Home | 12 ஆம் வகுப்பு | 12வது இயற்பியல் | சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக

தகவல்தொடர்பு அமைப்புகள் | இயற்பியல் - சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக | 12th Physics : UNIT 10b : Communication Systems

   Posted On :  04.12.2023 05:41 am

12 வது இயற்பியல் : அலகு 10b : தகவல்தொடர்பு அமைப்புகள்

சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக

12 வது இயற்பியல் : அலகு 10b : தகவல்தொடர்பு அமைப்புகள் : சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக, பல்வேறு வினாக்களுக்கான கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

அலகு 10 

எலக்ட்ரானியல் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகள் (ELECTRONICS AND COMMUNICATION)


I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக


1. ஒரு சிலிக்கான் டையோடின் மின்னழுத்த அரண் (தோராயமாக

a) 0.7V

b) 0.3V 

c) 2.0V

d) 2.2V

விடை: a) 0.7V


2. சிறிய அளவு ஆண்டிமனி (Sb) ஆனது, ஜெர்மானியம் படிகத்துடன் சேர்க்கும் போது

a) இது p-வகை குறைக்கடத்தியாக மாறுகிறது

b) ஆண்டிமனி ஒரு ஏற்பான் அணுவாக மாறுகிறது

c) குறைக்கடத்தியில் துளைகளை விட அதிகமான கட்டுறா எலக்ட்ரான்கள் இருக்கும்

d) அதன் மின்தடை அதிகரிக்கிறது

விடை: c) குறைக்கடத்தியில் துளைகளை விட அதிகமான கட்டுறா எலக்ட்ரான்கள் இருக்கும்


3. சார்பளிக்கப் படாத p-n சந்தியில், p-பகுதியில் உள்ள பெரும்பான்மை மின்னூட்ட ஊர்திகள் (அதாவது, துளைகள்) n-பகுதிக்கு விரவல் அடைவதற்கு காரணம்.

a) p-n சந்தியின் குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாடு

b) n-பகுதியில் உள்ளதை விட, p-பகுதியில் உள்ள அதிக துளை செறிவு

c) n-பகுதியில் உள்ள கட்டுறா எலக்ட்ரான்களின் கவர்ச்சி

d) மேலே உள்ள அனைத்தும்

விடை: b) n-பகுதியில் உள்ளதை விட, p-பகுதியில் உள்ள அதிக துளை செறிவு


4. ஓர் நேர் அரை அலைதிருத்தியில் திருத்தப்பட்ட மின்னழுத்தம் ஒரு பளுமின்தடைக்கு அளிக்கப்பட்டால், உள்ளீடு சைகை மாறுபாட்டின் எந்தப்பகுதியில் பளு மின்னோட்டம் பாயும்

a) 00 − 900 

b) 900 − 1800

c) 00 − 1800

d) 00 − 3600

விடை: c) 00 − 1800


5. செனார் டையோடின் முதன்மைப்பயன்பாடு எது

a) அலைதிருத்தி

b) பெருக்கி 

c) அலை இயற்றி 

d) மின்னழுத்த சீரமைப்பான்

விடை: d) மின்னழுத்த சீரமைப்பான்


6. சூரிய மின்கலன் இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது

a) விரவல்

b) மறு இணைப்பு 

c) ஒளி வோல்டா செயல்பாடு 

d) ஊர்தியின் பாய்வு

விடை: c) ஒளி வோல்டா செயல்பாடு


7. ஒளி உமிழ்வுடையோடில் ஒளி உமிழப்படக் காரணம் 

a) மின்னூட்ட ஊர்திகளின் மறுஇணைப்பு 

b) லென்சுகளின் செயல்பாட்டால் ஏற்படும் ஒளி எதிரொளிப்பு 

c) சந்தியின்மீது படும் ஒளியின் பெருக்கம் 

d) மிகப்பெரிய மின்னோட்ட கடத்தும் திறன் 

விடை: a) மின்னூட்ட ஊர்திகளின் மறுஇணைப்பு 


8. p-n சந்தியில் உள்ள மின்னழுத்த அரண் i) குறைக்கடத்திப் பொருளின் வகை ii) மாசூட்டலின் அளவு. iii) வெப்பநிலை ஆகியவற்றைப் பொருத்து அமையும். பின்வருவனவற்றில் எது சரியானது?

a) (i) மற்றும் (ii)

b) (ii) மட்டும்

c) (ii) மற்றும் (iii)

d) (i) (ii) மற்றும் (iii)

விடை: d) (i) (ii) மற்றும் (iii)


9. ஓர் அலை இயற்றியில் தொடர்ச்சியான அலைவுகள் ஏற்பட 

a) நேர்பின்னூட்டம் இருக்க வேண்டும் 

b) பின்னூட்ட மாறிலி ஒன்றாக இருக்க வேண்டும் 

c) கட்டமாற்றம் சுழி அல்லதுயாக இருக்க வேண்டும் 

d) மேற்கூறிய அனைத்தும்

விடை: d) மேற்கூறிய அனைத்தும்


10. ஒரு NOT கேட்டின் உள்ளீடு A = 1011 எனில், அதன் வெளியீடானது

a) 0100

b) 1000 

c) 1100

d) 0011

விடை : a) 0100 



11. பின்வருவனவற்றில் எனது முன்னோக்குச் சார்பில் உள்ள டையோடினைக் குறிக்கு ம்


விடை : (a) ஆனோடுக்கு அதிக மின்னழுத்தம் தேவை. எனவே a) சரியானது OV


12. பின்வரும் மின்சுற்று எந்த லாஜிக் கேட்டிற்குச் சமமானது.


a) AND கேட் 

b) OR கேட் 

c) NOR கேட் 

d) NOT கேட் 

விடை : c) NOR கேட் 



13. பின்வரும் மின்சுற்றின் வெளியீடு 1 ஆக இருக்கும்போது உள்ளீடு ABC ஆனது 


a) 101

b) 100 

c) 110

d) 010

விடை : a) 101



14. பண்பேற்றும் சைகையின் கணநேர வீச்சிற்கு ஏற்ப ஊர்தி அலையின் அதிர்வெண் மாற்றப்படுவது …………………….. எனப்படும்.

a) வீச்சுப் பண்பேற்றம்

b) அதிர்வெண் பண்பேற்றம் 

c) கட்டப் பண்பேற்றம்

d) துடிப்பு அகல பண்பேற்றம்

விடை : b) அதிர்வெண் பண்பேற்றம் 


15. 3MHz முதல் 30MHz வரையிலான அதிர்வெண் நெடுக்கம் பயன்படுவது.

a) தரை அலைப் பரவல்

b) வெளி அலைப் பரவல் 

c) வான் அலைப் பரவல்

d) செயற்கைக்கோள் தகவல்தொடர்பு

விடை : c) வான் அலைப் பரவல்

Tags : with Answers | Communication Systems | Physics தகவல்தொடர்பு அமைப்புகள் | இயற்பியல்.
12th Physics : UNIT 10b : Communication Systems : Multiple Choice Questions with Answers | Communication Systems | Physics in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது இயற்பியல் : அலகு 10b : தகவல்தொடர்பு அமைப்புகள் : சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக - தகவல்தொடர்பு அமைப்புகள் | இயற்பியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது இயற்பியல் : அலகு 10b : தகவல்தொடர்பு அமைப்புகள்