Home | 12 ஆம் வகுப்பு | 12வது இயற்பியல் | பாடச்சுருக்கம், கருத்து வரைபடம்

தகவல்தொடர்பு அமைப்புகள் | இயற்பியல் - பாடச்சுருக்கம், கருத்து வரைபடம் | 12th Physics : UNIT 10b : Communication Systems

   Posted On :  03.12.2023 10:04 pm

12 வது இயற்பியல் : அலகு 10b : தகவல்தொடர்பு அமைப்புகள்

பாடச்சுருக்கம், கருத்து வரைபடம்

இயற்பியல் : தகவல்தொடர்பு அமைப்புகள்: தகவல்தொடர்பு அமைப்புகள்

பாடச்சுருக்கம்

* நீண்ட தொலைவுக்கு மின்காந்த அலைகளைப் பயன்படுத்தி ஒரு சைகையை பரப்பவும், ஏற்கவும் தேவையான அடிப்படை உறுப்புகள் வருமாறு: திறன் மாற்றி, பெருக்கி, ஊர்தி சைகை , பண்பேற்றி, திறன் பெருக்கி, பரப்புகை ஊடகம், பரப்பும் மற்றும் ஏற்கும் விண்ண லைக்கம்பி, பண்பிறக்கி, பகுப்பான்.

* நீண்ட தொலைவு பரப்புகைக்கு அடிக்கற்றை சைகை ஊர்தி அலையுடன் பண்பேற்றம் செய்யப்படுகிறது. அடிக்கற்றை சைகையின் கணநேர வீச்சிற்கு ஏற்ப ஊர்தி சைகையின் வீச்சு மாற்றப்பட்டால் அது வீச்சுப் பண்பேற்றம் எனப்படும்.

* அதிர்வெண் பண்பேற்றத்தில், அடிக்கற்றை சைகையின் கணநேர வீச்சிற்கு ஏற்றாற்போல் ஊர்தி சைகையின் அதிர்வெண் மாற்றப்படுகிறது.

* கட்டப் பண்பேற்றத்தில், அடிக்கற்றை சைகையின் கணநேர வீச்சானது ஊர்தி சைகையின் கட்டத்தை மாற்றுகிறது மற்றும் ஊர்தி அலையின் வீச்சு மற்றும் அதிர்வெண் மாறுவதில்லை.

* பரப்பும் மற்றும் ஏற்கும் விண்ண லைக்கம்பியின் உயரமானது λ/4 இன் மடங்குகளாக இருக்க வேண்டும்.

* பரப்பியினால் பரப்பப்பட்ட மின்காந்த அலைகள் ஏற்பியைச் சென்றடைய புவியின் தரையை தழுவிக்கொண்டு சென்றால், இந்தப் பரவல் தரை அலைப் பரவல் எனப்படும்.

* விண்ணலைக்கம்பியிலிருந்து அதிக கோணத்தில் மேல்நோக்கி பரப்பப்பட்ட மின்காந்த அலைகள் மீண்டும் புவியை நோக்கி அயனிமண்டலத்தால் எதிரொளிக்கப்படுகின்றன. இந்த வகையான பரப்புகை வான் அலை பரவல் அல்லது அயனி மண்டலப் பரவல் எனப்படுகிறது.

* தகவல் சைகையை வெளியின் வழியே அனுப்பும் மற்றும் பெறும் செயல்முறை வெளி அலைப் பரவல் எனப்படும்.

* செயற்கைக்கோள் தகவல் தொடர்பானது செயற்கைக்கோள் வழியாக பரப்பி மற்றும் ஏற்பி இடையே சைகையைப் பரிமாற்றும் தகவல்தொடர்பின் ஒரு வகையாகும்.

* ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ஒளி இழையின் வழியாக, ஒளித்துடிப்புகளின் மூலம் தகவல்களைப் பரப்பும் முறை ஒளி இழைத் தகவல்தொடர்பு எனப்படும்.

* ரேடார் (RADAR) என்பது RAdio Detection And Ranging என்ற சொற்றொடரின் சுருக்கமாகும். இது தகவல்தொடர்பு அமைப்புகளின் பயன்பாடுகளில் முக்கியமான ஒன்றாகும்.

* செல்பேசி தகவல்தொடர்பானது கம்பிகள் அல்லது கம்பிவடங்கள் போன்ற எந்த இணைப்புக்களும் இன்றி வெவ்வேறு இடங்களில் உள்ளவர்களுடன் தொடர்பு கொள்ள உதவுகிறது.

* GPS என்பது Global Positioning System - உலகளாவிய நிலையறியும் அமைப்பு - என்பதன் சுருக்கமாகும். இதன்மூலம் புவிக்கு அருகிலோ அல்லது வேறு எந்த இடத்திலோ இருக்கும் GPS ஏற்பிக்கு, புவிசார் அமைவிடம் மற்றும் காலம் தொடர்பான தகவல்களை வழங்குகிறது.

* தகவல்தொடர்பு தொழில்நுட்பம் ஆனது, விவசாயம், மீன்வளம் மற்றும் சுரங்கம் ஆகிய துறைகளில் விரிவாகப் பயன்படுகிறது.



Tags : Communication Systems | Physics தகவல்தொடர்பு அமைப்புகள் | இயற்பியல்.
12th Physics : UNIT 10b : Communication Systems : Summary, Concept Map Communication Systems | Physics in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது இயற்பியல் : அலகு 10b : தகவல்தொடர்பு அமைப்புகள் : பாடச்சுருக்கம், கருத்து வரைபடம் - தகவல்தொடர்பு அமைப்புகள் | இயற்பியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது இயற்பியல் : அலகு 10b : தகவல்தொடர்பு அமைப்புகள்