Home | 12 ஆம் வகுப்பு | 12வது இயற்பியல் | வெளி அலைப் பரவல் (Space wave propagation)

மின்காந்த அலைகளின் பரவல் - வெளி அலைப் பரவல் (Space wave propagation) | 12th Physics : UNIT 10b : Communication Systems

   Posted On :  03.12.2023 10:02 pm

12 வது இயற்பியல் : அலகு 10b : தகவல்தொடர்பு அமைப்புகள்

வெளி அலைப் பரவல் (Space wave propagation)

தகவல் சைகையை வெளியின் வழியே அனுப்பும் மற்றும் பெறும் செயல்முறை வெளி அலைப் பரவல் எனப்படும்

வெளி அலைப் பரவல் (Space wave propagation)

தகவல் சைகையை வெளியின் வழியே அனுப்பும் மற்றும் பெறும் செயல்முறை வெளி அலைப் பரவல் எனப்படும் (படம் 10.5 இ). 30 MHzக்கு மேல் மிக அதிகமான அதிர்வெண்களைக் கொண்ட மின்காந்த அலைகள் வெளி அலைகள் எனப்படும். இந்த அலைகள் பரப்பியிலிருந்து ஏற்பிக்கு நேர்க்கோட்டில் பயணம் செய்கிறது. எனவே இது நேர்க்கோட்டு பார்வை தகவல் தொடர்புக்கு (LOS) பயன்படுகிறது.


அதிக அதிர்வெண்களுக்கு, பரப்பப்பட்ட மற்றும் ஏற்கப்பட்ட சைகைகள் (நேரடி அலைகள்) புவியின் வளைபரப்பினால் பாதிப்படையாமல் இருப்பதற்கு பரப்பும் கோபுரங்கள் போதுமான உயரத்தில் இருக்க வேண்டும். அதனால் அவை குறைவான வலுவிழப்பு மற்றும் குறைவான சைகை வலிமை இழப்புடன் பயணிக்கின்றன. சில அலைகள் தரையில் எதிரொளிக்கப்பட்ட பிறகு ஏற்பியை அடைகின்றன.

தொலைக்காட்சி ஒளிபரப்பு , செயற்கைக்கோள் தகவல்தொடர்பு, மற்றும் ரேடார் போன்ற தகவல்தொடர்பு அமைப்புகள் வெளி அலை பரவலை அடிப்படையாகக் கொண்டுள்ளன.

சில நன்மைகள் காரணமாக, அதிக அதிர்வெண்கள் (மீ உயர் அதிர்வெண் பட்டை) கொண்ட மைக்ரோ அலைகள், ரேடியோ அலைகளுக்கு பதிலாகப் பயன்படுத்தப்படுகிறது. நன்மைகள்: அதிக பட்டை அகலம், உயர்வான தரவு விகிதங்கள், சிறப்பான திசை நெறிப்படுத்தும் திறன், சிறிய அளவான விண்ணலைக்கம்பி, குறைந்த திறன் நுகர்வு போன்றவை ஆகும்.

பரப்புகை நிகழும் நெடுக்கம் அல்லது தொலைவு (d) ஆனது விண்ண லைக்கம்பியின் உயரத்தை (h) சார்ந்துள்ளது. இதன் சமன்பாடு,


இங்கு R ஆனது புவியின் ஆரம் ஆகும். இதன் மதிப்பு R = 6400 km.


படம் 10.6 பரப்புகை நிகழும் தொலைவு

படம் 10.6 இல் பரப்புகை நிகழும் தொலைவு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.


எடுத்துக்காட்டு 10.1

ஒரு பரப்பும் விண்ண லைக்கம்பியின் உயரம் 40m மற்றும் ஏற்கும் விண்ண லைக்கம்பி 30m உயரம் உள்ளது. அவற்றிற்கிடையே நேர்க்கோட்டு பார்வை தகவல்தொடர்பிற்கான பெருமத்தொலைவு யாது? புவியின் ஆரம் 6.4x106 m.


தீர்வு:

பரப்பும் மற்றும் ஏற்கும் விண்ண லைக்கம்பிகளுக்கு இடையே உள்ள மொத்த தொலைவு d ஆனது தனித்தனி பரப்புகை நிகழும் தொலைவுகளின் கூடுதலுக்கு சமமாகும்.

d1 +d2

= √(2Rh­) + √(2Rh2)

= √2√(√h1 + h2)

= √[2 × 6.4 ×106] × ( √40 + √30 )

=16 ×102 √5 ×(6.32 + 5.48)

=42217m= 42.217 km

Tags : Propagation of Electromagnetic Waves மின்காந்த அலைகளின் பரவல்.
12th Physics : UNIT 10b : Communication Systems : Space Wave Propagation Propagation of Electromagnetic Waves in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது இயற்பியல் : அலகு 10b : தகவல்தொடர்பு அமைப்புகள் : வெளி அலைப் பரவல் (Space wave propagation) - மின்காந்த அலைகளின் பரவல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது இயற்பியல் : அலகு 10b : தகவல்தொடர்பு அமைப்புகள்