விவசாயம், மீன்வளம் மற்றும் சுரங்கம் ஆகிய துறைகளில்
தகவல்தொடர்புத் தொழில்நுட்பத்தின் பயன்பாடு
(i) விவசாயத்
துறை
தகவல்தொடர்பு தொழில்நுட்பத்தைப்
(Information and Communication Technology - ICT) விவசாயத்துறையில் பயன்படுத்தும்போது
உற்பத்தி அதிகரிக்கிறது, விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயருகிறது, விவசாயிகளுக்கு உள்ள
சவால்கள் மற்றும் இடையூறுகள் தீர்க்கப்படுகின்றன. மேலும்,
அ) உணவு உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் பண்ணை
நிர்வாகம் ஆகியவற்றில் அதிகளவில் பயன்படுகிறது.
ஆ) தண்ணீர், விதைகள் மற்றும் உரங்கள் ஆகியவற்றின்
மேம்பட்ட பயன்பாட்டிற்கு உதவுகிறது.
இ) ரோபோக்கள், வெப்பநிலை மற்றும் ஈரப்பதம்
உணர்விகள், வான்வழி படங்கள் மற்றும் GPS தொழில்நுட்பம் ஆகியவை உள்ளடக்கிய அதிநவீன தொழில்நுட்பங்களையும்
இங்கு பயன்படுத்தலாம்.
ஈ) புவிசார் தகவல் அமைப்புகள்
(GISGeographic Information Systems) 36015 ஒரு குறிப்பிட்ட தாவரத்தை பயிரிடுவதற்கு
தகுதியான இடத்தை முடிவு செய்வது என வேளாண்மைத்துறையில் விரிவாகப் பயன்படுகிறது.
(ii)
மீன்வளத் துறை
அ) செயற்கைக்கோள் கண்காணிக்கும் அமைப்பானது மீன்பிடிப்பு பகுதியை அடையாளம் காண உதவுகிறது.
ஆ) பார்கோடுகளை பயன்படுத்துவதன் மூலம் மீன்
பிடிக்கப்பட்ட தேதி மற்றும் நேரம், மீன் வகையின் பெயர், மீனின் தரம் ஆகியவற்றை அடையாளம்
காணமுடியும்.
(iii)
சுரங்கத்துறை
அ) சுரங்கத்துறையில், செயல்படுதிறன் அதிகரிப்பு,
தொலைதூர கண்காணிப்பு மற்றும் பேரிடர் நடைபெற்ற இடத்தை அறிதல் ஆகியவற்றில் ICT பயன்படுகிறது.
ஆ) சுரங்கத்தில் சிக்கிக்கொள்ளும் தொழிலாளர்களுக்கு
ஒலி-ஒளி எச்சரிக்கையை அளிக்கிறது.
இ) தொலைதூரத்தில் உள்ள சுரங்கப்பணியிடங்களை
இணைக்க உதவுகிறது.