Home | 12 ஆம் வகுப்பு | 12வது இயற்பியல் | ஒளி இழைத் தகவல்தொடர்பு

பயன்பாடுகள், நன்மைகள், குறைபாடுகள் - ஒளி இழைத் தகவல்தொடர்பு | 12th Physics : UNIT 10b : Communication Systems

   Posted On :  03.12.2023 10:02 pm

12 வது இயற்பியல் : அலகு 10b : தகவல்தொடர்பு அமைப்புகள்

ஒளி இழைத் தகவல்தொடர்பு

ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ஒளி இழையின் வழியாக, ஒளித்துடிப்புகளின் மூலம் தகவல்களைப் பரப்பும் முறை ஒளி இழைத் தகவல்தொடர்பு எனப்படும். இது முழு அக எதிரொளிப்புத் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.

ஒளி இழைத் தகவல்தொடர்பு

ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ஒளி இழையின் வழியாக, ஒளித்துடிப்புகளின் மூலம் தகவல்களைப் பரப்பும் முறை ஒளி இழைத் தகவல்தொடர்பு எனப்படும். இது முழு அக எதிரொளிப்புத் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.

ஒளியானது மைக்ரோ அலை மற்றும் ரேடியோ அலைகளை விட மிக அதிக அதிர்வெண்ணைக் (400 THz முதல் 790 THz) கொண்டுள்ளது. சிலிக்கா கண்ணாடி அல்லது சிலிக்கன் டை ஆக்ஸைடால் ஒளி இழைகள் உருவாக்கப்படுகிறது, மேலும் இப்பொருள்கள் புவியில் அதிக அளவில் கிடைக்கிறது. தற்போது அதிக அகச்சிவப்பு அலைநீளம் மற்றும் சிறந்த பரப்புகைத் திறன் காரணமாக, சால்கோஜெனைடு கண்ணாடிகள் மற்றும் புளூரோஅலுமினேட் படிகப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன (படம் 10.8).


படம்: 10.8 ஒளி இழைகள்

ஒளி இழைகள் மின் கடத்தாப்பொருட்கள் என்பதால், ஒன்றிற்கு மேற்பட்ட அலைவரிசைகள் தேவைப்படும் இடங்கள், மின் மற்றும் மின்காந்த இடையூறுகளைத் தவிர்க்க வேண்டிய இடங்கள் ஆகியவற்றில் இவை பயன்படுத்தப் படுகின்றன.


பயன்பாடுகள்

ஒளி இழை அமைப்பு பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. அவை சர்வதேச தகவல்தொடர்பு, நகரங்கள் இடையே தகவல்தொடர்பு, தரவு இணைப்புகள், ஆலை மற்றும் போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் இராணுவப் பயன்பாடுகள் ஆகியவை ஆகும்.


நன்மைகள்

i) ஒளி இழைகள் மிகவும் மெலிதானது. தாமிர வடங்களை விட குறைவான எடை கொண்டவை.

ii) இந்த அமைப்பு மிக அதிக பட்டை அகலத்தைக் கொண்டுள்ளது. இதன் பொருள்: தகவல் சுமந்து செல்லும் திறன் அதிகம் என்பதாகும்.

iii) ஒளி இழை அமைப்பு மின் இடையூறுகளால் பாதிக்கப்படுவதில்லை .

iv) தாமிரவடங்களைவிட ஒளி இழைமலிவானது.


குறைபாடுகள்

i) தாமிரக்கம்பிகளுடன் ஒப்பிடும்போது ஒளி இழைவடங்கள் எளிதில் உடையக் கூடியவை.

ii) இதன் தொழில்நுட்பம் விலையுயர்ந்தது ஆகும்.

 

உங்களுக்குத்  தெரியுமா?

ஒளி இழை வடங்கள் வேறு எந்தவகை பரப்புகையைக் காட்டிலும் அதிவேக பரப்புகை வீதத்தை அளிக்கின்றன. இவை வீடுகளுக்கும், வணிக நிறுவனத்திற்கும் 1Gbps தரவு வேகத்தை அளிக்க இயலும். பல்வகை ஒளி இழைகள் (multi-mode fibre) ஆனது 10Mbps வேகத்தில் செயல்படுகின்றன. ஒளி இழைத் தகவல் தொடர்பில், சமீபகால வளர்ச்சிகள் 25 Gbps என்ற வீதத்தில் தரவு வேகத்தை தருகின்றன.

உங்களுக்குத்  தெரியுமா?

அட்லான்டிக் பெருங்கடலுக்குக்  குறுக்கே, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா இடையேயான பெரும் பாலான தொலைத்தொடர்பு வடங்கள், ஒளி இழைகளே ஆகும்.

Tags : Applications, Merits, Demerits பயன்பாடுகள், நன்மைகள், குறைபாடுகள்.
12th Physics : UNIT 10b : Communication Systems : Fibre Optic Communication Applications, Merits, Demerits in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது இயற்பியல் : அலகு 10b : தகவல்தொடர்பு அமைப்புகள் : ஒளி இழைத் தகவல்தொடர்பு - பயன்பாடுகள், நன்மைகள், குறைபாடுகள் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது இயற்பியல் : அலகு 10b : தகவல்தொடர்பு அமைப்புகள்