Home | 8 ஆம் வகுப்பு | 8வது அறிவியல் | நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம்

தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல் | அலகு 22 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம் | 8th Science : Chapter 22 : Conservation of Plants and Animals

   Posted On :  10.09.2023 02:51 am

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 22 : தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல்

நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம்

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 22 : தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல் : நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம்

நினைவில் கொள்க

வேளாண் விரிவாக்கம், கால்நடை வளர்ப்பு, சட்டவிரோதமாக மரம் வெட்டுதல், சுரங்கப் பணி, எண்ணெய் பிரித்தெடுத்தல், அணை கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவை காடு அழிப்பிற்குக் காரணமான மனிதச் செயல்பாடுகள் ஆகும்.

விலங்குகளும், மனிதர்களும் தங்களது உணவு மற்றும் உறைவிடத்தைப் பெற காடு வளர்ப்பு உதவுகிறது.

வளமான சுற்றுச்சூழலின் முக்கிய அம்சமான நீர்நிலைகளை மறுகட்டமைப்பு செய்வதற்கு காடுகளை மீண்டும் வளர்ப்பது உதவுகிறது.

பனிச்சிறுத்தை, வங்கப் புலி, ஆசிய சிங்கம், ஊதா தவளை மற்றும் இந்திய ராட்சத அணில் ஆகியவை இந்தியாவில் அழியும் தருவாயில் உள்ள விலங்குகளாகும்.

பூமியில் ஆரோக்கியமான சுற்றுச்சூழல் சமநிலையைப் பராமரிக்க, விலங்கு மற்றும் தாவர இனங்கள் அவசியமாகும்.

அரிதான மற்றும் அழியும் தருவாயில் உள்ள உயிரினங்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்விடங்கள் குறித்த ஆய்வுகள் மற்றும் கண்காணிப்புத் திட்டங்களுக்கு சிவப்பு தரவு புத்தகம் முக்கியமான தரவை வழங்குகிறது.

அழியும் தருவாயில் உள்ள விலங்கு மற்றும் தாவர சிற்றினங்களைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும், மீட்டெடுக்கவும் பல்லுயிர் பாதுகாப்பு உதவுகிறது.

 

சொற்களஞ்சியம்

பல்லுயிர் பல்வேறு வகையான உயிரினங்கள்

உயிர்வழிப் பெருக்கம் உணவுச் சங்கிலியில் அடுத்தடுத்து உள்ள உயிரினத்தின் திசுக்களில் வேதிப்பொருள்கள் போன்ற நச்சுப்பொருட்களின் செறிவு அதிகரித்தல்.

காடு அழிப்பு காடுகளை அகற்றுதல்.

காடு வளர்ப்பு காடுகள் இல்லாத பகுதிகளில் புதிதாக காடுகளை உருவாக்குதல்.

காடு மீள்வளர்ப்பு காடுகள் அழிக்கப்பட்ட பகுதிகளில் புதிய காடுகளை உருவாக்குதல்.

அழிந்துபோன இனங்கள் பூமியிலிருந்து முற்றிலும் மறைந்துபோன இனங்கள். 

அழியும் தருவாயில் உள்ள இனங்கள் விரைவில் முற்றிலுமாக அழிந்துபோகக்கூடிய நிலையிலுள்ள தாவர மற்றும் விலங்கு இனங்கள்.

உள்ளூர் இனங்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே காணப்படும் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் சிற்றினங்கள்.

ஃப்ளோரா ஒரு குறிப்பிட்ட பகுதியில் காணப்படும் தாவரங்களின் சிற்றினங்கள்

சிவப்பு தரவு புத்தகம் அழியும் தருவாயில் உள்ள சத்துனங்களைப் பற்றிய பதவு

உலக வெப்பமயமாதல் புவியில் வெப்பம் அதிகரித்தல்.

மக்கள் பல்லுயிர் பன்முகத்தன்மை பதிவு ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது கிராமத்தின் நிலப்பரப்பு மற்றும் மக்கள்தொகை உள்ளிட்ட அப்பகுதியில் கிடைக்கக்கூடிய உயிர் வளங்கள் பற்றிய விரிவான தகவல்கள் ஒரு ஆவணம்.

ஃபானா ஒரு குறிப்பிட்ட பகுதியில் காணப்படும் விலங்குகளின் சிற்றினங்கள்


பிற நூல்கள்

1. Environmental biology- Verma P S - S Chand & co publisher.

2. Indian wildlife -The great wildlife series- APApublication.

3. Endangered Animals of India – S M Nair - National book trust India.


இணைய வளங்கள்

1. www.Bluecrossofindia.org

2. www.cpcsea.nic.in

3. www.pbr.com



இணையச் செயல்பாடு


தாவரங்கள் மற்றும் விலங்குகளை பாதுகாத்தல்

கணினி திரை வழியே வனவிலங்குகளை காண்போமா!

படி 1 கீழ்க்காணும் உரலி/விரைவுக்குறியைப் பயன்படுத்தி இணையப் பக்கத்திற்குச் செல்க. திரையில் தோன்றும் பக்கத்தில் இடது புறத்தில் LIVE ANIMAL YARD என்பதனை சொடுக்கவும்.

படி 2 வனவிலங்குகள் பலவற்றின் படஉருவம் தோன்றும். அதில் விரும்பும் படஉருவத்தை சொடுக்கவும்.

படி 3 தோன்றும் திரையில் PLAY பொத்தானை சொடுக்கவும்.

படி 4 அதே போன்று மற்ற விலங்குகள் மற்றும் பறவைகளை காண மீண்டும் இதே செயலை செய்துபார்க்கவும்.

உரலி: https://www.aazp.in/

*படங்கள் அடையாளத்திற்கு மட்டுமே. தேவையெனில் Adobe Flash யை அனுமதிக்க.

Tags : Conservation of Plants and Animals | Chapter 22 | 8th Science தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல் | அலகு 22 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 22 : Conservation of Plants and Animals : Points to Remember, Glossary, Concept Map Conservation of Plants and Animals | Chapter 22 | 8th Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 22 : தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல் : நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம் - தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல் | அலகு 22 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 22 : தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல்