காரணங்கள் மற்றும் விளைவுகள் | அலகு 22 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - காடு அழிப்பு | 8th Science : Chapter 22 : Conservation of Plants and Animals

   Posted On :  31.07.2023 01:10 am

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 22 : தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல்

காடு அழிப்பு

காடுகள் முக்கியமான புதுப்பிக்கத்தக்க வளங்கள் ஆகும். அவை உலகின் நிலப்பரப்பில் ஏறக்குறைய 30 சதவீதம் நிலப்பரப்பை உள்ளடக்கியுள்ளன.

காடு அழிப்பு

காடுகள் முக்கியமான புதுப்பிக்கத்தக்க வளங்கள் ஆகும். அவை உலகின் நிலப்பரப்பில் ஏறக்குறைய 30 சதவீதம் நிலப்பரப்பை உள்ளடக்கியுள்ளன. அவை ஆக்சிஜனை உற்பத்தி செய்து வளிமண்டலத்திலுள்ள கார்பன் டைஆக்சைடின் அளவைக் கட்டுப்படுத்துகின்றன. மரக்கட்டை, காகிதம் மற்றும் மருந்துப் பொருள்கள் போன்ற பல முக்கியமான பொருள்களை அவை நமக்கு வழங்குகின்றன. நீர் வழிந்தோடலைக் கட்டுப்படுத்தி மண் வளத்தைப் பாதுகாக்கின்றன. மேலும், பருவநிலை மாற்றத்தையும் கட்டுப்படுத்துகின்றன. ஆனால், உலகெங்குமுள்ள காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு தேவைகளுக்கு நிலப்பரப்பைப் பயன்படுத்துவதற்காக காடுகளை அழிப்பதை காடு அழிப்பு என்கிறோம். காடுகள் அழிக்கப்படுவதன் மூலம் வெப்பநிலை அதிகரிப்பு, மழைப்பொழிவு குறைவு போன்ற சுற்றுச்சூழல் சமநிலையின்மை ஏற்பட்டுள்ளன. பல்வேறு தாவர மற்றும் விலங்கு சிற்றினங்களின் அழிவிற்கும் காடுகள் அழிப்பு காரணமாக உள்ளது.

 

1. காடு அழிப்பிற்கான காரணங்கள்

காடு அழிப்பு இயற்கையாகவோ அல்லது மனிதச் செயல்பாடுகள் மூலமாகவோ ஏற்படலாம். தீ மற்றும் வெள்ளம் போன்றவை காடு அழிப்பிற்கான இயற்கைக் காரணங்களாகும். வேளாண்மை அதிகரிப்பு, கால்நடை வளர்ப்பு, சட்டவிரோதமாக மரங்களை வெட்டுதல், சுரங்கப் பணி, எண்ணெய் எடுத்தல், அணை கட்டுதல் மற்றும் கட்டமைப்புப் பணிகளை மேம்படுத்துதல் ஆகியவை காடு அழிப்பிற்கான மனிதச் செயல்பாடுகளாகும்.

அ. வேளாண்மை அதிகரிப்பு

மக்கள்தொகை அதிகரிப்பின் காரணமாக, உணவு உற்பத்தியின் தேவை அதிகரித்துள்ளது. எனவே, அதிக அளவிலான மரங்கள் பயிர் உற்பத்திக்காகவும், கால்நடை வளர்ப்பிற்காகவும் வெட்டப்படுகின்றன. நாற்பது சதவீதத்திற்கும் அதிகமான காடுகள் வேளாண்மைப் பயன்பாடுகளுக்காக மட்டுமே அழிக்கப்படுகின்றன.

ஆ. நகரமயமாதல்

நகரங்களின் விரிவாக்கத்தால், வீட்டுவசதி மற்றும் குடியேற்றங்களை மென்மேலும் அமைப்பதற்கு அதிக அளவிலான நிலப்பரப்பு தேவைப்படுகிறது. சாலைகள் அமைத்தல், வீடு கட்டுதல், கனிமங்களைத் தோண்டியெடுத்தல் மற்றும் தொழிற்சாலைகளின் விரிவாக்கம் போன்ற தேவைகளும் நகரமயமாதலால் ஏற்படுகின்றன. இந்தத் தேவைகள் அனைத்திற்காகவும் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன.

இ. சுரங்கப் பணி

நிலக்கரி, வைரம் மற்றும் தங்கம் ஆகியவற்றைத் தோண்டியெடுக்க அதிக அளவிலான நிலப்பரப்பு தேவைப்படுகிறது. எனவே, அகற்றுவதற்காக காடுகளை அதிக எண்ணிக்கையிலான மரங்கள் வெட்டப்படுகின்றன. மேலும், சுரங்கப் பணி மூலம் வெளியிடப்படும் மாசுக்கள் சுற்றுப்புறத்தையும், அப்பகுதியில் வாழும் மக்களையும் பாதிக்கின்றன.

ஈ. அணைகள் கட்டுதல்

பெருகி வரும் மக்கள் தொகைக்கு, குடிநீர் வழங்குவதற்காக பெரிய அளவிலான அணைகள் கட்டப்படுகின்றன. எனவே, காடுகள் பெருமளவில் அழிக்கப்படுகின்றன.


உ. மரக்கட்டை உற்பத்தி

நம் அன்றாடத் தேவைகளுக்கு நமக்கு மரம் தேவைப்படுகிறது. மரத்தை அடிப்படையாகக் கொண்ட தொழில்களான காகிதத் தொழில், தீக்குச்சித் தொழில்மற்றும் மரத்தாலான பொருள்கள் தயாரிக்கும் தொழில் ஆகியவற்றிற்கு கனிசமான மரக்கட்டைகள் தேவைப்படுகின்றன. மரக்கட்டைகள் பொதுவாக எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, எரிபொருள் தேவைகளுக்காகவும் மரங்கள் வெட்டப்படுகின்றன. ஒருசில மனிதர்கள் சட்ட விரோதமாக மரங்களை வெட்டி அதிக அளவிலான காடுகளை அழிக்கின்றனர். இவையாவும் விலையுயர்ந்த தாவரங்களின் அழிவிற்கு முக்கியமான காரணங்களாக உள்ளன.


சிப்கோ இயக்கம் முக்கியமாக ஒரு வனப் பாதுகாப்பு இயக்கமாகும். 'சிப்கோ' என்ற சொல்லுக்கு ஒட்டிக் கொள்வது' அல்லது 'கட்டிப் பிடிப்பது' என்று பொருள் இந்த இயக்கத்தின் நிறுவனர் சுந்தர்லால் பகுகுனா ஆவார். மரங்களைப் பாதுகாத்தல் மற்றும் காடுகள் அழிந்துவிடாமல் அவற்றைப் பராமரித்தல் போன்ற நோக்கங்களுடன் இது 1970ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.


ஊ. காட்டுத் தீ

பல காடுகளில் அவ்வப்போது தீ ஏற்படுகிறது. அவை,மனிதர்கள், விபத்துக்கள் அல்லது இயற்கைக் காரணிகள் மூலம் ஏற்படுகின்றன. காரணமாக, ஆயிரக்கணக்கான காட்டுத்தீ மரங்கள் உலகமெங்கும் ஆண்டுதோறும் அழிக்கப்படுகின்றன. இவை உயிரினங்களின் பன்முகத்தன்மை மீதும் பொருளாதாரத்தின் மீதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.


எ. புயல்கள்

புயல்கள் பெரிய அளவில் அழிக்கின்றன. அவை மரங்களை மட்டுமின்றி பாதிக்கின்றன. அவற்றைச்சார்ந்துள்ள பலரின் வாழ்வாதாரத்தையும்

 

மேலும் அறிந்து கொள்வோம்


 

2. காடு அழிப்பின் விளைவுகள்

மனிதர்களுக்கும், காடுகளுக்குமிடையே நீண்ட நெடுங்காலமாக நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது. காடுகளின்றி நமது வாழ்க்கை கடினமானதாக இருக்கும். அவை நமக்குத் தேவையான ஆக்சிஜனை வழங்குகின்றன; மழைப்பொழிவைத் தருகின்றன மற்றும் நமது வாழ்க்கைக்குத்தேவையான பல்வேறு பொருள்களை வழங்குகின்றன. ஆனால், மக்கள்தொகை அதிகரிப்பினால் காடுகளின் அழிவு அதிகரித்துள்ளது. ஆண்டுதோறும் 1.1 கோடி ஹெக்டேர் பரப்பிலான காடுகள் உலகமெங்கும் அழிக்கப்படுகின்றன. இந்தியாவில் மட்டும் 10 லட்சம் ஹெக்டேர் பரப்பிலான மரங்கள் வெட்டப்படுகின்றன. இதன் காரணமாக பல்வேறு தீய விளைவுகள் ஏற்பட்டுள்ளன. அவற்றுள் சிலவற்றை இங்கு காண்போம்.

அ. சிற்றினங்களின் அழிவு

காடுகள் அழிக்கப்படுவதன் காரணமாக பல்வேறு அரிய வகைத் தாவர மற்றும் விலங்கு சிற்றினங்கள் அழிந்துள்ளன. மேலும், பல்வேறு சிற்றினங்கள் அழியும் தருவாயில் உள்ளன உலகிலுள்ள சிற்றினங்களுள் 80% சிற்றினங்கள் வெப்பமண்டல காடுகளில் காணப்படுகின்றன. விலங்குகளின் வாழ்விடம் அழிக்கப்படுவதன் காரணமாக ஒவ்வொரு நாளும் 50-100 வகையான விலங்குகள் அழிக்கப்படுகின்றன என்று அறிக்கைகள் கூறுகின்றன.

ஆ. மண் அரிப்பு

காடுகளில் பரந்து விரிந்திருக்கும் மரங்கள் சூரிய வெப்பத்திலிருந்து மண்ணைப் பாதுகாக்கின்றன. மரங்கள் வெட்டப்படும்போது, சூரிய வெப்பம் மண்ணின் மீது விழுகிறது. கோடை காலத்தில் நிலவும் மிக அதிகளவிலான வெப்பம், ஈரப்பதத்தை உலரச் செய்து, ஊட்டச்சத்துக்களை ஆவியாகச் செய்கின்றது. கரிமப் பொருள்களைச் சிதைவடையச் செய்யும் பாக்டீரியாக்களையும் இது பாதிக்கின்றது. மரங்களின் வேர்கள் நீரையும், தாவரங்களுக்கு ஊட்டச்சத்துக்களை அளிக்கின்ற மண்ணையும் தம்முள் நிலைநிறுத்தி வைத்துள்ளன. மரங்கள் வெட்டப்படும்போது, ஊட்டச்சத்துக்களுடன் சேர்த்து மண்ணும் அரிக்கப்படுகின்றது.

கடுமையான சுற்றுச்சூழலிருந்து தப்பித்துக் கொள்ள பறவைகள் நீண்ட தூரம் பயணம் செய்வது இடம்பெயர்வு எனப்படும். சாதகமற்ற காலநிலையில் பல பறவைகள் மற்றும் விலங்குகள் நீண்ட தூரம் இடம் பெயர்கின்றன. சைபீரியாவில் நிலவும் கடுமையான சூழ்நிலைகளிலிருந்து தப்பித்து, சாதகமான சூழ்நிலை மற்றும் உணவைப் பெறுவதற்காக சைபீரிய கிரேன் பறவைகள் குளிர்காலத்தில் சைபீரியாவிலிருந்து இந்தியாவுக்கு இடம் பெயர்கின்றன. அவை ஒரு நாளில் சராசரியாக 200 மைல்கள் பயணிக்கின்றன.


இ. நீர் சுழற்சி

மரங்கள் வேரின் மூலம் நீரை உறிஞ்சி, நீராவிப்போக்கின்போது, நீராவி வடிவில் வளிமண்டலத்திற்குள் அதை வெளியேற்றுகின்றன. மரங்கள் வெட்டப்படும்போது, அவற்றால் வெளியிடப்படும் நீராவியின் அளவு குறைகிறது. இதன் காரணமாக, மழைப்பொழிவின் அளவும் குறைகிறது.

ஈ. வெள்ளம்

மரங்கள் அதிகளவிலான நீரை வேர்களின் மூலம் உறிஞ்சுகின்றன. மரங்கள் வெட்டப்படும்போது, நீரின் ஓட்டம் தடைபடுகிறது. இதன் காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் ஏற்படுகிறது.

அமேசான் காடு உலகின் மிகப் பெரிய மழைக்காடு ஆகும். இது பிரேசிலில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 60,00,000 சதுர கி.மீ. ஆகும். இது cO வாயுவை சமன்செய்வதன் மூலம் பூமியின் கால நிலையை நிலைப்படுத்தவும், புவி வெப்பமயமாதலைக் குறைக்கவும் உதவுகிறது, மேலும், உலகின் 20% ஆக்சிஜனை இது உற்பத்தி செய்கிறது. இங்கு சுமார் 390 பில்லியன் மரங்கள் உள்ளன. இது பூமியின் நுரையீரல் எனப்படுகிறது.


உ. புவி வெப்பமயமாதல்

நாம் வளிமண்டலத்திலுள்ள ஆக்சிஜனை சுவாசித்து  கார்பன் டைஆக்சைடை கழிவுப் பொருளாக வெளியேற்றுகிறோம் தந்தருவிளைy மரங்கள் கார்பன் டை ஆக்சைடை உள்ளே இழுத்துக்கொண்டு ஒளிச்சேர்க்கையின் போது ஆக்சிஜனை உற்பத்தி செய்கின்றன. காடு அழிப்பின் மூலம் மரங்களின் எண்ணித்தை ஆறைதான்le கார்பன் டைஆக்சைடின் அளவு வளிமண்டலத்தில் அதிகரிக்கிறது. நீராவி, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, ஓசோன் மற்றும் கார்பன் டைஆக்சைடு ஆகிய யாவும் சேர்ந்து பசுமை இல்ல வாயுக்கள் என் அழைக்கப்படுகின்றன. இவை புவி வெப்பமயமாதலுக்குக் காரணமாக உள்ளன.


புவிப்பரப்பின்மீது விழும் சூரியஒளி வளிமண்டலத்திற்குள் பிரதிபலிக்கின்றது அவ்வாறு பிரதிபலிக்கப்படும் ஒளியின் ஒருபகுதி பசுமை இல்ல வாயுக்களால் மீண்டும் வளிமண்டலத்திற்குள் மற்றொரு பகுதி பிரதிபலிக்கப்படுகின்றன. விண்வெளிக்குச் வளிமண்டலத்தில் செல்கிறது. ஆனால், அதிகரித்துக் காணப்படும் மீத்தேன், கார்பன் டைஆக்சைடு போன்ற வாயுக்கள் வெப்ப ஆற்றலை வளிமண்டலத்திற்குள்ளேயே தக்கவைத்து புவியின் வெப்பநிலையை மேலும் அதிகரிக்கின்றன. இதுவே, புவிவெப்பமயமாதல் என அழைக்கப்படுகிறது. இதன் காரணமாக துருவப்பகுதியில் காணப்படும் பனிமலைகள் உருகி அப்பகுதியில் வாழும் துருவக் கரடி போன்ற உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.

 

ஊ. வசிப்பிடங்கள் பாதிக்கப்படுதல்

காடுகளில் வசிக்கும் பழங்குடி மக்கள் தாங்கள் பிழைப்பதற்கு காடுகளையே சார்ந்துள்ளனர். அவர்கள் தங்களது உணவு மற்றும் பல்வேறு பொருள்களை காடுகளிலிருந்தே பெறுகின்றனர். காடுகள் அழிக்கப்படுவதால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.


செயல்பாடு 1

உங்கள் பகுதியிலுள்ள காடுகள் பற்றிய கூடுதல் தகவல்களைச் சேகரிக்கவும்.  அங்கு காணப்படும் தாவரம் மற்றும் விலங்கு சிற்றினங்கள் பற்றிய தகவலைப் பெறவும். நீங்கள் கண்டிராத தாவரங்கள் மற்றும் விலங்குகளின் படங்களைச் சேகரித்து ஒரு படத்தொகுப்பை உருவாக்கவும்.

Tags : Causes and Effects | Chapter 22 | 8th Science காரணங்கள் மற்றும் விளைவுகள் | அலகு 22 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 22 : Conservation of Plants and Animals : Deforestation Causes and Effects | Chapter 22 | 8th Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 22 : தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல் : காடு அழிப்பு - காரணங்கள் மற்றும் விளைவுகள் | அலகு 22 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 22 : தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல்