Home | 8 ஆம் வகுப்பு | 8வது அறிவியல் | சிவப்பு தரவு புத்தகம்

நன்மைகள், குறைகள் | தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல் | அலகு 22 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - சிவப்பு தரவு புத்தகம் | 8th Science : Chapter 22 : Conservation of Plants and Animals

   Posted On :  31.07.2023 01:26 am

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 22 : தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல்

சிவப்பு தரவு புத்தகம்

சிவப்பு தரவி புத்தகம் என்பது அரிதான மற்றும் அழியும் தருவாயிலுள்ள உயிரினங்களான விலங்குகள், தாவரங்கள் மற்றும் பூஞ்சைகளைப் பதிவு செய்வதற்கான கோப்பாகும் ஒரு மாநிலத்தின் நாட்டின் லைக்குள் காணப்படும்

சிவப்பு தரவு புத்தகம்

சிவப்பு தரவி புத்தகம் என்பது அரிதான மற்றும் அழியும் தருவாயிலுள்ள உயிரினங்களான விலங்குகள், தாவரங்கள் மற்றும் பூஞ்சைகளைப் பதிவு செய்வதற்கான கோப்பாகும் ஒரு மாநிலத்தின் நாட்டின் லைக்குள் காணப்படும் சில துணை சிற்றினங்களும் சிவப்பு தரவு புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரிதான மற்றும் அழியும் தருவாயிலுள்ள உயிரினங்களின் வாழ்விடங்கள் குறித்த ஆய்வுகள் மற்றும் கண்காணிப்புத் திட்டங்களுக்கு சிவப்பு தரவு புத்தகம் முக்கியமான தரவுகளை வழங்குகிறது. அழிந்துபோகும் நிலையில் உள்ள உயிரினங்களை அடையாளம் கண்டு அவற்றைப் பாதுகாப்பதற்காக இப்புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது.

சிவப்பு புத்தகத்தை 'இயற்கைப் பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியம்' என்ற அமைப்பு பராமரிக்கிறது. இது இயற்கைப் பாதுகாப்பு மற்றும் இயற்கை வளங்களின் நிலையான பயன்பாடு போன்றவற்றிற்காக பணியாற்றும் ஒரு சர்வதேச அமைப்பாகும். இதுவரை பூமியின் மீது வாழ்ந்த ஒவ்வொரு உயிரினங்களின் முழுமையான பதிவைப் பராமரிக்கும் நோக்கத்துடன் 1964ஆம் ஆண்டு இது நிறுவப்பட்டது. சிவப்பு தரவு புத்தகம் சிற்றினங்களை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்துகிறது, அவையாவன: அச்சுறுத்தப்படுபவை, அச்சுறுத்தப்படாதவை மற்றும் காரணம் தெரியாதவை. ஒரு சிற்றினத்தின் எண்ணிக்கை மற்றும் பரவல்  ஆகியவற்றோடு அது காலப்போக்கில் ஏன் அழிந்துபோனது என்ற தகவலும் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

சிவப்பு தரவு புத்தகத்தில் தகவல்கள் பல்வேறு வண்ணங்களில் தரப்பட்டுள்ளன. அழிந்துபோன உயிரினங்களுக்கு கருப்பு நிறமும், அழியும் தருவாயில் உள்ள உயிரினங்களுக்கு சிவப்பு நிறமும் கொடுக்கப்பட்டுள்ளது. பல சிற்றினங்கள் மற்றும் கிளைச் சிற்றினங்கள் அழிந்துபோகக் அபாயத்திற்கு ஏற்ப இத்தகவல்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. கீழே தரப்பட்டுள்ள படம் வண்ணக் குறியீட்டுத் தகவலை வழங்குகிறது.


IUCN இயற்கை பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியம்

WWF - உலக வனவிலங்கு நிதி

ZSI இந்திய விலங்கியல் ஆய்வு

BRP உயிர்க்கோள பாதுகாப்புத் திட்டம்

CPCB - மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்

 

1. சிவப்பு தரவு புத்தகத்தின் நன்மைகள்

• இது ஒரு குறிப்பிட்ட சிற்றினத்தின் எண்ணிக்கையை மதிப்பீடு செய்ய உதவுகிறது.

