நன்மைகள்,வரம்புகள்,பண்பேற்றப்பட்ட அலைவடிவ சமிக்ஞைகள் - வீச்சுப் பண்பேற்றம் (AMPLITUDE MODULATION - AM ) | 12th Physics : UNIT 10b : Communication Systems
வீச்சுப் பண்பேற்றம் (AMPLITUDE MODULATION -
AM )
அடிக்கற்றை சைகையின் கணநேர வீச்சிற்கு ஏற்ப
ஊர்தி சைகையின் வீச்சு மாற்றப்பட்டால் அது வீச்சுப் பண்பேற்றம் எனப்படும். இங்கு ஊர்தி
சைகையின் அதிர்வெண் மற்றும் கட்டம் மாறாமல் உள்ளது. வீச்சுப் பண்பேற்றமானது வானொலி
மற்றும் தொலைக்காட்சி ஒலிபரப்பில் பயன்படுகிறது.
படம் 10.1(அ) இல் தகவல்களைச் சுமந்து செல்லும்
அடிக்கற்றை சைகை காட்டப்பட்டுள்ளது. படம் 10.1(ஆ) இல் உயர் அதிர்வெண் ஊர்தி சைகை மற்றும்
படம் 10.1(இ) இல் வீச்சுப் பண்பேற்றப்பட்ட சைகை ஆகியவை தரப்பட்டுள்ளன. அடிக்கற்றை சைகையின்
மின்னழுத்தத்திற்கு ஏற்ப, ஊர்தி அலையின் வீச்சு மாற்றப்படுவதைக் காணலாம்.
படம் 10.1 வீச்சுப் பண்பேற்றம் (அ) அடிக்கற்றை
சைகை (ஆ) ஊர்தி சைகை (இ) வீச்சுப் பண்பேற்றப்பட்ட சைகை
வீச்சுப்
பண்பேற்றத்தின் நன்மைகள்
i) எளிதான பரப்புகை மற்றும் ஏற்பு
ii) குறைவான பட்டை அகலத் தேவைகள்
iii) குறைந்த விலை
வீச்சுப் பண்பேற்றத்தின் வரம்புகள்
i) இரைச்சல் அளவு அதிகம்
ii) குறைந்த செயல்திறன்
iii) குறைவான செயல் நெடுக்கம்