தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல் | அலகு 22 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - காடு வளர்ப்பு | 8th Science : Chapter 22 : Conservation of Plants and Animals

   Posted On :  31.07.2023 01:14 am

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 22 : தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல்

காடு வளர்ப்பு

காடுகள் அழிக்கப்படுவதால் காலநிலை மிக மோசமான அளவு மாறி வருகிறது என்பதை நாம் அறிவோம். இதனால் பருவ மழை பெய்வதில்லை.

காடு வளர்ப்பு

காடுகள் அழிக்கப்படுவதால் காலநிலை மிக மோசமான அளவு மாறி வருகிறது என்பதை நாம் அறிவோம். இதனால் பருவ மழை பெய்வதில்லை. பல நகரங்கள் குடிநீர்த் தட்டுப்பாட்டை எதிர்கொள்கின்றன. மேலும், பல விளைநிலங்கள் தரிசாகி வருகின்றன. பூமியில் உயிரினங்கள் உயிர் வாழ நீர் தேவை. எனவே, நாம் காடுகளை வளர்க்கவேண்டியுள்ளது. காடு வளர்ப்பு என்பது

சமூக வனவியல் என்ற சொல் முதன்முதலில் 1976 ஆம் ஆண்டில் அப்போதைய தேசிய விவசாய ஆணையம் மற்றும் இந்திய அரசாங்கத்தால் அமலுக்கு வந்தது. சமூக மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கு உதவும் நோக்கத்துடன் காடுகளை நிர்வகித்தல் மற்றும் பாதுகாத்தல் மற்றும் தரிசு நிலங்களில் காடுகளை வளர்த்தல் ஆகியன இதன் நோக்கமாகும். ஏற்கனவே உள்ள காடுகளோடு சேர்த்து, புதிதான காடுகளை உருவாக்குவதும் இதன் நோக்கமாகும். 

காடுகளை உருவாக்குவதற்காக, ஒரு தரிசு நிலத்தில் மரங்களை நடக்கூடிய அல்லது விதைகளை விதைக்கும் செயல்முறையாகும். இயற்கையாகவே உள்ள காடுகளை, வளர்க்கவும் புதிய காடுகளை உருவாக்கவும் இது உதவுகிறது.


 

1. காடு வளர்ப்பின் முக்கியத்துவம்.

இதற்கு முன்பு இருந்திராத அளவிற்கு காலநிலையில் ஒரு பெரிய மாற்றத்தை உலகம் சந்தித்து வருகிறது. காலநிலையின் சமீபத்திய மாற்றங்கள் நம் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. நமது பூமியைப் பாதுகாக்க காடு வளர்ப்பு ஒரு சிறந்த தீர்வாக இருக்கும் காடு வளர்ப்பின் முக்கியத்துவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. .

•  காடு வளர்ப்பு மனிதர்களுக்கும் வாழிடம் மற்றும் உணவு ஆதாரத்தை அளிக்கிறது.

•  காடு வளர்ப்பு மூலம் நாம் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க முடியும். மரங்களை நடுவதால் நீராவியின் அளவு அதிகரித்து மழை பெய்கிறது.

• மரங்களை நடுவதன் மூலம் வளிமண்டலத்தில் கார்பன் டைஆக்க்ஷைன் அளவைக் குறைத்து காற்று மாசுபாடு, பசுமை இல்ல வாயுக்கள் மற்றும் புவி வெப்பமடைதல் ஆகியவற்றினால் ஏற்படும் விளைவுகளைக் கட்டுப்படுத்த முடியும்.

•  காடு வளர்ப்பு, நிலங்கள் தரிசாவதைத் தவிர்க்க உதவுகிறது.

•  தரிசு நிலங்களில் பலத்த காற்று வீசுவதன் மூலம் மண் அரிப்பு ஏற்படுகிறது. மழையின்போது மேல் மண் நீக்கப்படுகிறது. காடு வளர்ப்பு அதிகளவு மரங்களை  வளர்க்க உதவுகிறது, இதனால், மரங்கள் ஊட்டச்சத்துக்களுடன் மண்ணையும் இறுகப் பிடித்துக் கொள்கின்றன.

1977 ஆம் ஆண்டில் கென்யாவில் 'பச்சை வளைய இயக்கம்' என்ற அமைப்பை வாங்கரி மாதாய் நிறுவினார். இந்த இயக்கம் 51மில்லியனுக்கும் அதிகமான மரங்களை கென்யாவில் நட்டுள்ளது. 2004 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது.


•  காடுகளை உருவாக்குவதால் தீவனம், பழங்கள், விறகு மற்றும் பல்வேறு வளங்கள் நமக்குக் கிடைக்கின்றன.

•  ஒவ்வொரு தொழிற்சாலைக்கும் குறிப்பிட்ட வகை மரங்கள் தேவை. அத்தகைய குறிப்பிட்ட வகை மரங்களை வளர்க்க காடு வளர்ப்பு நமக்கு உதவுகிறது.


செயல்பாடு 2

வகுப்பறையில் காடு வளர்ப்பு பற்றி விவாதித்து, உங்கள் பாடக் குறிப்புப் புத்தகத்தில் ஒரு சுருக்கமான அறிக்கையை எழுதவும்.

Tags : Conservation of Plants and Animals | Chapter 22 | 8th Science தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல் | அலகு 22 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 22 : Conservation of Plants and Animals : Afforestation Conservation of Plants and Animals | Chapter 22 | 8th Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 22 : தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல் : காடு வளர்ப்பு - தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல் | அலகு 22 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 22 : தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல்