Home | 8 ஆம் வகுப்பு | 8வது அறிவியல் | விலங்கு நல அமைப்புகள்

தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல் | அலகு 22 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - விலங்கு நல அமைப்புகள் | 8th Science : Chapter 22 : Conservation of Plants and Animals

   Posted On :  31.07.2023 01:36 am

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 22 : தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல்

விலங்கு நல அமைப்புகள்

விலங்கு நல அமைப்புகள் என்பவை விலங்குகளின் ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் உளவியல் நலம் ஆகியவற்றில் அக்கறையுடைய குழுவாகும். குழுக்கள் ஆபத்தான சூழலிலிருந்து விலங்குகளைப் பாதுகாக்கின்றன.

விலங்கு நல அமைப்புகள்

விலங்கு நல அமைப்புகள் என்பவை விலங்குகளின் ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் உளவியல் நலம் ஆகியவற்றில் அக்கறையுடைய குழுவாகும். குழுக்கள் ஆபத்தான சூழலிலிருந்து விலங்குகளைப் பாதுகாக்கின்றன. சில குழுக்கள் நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு உதவுகின்றன. இந்தப் பகுதியில் அக்குழுக்கள் சிலவற்றைப் பற்றி படிப்போம்.

 

1. ப்ளூ கிராஸ்

ப்ளூ கிராஸ் என்பது நமது வாயில்லா நண்பர்களின் கூட்டிணைவு என்ற பெயரில் இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்ட விலங்கு நல தொண்டு நிறுவனமாகும். இது 1897ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. ஒவ்வொரு செல்லப் பிராணியும் ஆரோக்கியமான வாழ்க்கையை மகிழ்ச்சியான இல்லங்களில் அனுபவிக்க வேண்டும் என்பதே இந்த தொண்டு நிறுவனத்தின் நோக்கமாகும். கால்நடைகளுக்கான தனியார் நிறுவனத்தின் சிகிச்சைகளை தங்களது செல்லப் பிராணிகளுக்கு பெற்றுத் தர முடியாத உரிமையாளர்கள், தங்கள் பிராணிகளுக்குத் தேவையான வசதிகளைப் பெற்றுத்தர அவர்களுக்கு உதவுகிறது. மேலும், கைவிடப்பட்ட விலங்குகள் தங்களுக்குத்

 

இங்கிலாந்து நாட்டின் லண்டன் மாநகரின் தெருக்களில் காணப்பட்ட குதிரைகளைப் பராமரிப்பதற்காக ப்ளூ கிராஸ் நிறுவப்பட்டது. 1906 ஆம் ஆண்டு, மே 15 அன்று லண்டன் மாநகரின் விக்டோரியா எனும் இடத்தில் முதலாவது விலங்கு மருத்துவமனை திறக்கப்பட்டது.

தேவையான வசிப்பிடங்களைப் கடமைகள் பெறுவதற்கு அவற்றிற்கு உதவுவதோடு விலங்குகளைப் பராமரிப்போரின் பற்றிய விழிப்புணர்வையும் இது ஏற்படுத்துகின்றது.

கேப்டன் வி. சுந்தரம் என்பவர் 1959 ஆம் ஆண்டு ஆசியாவின் மிகப்பெரிய விலங்கு நல அமைப்பான இந்திய புளூகிராஸ் என்ற அமைப்பை சென்னையில் நிறுவினார். அவர் ஒரு இந்திய விமானி மற்றும் விலங்கு நல ஆர்வலர் ஆவார். தற்போது, 'இந்திய ப்ளூ கிராஸ்' அமைப்பே நாட்டின் மிகப்பெரிய விலங்கு நல அமைப்பு ஆகும். இது செல்லப்பிராணிகளைத் தத்தெடுத்தல் மற்றும் விலங்குகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பல விலங்கு நிகழ்வுகளை நடத்துகின்றது. இந்திய ப்ளூ கிராஸ் அமைப்பு பல சர்வதேசமற்றும் தேசிய விருதுகளைப் பெற்றுள்ளது. இந்த அமைப்பு முற்றிலும் தன்னார்வலர்களால் நிர்வகிக்கப்படுகிறது. மருத்துவமனைகள், தங்குமிடங்கள், ஆம்புலன்ஸ் சேவைகள் மற்றும் விலங்குகளின் பிறப்புக் கட்டுப்பாடுகள் போன்ற அனைத்து வசதிகளுடன் சென்னையிலுள்ள கிண்டியில் இதன் பிரதான அலுவலகம் அமைந்துள்ளது. தங்குமிடம் வழங்குதல், தத்தெடுப்பு, விலங்குகளின் பிறப்புக் கட்டுப்பாடு, மருத்துவமனை வசதிகள், நடமாடும் மருந்தகம் மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகளை வழங்குதல் ஆகியவை அமைப்பின் செயல்பாடுகளாகும்.

 

2. CPCSEA

CPCSEA என்பது விலங்குகள் மீதான சோதனைகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் மேற்பார்வை செய்யும் குழு' (The commision for the purpose of control and supervision of experiments on animals.) என்பதைக் குறிக்கிறது. இது விலங்குகள் வதைக்கப்படுவதைத் தடுக்கும் சட்டம், 1960 இன் கீழ் அமைக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வமான குழுவாகும். விலங்குகள் மீதான சோதனைகளின்போது அவை தேவையற்ற துன்பங்களுக்கு ஆளாகாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக 1999ஆம் ஆண்டு முதல் இது செயல்பட்டுவருகிறது.

 

CPCSEA இன் நோக்கங்கள்

i) சோதனைக்கு முன்னும் பின்னும் விலங்குகளுக்கு, தேவையற்ற வலி ஏற்படுவதைத் தவிர்த்தல்.

ii) சோதனைகளில் பயன்படுத்தப்படும் விலங்குகளின் உடல்நலனை மேம்படுத்துதல்.

ii) விலங்குகளின் வளர்ப்பு, அபிவிருத்தி மற்றும் பராமரிப்பிற்கான வழிகாட்டுதல்களை வழங்குதல்

iv) உயிரி - மருத்துவம், நடத்தை ஆராய்ச்சி மற்றும் சோதனைகளில் பயன்படுத்தப்படும் விலங்குகளின் பராமரிப்பை மேம்படுத்துதல்

 

CPCSEA இன் செயல்பாடுகள்

i) விலங்குகளின் வசிப்பிடத்திற்கான வசதிகளுக்கு ஒப்புதல் அளித்தல்.

ii) விலங்குகளைப் பயன்படுத்தி சோதனைகளை மேற்கொள்வதற்கு அனுமதியளித்தல்.

iii) விதி மீறல் ஏற்படுத்தும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல்.

iv) விலங்குகளின் கூடிய அல்லது அதற்காக விலங்குகளை அபிவிருத்தி செய்யக்கூடிய அமைப்புகளைப் பதிவு செய்தல்.

Tags : Conservation of Plants and Animals | Chapter 22 | 8th Science தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல் | அலகு 22 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 22 : Conservation of Plants and Animals : Animal Welfare Organisations Conservation of Plants and Animals | Chapter 22 | 8th Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 22 : தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல் : விலங்கு நல அமைப்புகள் - தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல் | அலகு 22 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 22 : தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல்