Home | 8 ஆம் வகுப்பு | 8வது அறிவியல் | உயிர்வழிப்பெருக்கம்

தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல் | அலகு 22 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - உயிர்வழிப்பெருக்கம் | 8th Science : Chapter 22 : Conservation of Plants and Animals

   Posted On :  31.07.2023 01:35 am

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 22 : தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல்

உயிர்வழிப்பெருக்கம்

சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக நச்சுப் பொருள்களின் அளவு அதிகரிப்பதே உயிர்வழிப் பெருக்கம் எனப்படும்.

உயிர்வழிப்பெருக்கம்

சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக நச்சுப் பொருள்களின் அளவு அதிகரிப்பதே உயிர்வழிப் பெருக்கம் எனப்படும். பாதரசம், ஆர்சனிக் போன்ற உலோகங்கள், பாலிகுளோரினேட்டட் பைபீனைல்கள் மற்றும் DDT(Dichloro Diphenyl Trichloroethane) போன்ற பூச்சிக்கொல்லிகள் ஆகியவை அத்தகைய மாசுபடுத்திகள் ஆகும். உயிரினங்கள் உண்ணும் உணவு மூலம் இப்பொருள்கள் அவற்றைச் சென்றடைகின்றன. உணவுச் சங்கிலியின் கீழ்மட்ட நிலையிலுள்ள விலங்குகளை, உயர்மட்ட நிலையிலுள்ள விலங்குகள் உணவாக உட்கொள்ளும்பொழுது நச்சுத்தன்மைவாய்ந்த பொருள்கள் உயர்மட்ட விலங்கினத்தையும் பாதிக்கின்றன.

 

1. உயிர்வழிப் பெருக்கம் ஏற்படக் காரணங்கள்

உயிர் வழிப் பெருக்கம் ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்கள் பின்வருமாறு:

அ. பூச்சிக்கொல்லிகள், உரங்கள், பூஞ்சைக் கொல்லிகள் ஆகியவை மிகுந்த நச்சுத்தன்மை கொண்டவை. அவைமண், ஆறுகள், ஏரிகள் மற்றும் கடல்களில் வெளியேற்றப்படுகின்றன. இவை நீர்வாழ் உயிரினங்களிலும், மனிதர்களிலும் உடல்நலக்கேட்டை ஏற்படுத்துகின்றன.

ஆ) கரிம மாசுகள் மனிதர்கள், விலங்குகள் மற்றும் வனவிலங்குகளின் உடல்நலத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

இ) தொழிற்சாலைச் (சப்புபுரள் teமூலby வெளியிடப்படும் நச்சுப் பொருள்கள் உணவுச் சங்கிலி மூலம் உயிரினங்களை அடைந்து

ஈ) சுரங்க நடவடிக்கைகள் தண்ணீரில் அதிக அளவு சல்பைடு மற்றும் செலினியம் படிவுகளை உருவாக்குகின்றன. இந்த நச்சுப் பொருள்கள் உணவுச் சங்கிலியில் உள்ள நீர்வாழ் உயிரினங்களால் உறிஞ்சப்படுகின்றன.


2. உயிர்வழிப் பெருக்கத்தின் விளைவுகள்

உயிரினங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மீது உயிர்வழிப் பெருக்கத்தின் விளைவுகள் பின்வருமாறு:

அ. இது மனிதர்கள் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தி புற்றுநோய், சிறுநீரகப் பிரச்சினைகள், கல்லீரல் செயலிழப்பு, பிறப்புக் குறைபாடுகள், சுவாசக் கோளாறுகள் மற்றும் இதய நோய்களை உண்டாக்குகின்றது.

ஆ. இது கடல் உயிரினங்களின் இனப்பெருக்கம் மற்றும் வளர்ச்சியைப் பாதிக்கின்றது.

இ. பவளப்பாறைகள் அழிக்கப்படுவதால் பல நீர்வாழ் உயிரினங்களின் வாழ்க்கை பாதிப்படைகிறது.

ஈ. நீர்நிலைகளில் வெளியேற்றப்படும் வேதிப் பொருள்கள் மற்றும் நச்சுக்கள் உணவுச் சங்கிலியைச் சீர்குலைக்கின்றன.

மேலும் அறிவோம்

அமெரிக்காவில் அமைந்திருக்கின்ற டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் முனைவர் க. சகிலாபானு எனும் அறிவியல் விஞ்ஞானி குரோமியம் உலோகத்தால் நீர் மாசுபாடு அடைவதன் காரணமாக உயிரினங்களில் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது என்றும், அது மனிதர்களின் நஞ்சுக்கொடியில் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை ஏற்படுத்துவதால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகின்றது என்றும் கண்டறிந்துள்ளார். இவர் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள புதுப்பட்டினம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார்.


Tags : Conservation of Plants and Animals | Chapter 22 | 8th Science தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல் | அலகு 22 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 22 : Conservation of Plants and Animals : Biomagnification Conservation of Plants and Animals | Chapter 22 | 8th Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 22 : தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல் : உயிர்வழிப்பெருக்கம் - தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல் | அலகு 22 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 22 : தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல்