Home | 8 ஆம் வகுப்பு | 8வது அறிவியல் | மாணவர் செயல்பாடுகள்

தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல் | அலகு 22 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - மாணவர் செயல்பாடுகள் | 8th Science : Chapter 22 : Conservation of Plants and Animals

   Posted On :  31.07.2023 02:16 am

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 22 : தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல்

மாணவர் செயல்பாடுகள்

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 22 : தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல் : கேள்வி பதில்களுடன் மாணவர் செயல்பாடுகள், தீர்வு

செயல்பாடு 1

உங்கள் பகுதியிலுள்ள காடுகள் பற்றிய கூடுதல் தகவல்களைச் சேகரிக்கவும்.  அங்கு காணப்படும் தாவரம் மற்றும் விலங்கு சிற்றினங்கள் பற்றிய தகவலைப் பெறவும். நீங்கள் கண்டிராத தாவரங்கள் மற்றும் விலங்குகளின் படங்களைச் சேகரித்து ஒரு படத்தொகுப்பை உருவாக்கவும்.


செயல்பாடு 2

வகுப்பறையில் காடு வளர்ப்பு பற்றி விவாதித்து, உங்கள் பாடக் குறிப்புப் புத்தகத்தில் ஒரு சுருக்கமான அறிக்கையை எழுதவும்.


செயல்பாடு 3

இயற்கையைப் பாதுகாத்தல் தொடர்பான முக்கியமான தினங்களை அனுசரிக்கவும் மேலும், காடுகளைப் பாதுகாத்தலை வலியுறுத்த ஒரு ஊர்வலம் செல்லவும்.



செயல்பாடு 5

காடுகளில் காணப்படக்கூடிய தாவரங்கள் மற்றும் விலங்குகளின் படங்களைச் சேகரிக்கவும். அழியும் தருவாயிலுள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகளை குறிப்பாகக் காண்பிக்கும் வகையில் சுவரொட்டியைத் தயாரிக்கவும்.


செயல்பாடு 6

தமிழ்நாட்டிலுள்ள தேசியப்பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களைக் கண்டறியவும். அப்பகுதிகளுக்குச் சென்று அவற்றைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்கவும்.


சிப்கோ இயக்கம் முக்கியமாக ஒரு வனப் பாதுகாப்பு இயக்கமாகும். 'சிப்கோ' என்ற சொல்லுக்கு ஒட்டிக் கொள்வது' அல்லது 'கட்டிப் பிடிப்பது' என்று பொருள் இந்த இயக்கத்தின் நிறுவனர் சுந்தர்லால் பகுகுனா ஆவார். மரங்களைப் பாதுகாத்தல் மற்றும் காடுகள் அழிந்துவிடாமல் அவற்றைப் பராமரித்தல் போன்ற நோக்கங்களுடன் இது 1970ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.


கடுமையான சுற்றுச்சூழலிருந்து தப்பித்துக் கொள்ள பறவைகள் நீண்ட தூரம் பயணம் செய்வது இடம்பெயர்வு எனப்படும். சாதகமற்ற காலநிலையில் பல பறவைகள் மற்றும் விலங்குகள் நீண்ட தூரம் இடம் பெயர்கின்றன. சைபீரியாவில் நிலவும் கடுமையான சூழ்நிலைகளிலிருந்து தப்பித்து, சாதகமான சூழ்நிலை மற்றும் உணவைப் பெறுவதற்காக சைபீரிய கிரேன் பறவைகள் குளிர்காலத்தில் சைபீரியாவிலிருந்து இந்தியாவுக்கு இடம் பெயர்கின்றன. அவை ஒரு நாளில் சராசரியாக 200 மைல்கள் பயணிக்கின்றன.


அமேசான் காடு உலகின் மிகப் பெரிய மழைக்காடு ஆகும். இது பிரேசிலில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 60,00,000 சதுர கி.மீ. ஆகும். இது cO வாயுவை சமன்செய்வதன் மூலம் பூமியின் கால நிலையை நிலைப்படுத்தவும், புவி வெப்பமயமாதலைக் குறைக்கவும் உதவுகிறது, மேலும், உலகின் 20% ஆக்சிஜனை இது உற்பத்தி செய்கிறது. இங்கு சுமார் 390 பில்லியன் மரங்கள் உள்ளன. இது பூமியின் நுரையீரல் எனப்படுகிறது.


1977 ஆம் ஆண்டில் கென்யாவில் 'பச்சை வளைய இயக்கம்' என்ற அமைப்பை வாங்கரி மாதாய் நிறுவினார். இந்த இயக்கம் 51மில்லியனுக்கும் அதிகமான மரங்களை கென்யாவில் நட்டுள்ளது. 2004 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது.


ஏமன் பட்டாம்பூச்சி தமிழகத்தின் பட்டாம்பூச்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இனம் மாநில மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் 32 பட்டாம்பூச்சி இனங்களுள் இதுவும் ஒன்றாகும்.


ஒரு காலத்தில் டைனோசர், ஃபெரணிகள் மற்றும் சில ஜிம்னோஸ்பெர்ம்கள் பூமியில் பரவலாகக் காணப்பட்டன இடம் மற்றும் உணவுப் பற்றாக்குறை காரணமாகவோ அல்லது பருவநிலை மாற்றம் காரணமாகவோ அவை பூமியிலிருந்து மறைந்து போய்விட்டன.


நமது சுற்றுச்சூழலில் வேப்பமரம், குடைமரம், ஆலமரம் போன்ற உள்ளூர் மரங்களை நடுவது விலங்குகளுக்கு உதவியாக இருக்கும். பல பறவைகளும், விலங்குகளும் அவற்றை உறைவிடமாகக் கொள்கின்றன.

உலக வனவிலங்குகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 3ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது.

1759 ஆம் ஆண்டு வியன்னாவில் உள்ள சோஹன்பிரம் நகரில் நிறுவப்பட்ட மிருகக்காட்சி சாலையே மிகப் பழமையான மிருகக்காட்சி சாலையாகும். இந்தியாவில் முதல் மிருகக்காட்சி 1800 ஆம் ஆண்டு பரக்பூரில் நிறுவப்பட்டது.


அமெரிக்காவில் அமைந்திருக்கின்ற டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் முனைவர் க. சகிலாபானு எனும் அறிவியல் விஞ்ஞானி குரோமியம் உலோகத்தால் நீர் மாசுபாடு அடைவதன் காரணமாக உயிரினங்களில் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது என்றும், அது மனிதர்களின் நஞ்சுக்கொடியில் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை ஏற்படுத்துவதால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகின்றது என்றும் கண்டறிந்துள்ளார். இவர் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள புதுப்பட்டினம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார்.


இங்கிலாந்து நாட்டின் லண்டன் மாநகரின் தெருக்களில் காணப்பட்ட குதிரைகளைப் பராமரிப்பதற்காக ப்ளூ கிராஸ் நிறுவப்பட்டது. 1906 ஆம் ஆண்டு, மே 15 அன்று லண்டன் மாநகரின் விக்டோரியா எனும் இடத்தில் முதலாவது விலங்கு மருத்துவமனை திறக்கப்பட்டது.

Tags : Conservation of Plants and Animals | Chapter 22 | 8th Science தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல் | அலகு 22 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 22 : Conservation of Plants and Animals : Student Activities Conservation of Plants and Animals | Chapter 22 | 8th Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 22 : தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல் : மாணவர் செயல்பாடுகள் - தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல் | அலகு 22 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 22 : தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல்