Home | 12 ஆம் வகுப்பு | 12வது இயற்பியல் | விண்ணலைக்கம்பியின் அளவு (ANTENNA SIZE)
   Posted On :  03.12.2023 10:01 pm

12 வது இயற்பியல் : அலகு 10b : தகவல்தொடர்பு அமைப்புகள்

விண்ணலைக்கம்பியின் அளவு (ANTENNA SIZE)

விண்ணலைக்கம்பியானது பரப்பும் முனை மற்றும் ஏற்பு முனை இரண்டிலும் பயன்படுத்தப்படுகிறது. விண்ணலைக்கம்பியின் உயரம் விவாதிக்கப்பட வேண்டிய ஒரு முக்கிய பண்பளவாகும். விண்ண லைக்கம்பியின் உயரமானது λ/4 இன் மடங்குகளாக இருக்க வேண்டும்.

விண்ணலைக்கம்பியின் அளவு (ANTENNA SIZE)

விண்ணலைக்கம்பியானது பரப்பும் முனை மற்றும் ஏற்பு முனை இரண்டிலும் பயன்படுத்தப்படுகிறது. விண்ணலைக்கம்பியின் உயரம் விவாதிக்கப்பட வேண்டிய ஒரு முக்கிய பண்பளவாகும். விண்ண லைக்கம்பியின் உயரமானது λ/4 இன் மடங்குகளாக இருக்க வேண்டும்.


இங்கு λ ஆனது அலைநீளம் (λ = c/v) c ஒளியின் திசைவேகம் மற்றும் V ஆனது பரப்பப்பட வேண்டிய சைகையின் அதிர்வெண் ஆகும்.


எடுத்துக்காட்டு:

இரு அடிக்கற்றை சைகைகளைக் கருதுவோம். ஒரு சைகை பண்பேற்றப்பட்டும், மற்றொன்று பண்பேற்றப்படாமலும் உள்ளது

அடிக்கற்றை சைகையின் அதிர்வெண் V = 10 kHz எனவும், பண்பேற்றப்பட்ட சைகையின் அதிர்வெண் v = 1 MHz எனவும் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

v= 10 kHz அதிர்வெண் கொண்ட சைகையைப் பரப்பத் தேவையான விண்ணலைக்கம்பியின் உயரம் வருமாறு:


v= 1 MHz அதிர்வெண் கொண்ட பண்பேற்றப் பட்ட சைகையை பரப்பத் தேவையான விண்ணலைக்கம்பியின் உயரமானது


சமன்பாடுகள் (10.2) மற்றும் (10.3) ஐ ஒப்பிடும் போது, நடைமுறையில் 75 m உயரமுள்ள விண்ணலைக்கம்பியை நிறுவுவது சாத்தியமாகும். ஆனால் 7.5 km உயரமுள்ள விண்ணலைக்கம்பி சாத்தியமற்றது. இது பண்பேற்றப்பட்ட சைகைகள் விண்ணலைக்கம்பியின் உயரத்தைக் குறைப் பதையும், நெடுந்தொலைவு பரப்புகைக்கு தேவை என்பதையும் தெளிவாக வெளிப்படுத்துகிறது.


12th Physics : UNIT 10b : Communication Systems : Antenna Size in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது இயற்பியல் : அலகு 10b : தகவல்தொடர்பு அமைப்புகள் : விண்ணலைக்கம்பியின் அளவு (ANTENNA SIZE) - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது இயற்பியல் : அலகு 10b : தகவல்தொடர்பு அமைப்புகள்