத்து நடைமுறைகளிலும் ஏராளமான பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.
உங்களுக்குத் தெரியுமா?
இணையத்தில் உள்ள அனைத்து
தகவல்களையும் சேமிப்பதற்கு, உங்களுக்கு 1 பில்லியன் DVD அல்லது 200 மில்லியன் புளு-ரே
டிஸ்க்குகளுக்கு மேல் தேவைப்படும்.
பயன்பாடுகள்
:
i) தேடுபொறி
:
உலகளாவிய வலைத்தளங்களில் தகவல்களைத் தேடுவதற்குப் பயன்படும் இணையம் சார்ந்த சேவைக்
கருவியானது, தேடு பொறி எனப்படும்.
ii) தகவல்தொடர்பு: இ-மெயில்,
உடனடிச் செய்திச் சேவைகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம், லட்சக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து
தொடர்பு கொள்வதற்கு இணையம் உதவுகிறது.
iii)
மின்- வணிகம்: எலக்ட்ரானிய வலைத்தளம் மூலம் பொருட்களை வாங்குதல்,
விற்றல், சேவைகளைப் பெறுதல் மற்றும் நிதி பரிமாற்றம் ஆகிய செயல்பாடுகளில் இணையம் பயன்படுகிறது.