தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல் | அலகு 22 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - பாதுகாத்தல் | 8th Science : Chapter 22 : Conservation of Plants and Animals

   Posted On :  31.07.2023 01:32 am

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 22 : தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல்

பாதுகாத்தல்

அழியும் தருவாயிலுள்ள விலங்குகள் மற்றும் தாவர இனங்களைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும், மீட்டெடுக்கவும் நமக்கு பல்லுயிர் பாதுகாப்பு உதவுகிறது. பாதுகாத்தல் என்பது இரண்டு வகைப்படும் அவை: • உள்வாழிடப் பாதுகாப்பு (வாழ்விடத்திற்குள்) • வெளிவாழிடப் பாதுகாப்பு (வாழ்விடத்திற்கு வெளியே

பாதுகாத்தல்

WWF (உலக வனவிலங்கு அமைப்பின் தகவலின்படி, கடந்த 40 ஆண்டுகளில் விலங்குகள், பறவைகள், மீன், ஊர்வன மற்றும் நீர்வாழ்வினங்களின் எண்ணிக்கை 60% குறைந்துள்ளது. வருங்கால சந்ததியினரைக் கருத்தில் கொண்டு நாம் இவற்றைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது. பாதுகாத்தல் என்பது வனவிலங்குகளையும், காடு மற்றும் நீர் போன்ற இயற்கை வளங்களையும் பிறரிடமிருந்து காத்தல், பேணுதல் மற்றும் மேலாண்மை செய்வதாகும். அழியும் தருவாயிலுள்ள விலங்குகள் மற்றும் தாவர இனங்களைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும், மீட்டெடுக்கவும் நமக்கு பல்லுயிர் பாதுகாப்பு உதவுகிறது. பாதுகாத்தல் என்பது இரண்டு வகைப்படும் அவை:

• உள்வாழிடப் பாதுகாப்பு (வாழ்விடத்திற்குள்)

• வெளிவாழிடப் பாதுகாப்பு (வாழ்விடத்திற்கு வெளியே

 

1. உள்வாழிடப் பாதுகாப்பு

உயிரினங்களை அவை வாழும் இயற்கைச் சூழலிலேயே பாதுகாப்பது உள்வாழிடப் பாதுகாப்பு எனப்படும். இயற்கை வாழிடங்களைப் பாதுகாத்தல் மற்றும் அழியும் தருவாயில் உள்ள உயிரினங்களை தேசியப் பூங்காக்கள், வனவிலங்குகள் அல்லது சரணாலயங்கள் மற்றும் உயிர்க்கோளக் காப்பகங்கள் போன்ற சில பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் பராமரிப்பதன் மூலம் உள்வாழிடப் பாதுகாப்பு மேற்கொள்ளப்படுகிறது. இந்தியாவில், சுமார் 73 தேசியப் பூங்காக்கள், 416 சரணாலயங்கள் மற்றும் 12 உயிர்க்கோளக் காப்பகங்கள் உள்ளன.



அ. தேசியப் பூங்காக்கள்

தேசியப் பூங்கா என்பது வனவிலங்குகளின் மேம்பாட்டிற்காகவே ஒதுக்கப்பட்ட பகுதி ஆகும். இங்கு, காடுகளைப் பயன்படுத்துதல், மேய்ச்சல் அல்லது பயிர் உற்பத்தி போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. இந்த இடங்களில் எந்த தனிநபரும் உரிமைகோர முடியாது. தேசிய பூங்காக்கள் 100 500 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளன. இந்த பூங்காக்களில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட தாவர அல்லது விலங்கு சிற்றினங்கள் பாதுகாக்கப்படுகின்றன.


ஆ. வனவிலங்கு சரணாலயங்கள்

சரணாலயம் என்பது விலங்குகளின் பாதுகாப்பிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட பாதுகாக்கப்பட்ட பகுதி ஆகும். மரம் வெட்டுதல், வனப் பொருள்களைச்


சேகரித்தல் மற்றும் தனியார் உரிமைகள் போன்ற மனித நடவடிக்கைகள் இங்கு அனுமதிக்கப்படுகின்றன. சுற்றுலா போன்ற கட்டுப்படுத்தப்பட்ட செயல்பாடுகளும் அனுமதிக்கப்படுகின்றன. தேசியப் பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களுக்கு இடையிலான அட்டவணை 22.760 கொடுக்கப் வேறுபாடுகள் பட்டுள்ளன.


இ. உயிர்க்கோளங் காப்பகங்கள்

உயிர்க்கோளம் என்பது ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். மனிதர்களும் இந்த அமைப்பின் ஒரு பகுதியாக உள்ளனர். இந்த இடங்களின் பரப்பளவு சுமார் 5000 சதுர கிலோமீட்டர் இருக்கும். இவை சுற்றுச்சூழல் அமைப்பு, சிற்றினங்கள் மற்றும் மரபணு வளங்களைப் பாதுகாக்கின்றன. இந்தப் பகுதிகள் முக்கியமாக பொருளாதார வளர்ச்சிக்காகவே அமைக்கப்பட்டுள்ளன.


செயல்பாடு 6

தமிழ்நாட்டிலுள்ள தேசியப்பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களைக் கண்டறியவும். அப்பகுதிகளுக்குச் சென்று அவற்றைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்கவும்.

உள்வாழிடப் பாதுகாப்பின் நன்மைகள்

• சிற்றினங்கள் அவற்றின் வாழ்விடத்திற்கு ஏற்றவாறு தகவமைப்பு பெறுகின்றன.

• சிற்றினங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ளலாம்.

• இயற்கை வாழ்விடங்கள் பராமரிக்கப் படுகின்றன.

.• குறைந்த செலவீனத்துடன், எளிதாக இவற்றை நிர்வகிக்க இயலும்.

• பழங்குடியின மக்களின் பாதுகாக்கப்படுகின்றன.

 

2. வெளிவாழிடப் பாதுகாப்பு

இது உயிரினங்களை தேவைகள் அவற்றின் வாழ்விடங்களுக்கு வெளியே பாதுகாக்கும் ஒரு வனவிலங்கு பாதுகாப்பு முறை ஆகும். உயிரியல் பூங்காக்கள் மற்றும் தாவரத் தோட்டங்களை மரபணுக்களைப் பாதுகாத்தல், நாற்றுக்கள் மற்றும் திசு வளர்ப்பு ஆகியவை இந்த முறையில் பின்பற்றப்படும் சில உத்திகள் ஆகும்.

அ. தாவரவியல் பூங்காக்கள்

இது பூக்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் வளர்க்கப்படும் இடம் ஆகும். இந்த இடங்கள் ஆரோக்கியமான மற்றும் அமைதியான சூழலை வழங்குகின்றன.

1759 ஆம் ஆண்டு வியன்னாவில் உள்ள சோஹன்பிரம் நகரில் நிறுவப்பட்ட மிருகக்காட்சி சாலையே மிகப் பழமையான மிருகக்காட்சி சாலையாகும். இந்தியாவில் முதல் மிருகக்காட்சி 1800 ஆம் ஆண்டு பரக்பூரில் நிறுவப்பட்டது.

ஆ. உயிரியல் பூங்கா

இது வன விலங்குகள் பாதுகாக்கப்படும் பகுதிகள் ஆகும். இந்தியாவில் சுமார் 800 உயிரியல் பூங்காக்கள் உள்ளன.

இ. திசு வளர்ப்பு

தீங்குயிரிகள் அழிக்கப்பட்ட, ஊட்டச்சத்து மிக்க ஊடகத்தில் தாவர செல்கள், திசுக்கள் விதைகள் அல்லது பிற தாவரப் பாகங்களை வளர்க்கும் ஒரு நுட்பமே திசு வளர்ப்பு எனப்படும்.

ஈ. விதை வங்கி

விதை வங்கிகள் உலர்ந்த விதைகளை மிகக் குறைந்த வெப்பநிலையில் பாதுகாக்கின்றன. உலகின் மிகப்பெரிய விதை வங்கி இங்கிலாந்தில் உள்ள மில்லினியம் விதை வங்கி ஆகும்.

உ. குளிரி விதை வங்கி

இது மிகக் குறைந்த வெப்பநிலையில் ஒரு விதை அல்லது கருவைப் பாதுகாக்கும் தொழில் நுட்பமாகும். இது பொதுவாக திரவ நைட்ரஜனில் -196°C வெப்பநிலையில் பாதுகாக்கப்படுகிறது. அழிவை எதிர்கொள்ளும் சிற்றினங்களைப் பாதுகாப்பதற்கு இது உதவியாக இருக்கும்.

வெளிவாழிடப் பாதுகாப்பின் நன்மைகள்

• இது சிற்றினங்களின் அழிவைத் தடுக்கிறது.

•  அழியும் தருவாயிலுள்ள விலங்குகளை இந்த வழிகளின் மூலம் விருத்தியடையச் செய்யலாம்

• அழியும் தருவாயிலுள்ள இனங்கள் விருத்தி செய்யப்பட்டு, இயற்கைச் சூழலில் வளர்க்கப்படுகின்றன.

• இது ஆராய்ச்சி மற்றும் அறிவியல் பணிகளுக்கு உதவுகிறது.

Tags : Conservation of Plants and Animals | Chapter 22 | 8th Science தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல் | அலகு 22 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 22 : Conservation of Plants and Animals : Conservation Conservation of Plants and Animals | Chapter 22 | 8th Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 22 : தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல் : பாதுகாத்தல் - தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல் | அலகு 22 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 22 : தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல்