தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல் | அலகு 22 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - அழியும் தருவாயில் உள்ள உயிரினங்கள் | 8th Science : Chapter 22 : Conservation of Plants and Animals
அழியும் தருவாயில் உள்ள உயிரினங்கள்
நம் நாடு பல்வேறு வகையான சிற்றினங்கள், வளமிக்க தாவர சிற்றினங்கள்
மற்றும் விலங்கு சிற்றினங்களுக்கான வாழ்விடமாகும். தாவர சிற்றினம் என்பது ஒரு குறிப்பிட்ட
பகுதியிலுள்ள தாவரங்களையும், விலங்கு சிற்றினம் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியிலுள்ள
விலங்குகளையும் குறிக்கிறது. வங்கப் புலிகள், ஆசிய சிறுத்தை மற்றும் பல பறவைகள் இந்தியாவில்
காணப்படுகின்றன. ஆனால், சுற்றுச்சூழல் மாசுபாடு, காடு அழிப்பு, வாழ்விட இழப்பு, மனிதர்களின்
குறுக்கீடு மற்றும் விலங்குகளை வேட்டையாடுதல் போன்ற பல்வேறு காரணங்களால் பல விலங்கினங்கள்
அழிந்துவிட்டன. பல விலங்குகள் அழியும் தருவாயில் உள்ளன. பூமியின் மீதிருந்து முற்றிலுமாக
மறைந்துபோன உயிரினங்கள் அழிந்துபோன உயிரினங்கள் எனப்படுகின்றன. டைனோசர் மற்றும் டுடோ.
பூமியிலிருந்து
மறைந்து போய்விடக்கூடிய அபாயத்தில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகள்
அழியும் தருவாயில் உள்ள உயிரினங்கள் எனப்படுகின்றன. அவற்றுள் சில இனங்கள் மட்டுமே பூமியில்
எஞ்சியுள்ளன. விரைவில் அவையும் அழிந்து போகக்கூடும் என்பதை இது உணர்த்துகிறது. இந்தியாவில்
கிட்டத்தட்ட 132 வகையான தாவரங்கள் மற்றும் விலங்குகள் அழியும் தருவாயில் உள்ளன என்று
தெரியவந்துள்ளது. பனிச் சிறுத்தை, வங்கப் புலி, ஆசிய சிங்கம், ஊதா தவளை மற்றும் இந்திய
ராட்சத அணில் ஆகியவை இந்தியாவில் அழியும் தருவாயிலுள்ள சில விலங்குகளாகும்.
ஒவ்வொரு
ஆண்டும், மே 22ஆம் நாள் உலக உயிரிகளின் பன்முகத்தன்மை தினமாகக் கொண்டாடப்படுகிறது.
பன்முகத்தன்மை என்பது பல்வேறு தாவரங்கள், விலங்குகள், கடல்வாழ் உயிரினங்கள், நுண்ணுயிரிகள்,
பூச்சிகள், வாழ்விடங்கள், சுற்றுச்சூழல் அமைப்பு போன்றவற்றை விவரிக்கப் பயன்படும் சொல்,
இது நமது பூமியை மிகவும் தனித்துவமாகவும், வியக்கத்தக்கதாகவும்
காடுகள் அழிக்கப்படுவதால் பல பாசிகள், பூஞ்சைகள், பிரையோபைட்டுகள்,
பெர்ன்கள் மற்றும்சிம்னோஸ்பெர்ம்கள் மறைந்துவருகின்றன. சிற்றினத்துடனும் உணவுமற்றும்
வாழ்விடத்திற்காக அவற்றைச் சார்ந்து வாழும் விலங்குகளும், நுண்ணுயிரிகளும் அழிந்து
போகின்றன. பல விலங்குகள் ஆபத்தான நிலையில் உள்ளன. இதேபோல், அழிந்துபோகும் விளிம்பில்
உள்ள விலங்குகளின் பட்டியல் முடிவற்றது. இறால்கள், சிப்பிகள், நண்டுகள், ஆக்டோபஸ்,
கணவாய் மீன், வண்டுகள், தட்டான் பூச்சி, வெட்டுக் கிளிகள், மீன் மற்றும் தவளைகள் தங்கள்
தோல் வழியாக விஷ வாயுக்களை உறிஞ்சுவதால் இறந்து போகின்றன. வெட்டுக்கிளி இனம் ஏறக்குறைய
இந்தியாவிலிருந்து அழிந்து போய்விட்டது. கீழ்க்காணும் விலங்குகள் இந்நாட்களில் அரிதாகவே
காணப்படுகின்றன.
• ஊர்வன: சில பல்லிகள், ஆமைகள், முதலைகள், கங்கை நீர் முதலை.
பறவைகள்: வல்லூறு, கழுகு, பருந்து, ராஜாளிப் பறவை, மயில், புறா,
வாத்து.
• பாலூட்டிகள்: புலி, சிங்கம், கலைமான், புல்வாய் மான் போன்ற
மான், சிரு (திபெத்திய ஆடு), கஸ்தூரி மான், காண்டாமிருகம், யானை,நீலத் திமிங்கலம்,
பறக்கும் அணில்
செயல்பாடு 5
காடுகளில்
காணப்படக்கூடிய தாவரங்கள் மற்றும் விலங்குகளின் படங்களைச் சேகரிக்கவும். அழியும் தருவாயிலுள்ள
தாவரங்கள் மற்றும் விலங்குகளை குறிப்பாகக் காண்பிக்கும் வகையில் சுவரொட்டியைத் தயாரிக்கவும்.
1. சிற்றினங்கள்
அழியும் தருவாயில் உள்ளதைத் தீர்மானித்தல்
ஒரு குறிப்பிட்ட இனம் அழியும் தருவாயில் உள்ளதா, இல்லையா என்பது
பின்வருவனவற்றின் மூலம் தீர்மானிக்கப்படுகிறது.
• சிற்றினங்கள் காணப்படும் புவியியல் எல்லை குறைதல்.
• சிற்றினங்களின் மொத்த எண்ணிக்கை குறைவாக குறைதல் (அதாவது
50க்கும் இருத்தல்).
• சிற்றினங்களின் மொத்த எண்ணிக்கை குறைந்திருத்தல் அல்லது அடுத்த
10 ஆண்டுகளில் 80% க்கும் அதிகமாக குறையக்கூடிய நிலை.
• சிற்றினங்களின் மொத்த எண்ணிக்கை 250க்கும் குறைவாக இருந்து,
கடந்த மூன்று ஆண்டுகளில் 25%க்கும் அதிகமாக குறையக்கூடிய நிலை.
• வனப்பகுதிகளில் அவை அழிவதற்கான அதிகபட்ச வாய்ப்பு இருத்தல்.
ஏமன்
பட்டாம்பூச்சி தமிழகத்தின் பட்டாம்பூச்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இனம் மாநில
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும்
32 பட்டாம்பூச்சி இனங்களுள் இதுவும் ஒன்றாகும்.
2. சிற்றினங்கள்
அழியும் தருவாயில் இருப்பதற்கான காரணங்கள்
ஒரு சிற்றினம் அழியும் தருவாயில் இருப்பதற்கு அல்லது அழிந்துபோவதற்கு
பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றுள் சில இங்கு விளக்கப்பட்டுள்ளன.
அ . வாழ்விட இழப்பு
சிற்றினங்களுக்கு உணவு மற்றும் வாழ்விடத்தை வழங்கக்கூடிய மரங்கள்
மனிதர்களின் தலையீட்டால் அழிக்கப்படுகின்றன.
ஆ. அளவிற்கு அதிகமாக வேட்டையாடுதல்
கொம்புகள், தோல், பற்கள் மற்றும் பல மதிப்பு மிக்க பொருள்களுக்காக
அதிக எண்ணிக்கையிலான விலங்குகள் வேட்டையாடப்படுகின்றன.
இ. மாசு
காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு போன்ற பல்வேறு மாசுபாடுகளால்
விலங்குகள் பாதிக்கப் படுகின்றன. சமீபத்திய ஆண்டுகளில், அதிக எண்ணிக்கையிலான விலங்குகள்
நெகிழிக் கழிவுகளால் பாதிக்கப்படுகின்றன.
ஈ. புதிய வாழ்விடம்
சிலவேளைகளில், விலங்குகள் அவற்றின் இயற்கையான வாழ்விடத்திலிருந்து
புதிய வாழ்விடங்களுக்கு மனிதர்களால் கொண்டு செல்லப்படுகின்றன. அவற்றுள் சில அழிந்து
போகக்கூடும். சில உயிர்வாழக்கூடும். சில உயிரினங்கள் ஏற்கனவே அங்கு வாழும் உயிரினங்களால்
தாக்கப்பட்டு அழிந்துபோகலாம்.
உ. வேதிப் பொருள்கள்
பயிர்களைச் சேதப்படுத்தும் பூச்சிக்கள், சிறு பூச்சிக்கள் அல்லது
களைகளை நீக்க பூச்சிக் கொல்லிகள் மற்றும் சில வேதிப் பொருள்களை நாம் பயன்படுத்துகிறோம்.
அவற்றை நாம் முறையாகப் பயன்படுத்தாவிட்டால், நமக்குப் பயன்தரும் தாவரங்கள் மற்றும்
விலங்குகளும் அவற்றால் பாதிக்கப்படலாம்.
ஒரு
காலத்தில் டைனோசர், ஃபெரணிகள் மற்றும் சில ஜிம்னோஸ்பெர்ம்கள் பூமியில் பரவலாகக் காணப்பட்டன
இடம் மற்றும் உணவுப் பற்றாக்குறை காரணமாகவோ அல்லது பருவநிலை மாற்றம் காரணமாகவோ அவை
பூமியிலிருந்து மறைந்து போய்விட்டன.
ஊ. நோய்கள்
அறியப்படாத பல்வேறு காரணங்களால் ஏற்படும் நோய்கள் விலங்குகளைப்
பாதித்து அவற்றை அழிந்து போகச் செய்யக்கூடும்.
எ. இயற்கைப் பேரழிவுகள்
வெள்ளம், நெருப்பு போன்ற இயற்கைப் பேரழிவுகளாலும் விலங்குகள்
அழிக்கப்படலாம்.
3. அழியும்
தருவாயிலுள்ள உயிரினங்களைப் பாதுகாத்தல்
இயற்கையானது அழகு நிறைந்தது. அது பல்வேறு தாவரங்கள் மற்றும்
விலங்குகளால் நிறைந்துள்ளது. பூமியின் மீது ஆரோக்கியமான சுற்றுச்சூழல் சமநிலையைப் பராமரிக்க,
தாவர மற்றும் விலங்கு சிற்றினங்கள் அவசியம். அவை மருத்துவம், அறிவியல், சுற்றுச்சூழல்
மற்றும் வணிக ரீதியிலான மதிப்புகளைக் கொண்டுள்ளன. பூமியில் உள்ள ஒவ்வொரு உயிரினமும்
உணவுச் சங்கிலியில் தனித்துவமான இடத்தைக் கொண்டிருந்து சுற்றுச்சூழலுக்குப் பங்களிக்கின்றன.
ஆனால், அவை முக்கியமாக மனிதச் செயல்பாட்டின் காரணமாகவே அழியும் தருவாயில் உள்ளன. அவற்றைப்
பாதுகாக்கவும், பராமரிக்கவும் நாம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
.• சில விலங்கினங்கள் வேட்டையாடுதல் காரணமாக அழியும் தருவாயில்
உள்ளன. வேட்டையாடுதல் கட்டுப்படுத்தப்பட்டால், அழியும் தருவாயிலுள்ள விலங்குகளின் எண்ணிக்கையில்
குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படலாம்.
• மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள
விலங்குகள், மீன் மற்றும் பறவைகளுக்குச் சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தலாம்.
• நாம் பயன்படுத்தும் பொருள்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது
அதிக அளவிலான மாசுக்கள் சுற்றுச்சூழலில் வெளியிடப்படுகின்றன. நமது பயன்பாட்டைக் குறைப்பதன்
மூலம் மாசுபடுதலைக் குறைக்கலாம்
• விலங்குகள் பலவேளைகளில் தவறுதலாக நெகிழியை உணவாகக் கருதி உட்கொள்கின்றன.
எனவே, நெகிழி பல உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கிறது. பிளாஸ்டிக் பொருள்களின் அளவைக்
கட்டுப்படுத்துதல் மற்றும் மறுசுழற்சி செய்வதன் மூலம் அழியும் தருவாயிலுள்ள விலங்குகளைக்
காப்பாற்ற முடியும்.
• சுற்றுச்சூழலுக்கேற்றonvகுர்ங்களைby பயன்படுத்துவது, பொருள்களை
மறுசுழற்சி செய்வது போன்றவை சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதோடு விலங்குளையும் பாதுகாக்கும்
சேதம் விளைவிக்கும் பூச்சிக்கொல்லிகள் மற்றும் இரசாயனங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
• உள்ளூர் மரங்களை வளர்ப்பதால் விலங்குகளுக்குத் தேவையான உணவு
கிடைக்கின்றது.
நமது
சுற்றுச்சூழலில் வேப்பமரம், குடைமரம், ஆலமரம் போன்ற உள்ளூர் மரங்களை நடுவது விலங்குகளுக்கு
உதவியாக இருக்கும். பல பறவைகளும், விலங்குகளும் அவற்றை உறைவிடமாகக் கொள்கின்றன.
4. அரசு முயற்சிகள்
தாவரங்களையும், விலங்குகளையும் பாதுகாப்பதற்காக, அரசு பல்வேறு
முயற்சிகளை எடுத்துள்ளது. அவற்றைப் பாதுகாக்க சில சட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
எடுத்துக்காட்டாக, புலிகள் பாதுகாப்புத் திட்டம் என்பது ஒரு வனவிலங்கு பாதுகாப்புத்
திட்டமாகும், இது 1972ஆம் ஆண்டு இந்தியாவில் வங்கப் புலிகளைப் பாதுகாப்பதற்காக தொடங்கப்பட்டது.
இத்திட்டம் 1973ஆம் ஆண்டு ஏப்ரல் 1 அன்று செயல்படுத்தப்பட்டு, மிகவும் வெற்றிகரமான
வனவிலங்கு பாதுகாப்பு முயற்சிகளுள் ஒன்றாக மாறியுள்ளது. புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின்
கீழ் துவங்கப்பட்ட இந்தியாவின் முதல் தேசியப் பூங்கா கார்பெட் தேசியப் பூங்கா ஆகும்.
'புலிகள் திட்டம்' காரணமாக இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 2006 ல் 1,400 ஆக இருந்து,
2018 ல் 2,967ஆக உயர்ந்துள்ளது. இது தவிர பின்வரும் சட்டங்களையும் அரசு இயற்றியுள்ளது.
1. மெட்ராஸ் வனவிலங்குச் சட்டம், 1873.
2. அகில இந்திய யானை பாதுகாப்புச் சட்டம், 1879.
3. வனப்பறவை மற்றும் வன விலங்கு பாதுகாப்புச் சட்டம், 1912.
4. வங்கக் காண்டாமிருகச் சட்டம், 1932.
5. அகில இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம்,
6. சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், 1986.