• இந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள தரவுகளைக் கொண்டு உலக அளவிலுள்ள சிற்றினங்களை மதிப்பீடு செய்ய முடியும்.

• உலகளவில் ஒரு சிற்றினம் அழிந்து போகக்கூடிய அபாயத்தை இந்தப் புத்தகத்தின் உதவியுடன் மதிப்பிடலாம்.

• அழியும் தருவாயிலுள்ள சிற்றினங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை செயல் படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வழங்குகிறது..

 

2 சிவப்பு தரவு புத்தகத்தின் குறைகள்

• சிவப்பு தரவு புத்தகத்தில் உள்ள தகவல்கள் முழுமையானவை இல்லை. அழிந்துபோன சிற்றினங்கள் பற்றிய தகவல்கள் புத்தகத்தில் புதுப்பிக்கப்படவில்லை.

• இப்புத்தகத்தில் உள்ள தரவின் ஆதாரங்கள் ஊகத்தின் அடிப்படையில் உள்ளதாகக் கருதப்படுகிறது.

• இந்தப்புத்தகம் விலங்குகள், தாவரங்கள் மற்றும் பிற உயிரினங்களைப் பற்றிய முழுமையான தகவல்களைக் கொண்டுள்ளது. ஆனால், நுண்ணுயிரிகள் பற்றிய தகவல்கள் எதுவும் இதில் இல்லை.

உலக வனவிலங்குகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 3ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது.

 

3. இந்தியாவின் சிவப்பு தரவு புத்தகம்

மிகப்பெரிய பல்வகைத் தன்மையுடையை இந்திய நாடு உலகின் நிலப்பரப்பில் 2.4% பரப்பளவை மட்டுமே கொண்டுள்ளது. ஆனால், உலகிலுள்ள பதிவு செய்யப்பட்டுள்ள சிற்றினங்களுள் 7.8% இங்கு காணப்படுகின்றன. சுமார் 45,000 க்கும் மேற்பட்ட தாவரங்கள் மற்றும் 91,000 வகையான விலங்குகள் இங்கு உள்ளன. நமது நாட்டின் மாறுப்பட்ட புவியியல் அமைப்பு மற்றும் காலநிலை காரணமாக, காடுகள், ஈரநிலங்கள், புல்வெளிகள், பாலைவனங்கள், கடலோர மற்றும் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகள் போன்ற பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள் இங்கு காணப்படுகின்றன. இவை அதிக பல்லுயிர் பெருக்கத்தைப் பராமரிப்பதோடு மனித நல்வாழ்வுக்கும் பங்காற்றுகின்றன. உலகளவில் அடையாளம் காணப்பட்டுள்ள 34 பல்வகைத் தன்மையுடைய இடங்களில் இமயமலை, மேற்குத் தொடர்ச்சிமலைகள், வடகிழக்கு இந்தியப் பகுதி மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆகியவை இந்தியாவில் காணப்படுகின்றன.

சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்று அமைச்சகத்தின் (MoEFCC) மூலம் 1969 ஆம் ஆண்டில் இந்தியா ஐ.யூ.சி.என் என்ற அமைப்பின் மாநில உறுப்பினரானது. ஐ.யூ.சி.என் அமைப்பின் இந்திய அலுவலகம் 2007ஆம் ஆண்டு புதுதில்லியில் நிறுவப்பட்டது. இந்திய துணைக் கண்டத்தில் காணப்படும் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் பாதுகாப்பு நிலையை இந்திய சிவப்பு தரவு புத்தகம் கொண்டுள்ளது. சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் பெயரில் இந்திய விலங்கியல் கணக்கெடுப்பு மற்றும் இந்திய தாவரவியல் கணக்கெடுப்பு ஆகிய அமைப்புகள் ஆய்வுகள் இந்தப் புத்தகத்திற்கான வழங்குகின்றன.


Tags : Advantages, Disadvantages | Conservation of Plants and Animals | Chapter 22 | 8th Science நன்மைகள், குறைகள் | தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல் | அலகு 22 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 22 : Conservation of Plants and Animals : Red Data Book Advantages, Disadvantages | Conservation of Plants and Animals | Chapter 22 | 8th Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 22 : தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல் : சிவப்பு தரவு புத்தகம் - நன்மைகள், குறைகள் | தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல் | அலகு 22 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 22 : தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல்