Home | 8 ஆம் வகுப்பு | 8வது அறிவியல் | காடு மீள்வளர்ப்பு

தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல் | அலகு 22 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - காடு மீள்வளர்ப்பு | 8th Science : Chapter 22 : Conservation of Plants and Animals

   Posted On :  31.07.2023 01:16 am

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 22 : தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல்

காடு மீள்வளர்ப்பு

காடு அழிப்பு மூலம் அழிந்துபோன காடுகளில் இயற்கையாக மரங்கள் வளர்வது அல்லது தேவைக்கேற்ப மரங்களை வளர்ப்பது காடு மீள்வளர்ப்பு எனப்படும்.

காடு மீள்வளர்ப்பு

காடு அழிப்பு மூலம் அழிந்துபோன காடுகளில் இயற்கையாக மரங்கள் வளர்வது அல்லது தேவைக்கேற்ப மரங்களை வளர்ப்பது காடு மீள்வளர்ப்பு எனப்படும். காடு மீள்வளர்ப்பு, காடு வளர்ப்பு இரண்டும் ஒன்றுபோவிதி தோன்றலாம், ஆனால், அவை இரண்டும் ஒன்றல்ல. சில காரணங்களால் காடுகளை இழந்த நிலப்பரப்பில் மரங்களை மீண்டும் நடுவது காடு மீள்வளர்ப்பு எனப்படும். ஆனால், காடு வளர்ப்பு என்பது மரங்க ser இல்லாத ஒரு பகுதியில் புதிதாக காடுகளை வளர்ப்பதாகும். 9 புவி வெப்பமடைதலைத் தவிர்ப்பதற்கு மரம் நடுதல் ஒரு சிறந்த உத்தியாகும்.காலநிலையைப் பராமரிப்பதோடு, முக்கியமான சிற்றினங்களைப் பாதுகாக்கவும் காடு மீள்வளர்ப்பு உதவுகிறது. சிற்றினங்களின் நலம் பாதிக்கப்படுதல் மற்றும் அவை அச்சுறுத்தப்படுவதற்குக் காரணமான வாழிடங்களின் இழப்பு மற்றும் சீரழிவைத் தடுக்க காடு மீள்வளர்ப்பு உதவுகிறது.

செயல்பாடு 3

இயற்கையைப் பாதுகாத்தல் தொடர்பான முக்கியமான தினங்களை அனுசரிக்கவும் மேலும், காடுகளைப் பாதுகாத்தலை வலியுறுத்த ஒரு ஊர்வலம் செல்லவும்.

 

1. காடு மீள்வளர்ப்பின் முக்கியத்துவம்

காடு வளர்ப்பு மற்றும் காடு மீள்வளர்ப்பு ஆகிய இரண்டும் வாழ்விடத்தைப் பாதுகாப்பதற்கும், வனப் பொருள்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கும், காலநிலை மாற்றங்களுக்கு தீர்வு காண்பதற்கும் மற்றும் பல காரணங்களுக்கும் அவசியமாகிறது. காடு மீள்வளர்ப்பின் முக்கியத்துவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

• காடு மீள்வளர்ப்பானது காற்றிலுள்ள கார்பன் டைஆக்சைடையின் அளவைக் குறைப்பதன் மூலம் நாம் சுவாசிக்கும் காற்றின் தரத்தை மேம்படுத்துகிறது.

• காடு அழிப்பின் விளைவுகளை சரிசெய்யவும், புவி வெப்பமயமாதலைக் குறைக்கவும் உதவுகிறது.

• இது இழந்துபோன மற்றும் சீரழிந்த வாழ்விடங்களைப் புதுப்பிப்பதோடு, சிற்றினங்களுக்கான ஆபத்தையும் நீக்குகிறது.

• காடு மீள்வளர்ப்பு மூலம் மண் அரிப்பால் ஏற்பட்ட சேதத்தை மறுசீரமைக்கலாம். சுற்றுச்சூழல் நலத்தின் முக்கிய அம்சமான நீர்நிலைகளையும் இது மறுசீரமைக்கிறது.

• மரங்கள் இலை மற்றும் வேர் வழியாக ஈரப் பதத்தை உறிஞ்சுகின்றன. எனவே, காடு மீள்வளர்ப்பு நீர் சுழற்சியைப் பராமரிக்கிறது. மரங்களின் நீராவிப்போக்கினால் வளி மண்டலத்தின் ஈரப்பதம் இயல்பு நிலையை அடைவதோடு, இப்பகுதியில் நிலவக்கூடிய வெப்பநிலையும் சீராகப் பராமரிக்கப்படுகிறது.



Tags : Conservation of Plants and Animals | Chapter 22 | 8th Science தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல் | அலகு 22 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 22 : Conservation of Plants and Animals : Reforestation Conservation of Plants and Animals | Chapter 22 | 8th Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 22 : தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல் : காடு மீள்வளர்ப்பு - தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல் | அலகு 22 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 22 : தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல்