Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணிதம் | தொடுகோட்டுச் சார்பு மற்றும் நேர்மாறு தொடுகோட்டுச் சார்பு (The Tangent Function and the Inverse Tangent Function)

வரையறை, வரைபடம், பண்புகள், எடுத்துக்காட்டு கணக்குகள் - தொடுகோட்டுச் சார்பு மற்றும் நேர்மாறு தொடுகோட்டுச் சார்பு (The Tangent Function and the Inverse Tangent Function) | 12th Maths : UNIT 4 : Inverse Trigonometric Functions

   Posted On :  23.02.2024 11:46 pm

12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 4 : நேர்மாறு முக்கோணவியல் சார்புகள்

தொடுகோட்டுச் சார்பு மற்றும் நேர்மாறு தொடுகோட்டுச் சார்பு (The Tangent Function and the Inverse Tangent Function)

கட்டிடம், மலை அல்லது கொடிகம்பம் போன்றவற்றின் உயரம் அல்லது தூரத்தை கண்டறிவதற்கு y = tan x எனும் தொடுகோட்டுச் சார்பை பயன்படுத்துகிறோம்.

தொடுகோட்டுச் சார்பு மற்றும் நேர்மாறு தொடுகோட்டுச் சார்பு (The Tangent Function and the Inverse Tangent Function)

கட்டிடம், மலை அல்லது கொடிகம்பம் போன்றவற்றின் உயரம் அல்லது தூரத்தை கண்டறிவதற்கு y = tan x எனும் தொடுகோட்டுச் சார்பை பயன்படுத்துகிறோம். y = tan x = sinx/cosx ன் சார்பகத்தில் பகுதியை பூஜ்ஜியமாக்கும் xன் மதிப்புகள் நீக்கப்படுகிறது. எனவே x = … , −3π/2 , −π/2 , π/2 , 3π/2 , … ஆகிய மதிப்புகளுக்கு தொடுகோட்டுச் சார்பு வரையறுக்கப்படவில்லை . ஆகையால் y = tan xன் சார்பகமானது ஆகும். அதன் வீச்சகம் (−∞, ∞) ஆகும். y = tan x எனும் தொடுகோட்டுச் சார்பின் காலம் π ஆகும்.



1. தொடுகோட்டுச் சார்பின் வரைபடம் (The graph of tangent function)

மீள்நிகழ் காலமுறையுள்ள இடைவெளிகளில் சார்பின் மதிப்பை காண்பதற்கு தொடுகோட்டுச் சார்பு பயனுள்ளதாக இருக்கும். தொடுகோட்டுச் சார்பு ஒற்றைச் சார்பாகும். ஆகையால் y = tan xன் வளைவரை ஆதியைப் பொறுத்து சமச்சீராக இருக்கும். தொடுகோட்டுச் சார்பின் காலம் π என்பதால் π நீளமுள்ள ஏதேனும் ஒரு இடைவெளியில் y = tan x ன் வரைபடத்தை வரையலாம். [−π/2, π/2] எனும் இடைவெளியைக் கருதுக. x [−π/2, π/2] எனும்படி y = tan x ன் வளைவரை  வரைய கீழ்க்காணும் அட்டவணையை அமைப்போம்.


இப்போது அட்டவணையிலுள்ள புள்ளிகளை வரைபடத்தில் குறித்து, அவைகளை இழைவான வளைவரையில் இணைத்து y = tan x, −π/2 < x  < π/2    , ன் வரைபடத்தை வரையலாம். π/2 மதிப்பை x நெருங்கும்போது அதே சமயம் π/2 − விட குறைவான மதிப்பைப் பெறும்போது sin x மதிப்பு 1 − நெருங்கும் மற்றும் cos x மிகை எண்மதிப்பாகவும் 0− நெருங்கியும் இருக்கும். ஆதலால் x, π/2 − நெருங்கும்போது sinx/cos எனும் விகிதம் மிகையெண் மதிப்பாகவும் மற்றும் அதன் மதிப்பு அதிகரித்தும் ∞ − நெருங்குகிறது. எனவே x, π/2 எனும் நேர்க்கோடு வரைபடத்திற்கு செங்குத்து தொலைத் தொடுகோடாக  இருக்கும். அதேபோல் x, −π/2 –ஐ நெருங்கும்போது sin x/cos x எனும் விகிதம் குறையெண் மதிப்பாகவும் மற்றும் எண்ணளவு அதிகரித்தும் −∞ − நெருங்கும். எனவே x = −π/2 எனும் நேர்க்கோடும் வரைபடத்திற்கு செங்குத்து தொலைத் தொடுகோடாக இருக்கும். எனவே, படம் 4.15 ல் காண்பிக்கப்பட்டுள்ளது போல் −π/2 < x  < π/2   −க்கு, y = tan x இன் வரைபடத்தின் ஒரு கிளை கிடைக்கும். y = tan xன் முதன்மை சார்பகம் [−π/2, π/2] ஆகும்.


x = (2n+1) π/2, n மதிப்புகளைத் தவிர ஏனைய மெய்யெண்கள்களுக்கு தொடுகோட்டுச்சார்பு வரையறுக்கப்படுகிறது மற்றும் அதிகரிக்கும் சார்பாக இருக்கிறது. x = (2n+1) π/2, n ல் செங்குத்து தொலைத் தொடுகோடுகள் உள்ளது. x = nπ, n ஐப் பொறுத்து y = tan x ன் கிளைகள் சமச்சீராக உள்ளது. y = tan x ன் முழு வரைபடம் படம் 4.16−இல் காண்பிக்கப்பட்டுள்ளது.


குறிப்பு

வரைபடத்திலிருந்து y = tan x எனும் வளைவரையானது,  0 < x < π/2 −ல் மற்றும் π < x < 3π/2 −ல் மிகையெண் மதிப்பாக இருக்கிறது; π/2 < x < π −ல் மற்றும் 3π/2 < x < 2π −ல் குறையெண் மதிப்பாகவும் இருக்கிறது.



2. தொடுகோட்டுச் சார்பின் பண்புகள் (Properties of the tangent function) 

y = tan x ன் வளைவரையிலிருந்து கீழ்க்காணும் தொடுகோட்டுச் சார்பின் பண்புகளை அறியலாம்.

(i) தொடுகோட்டுச் சார்பின் வளைவரை தொடர்ச்சியற்றது.

மேலும் x = (2n + 1) π/2, n எனும் புள்ளிகளில் y = tan x தொடர்ச்சியற்றதாக உள்ளது.

(ii) −π/2 < x  < π/2   −க்கு y = tanx எனும் வளைவரையின் ஒரு பகுதி ஆதியைப் பொறுத்து சமச்சீராக உள்ளது.

(iii) x = (2n + 1) π/2, n ஆகிய இடங்களில், எண்ணற்ற தொலைத் தொடுகோடுகள் உள்ளது.

(iv) தொடுகோட்டுச் சார்பிற்கு மீப்பெருமமோ அல்லது மீச்சிறுமமோ இல்லை.

குறிப்புரை

(i) y = a tan bxன் வளைவரை = −π/2|b|  < x < π/2|b| எனும் இடைவெளியில் ஒரு முழுமையான சுழற்சியில் பெற்றுள்ளது மற்றும் அதன் காலம் π/|b| ஆகும்.

(ii) y = a tan bxக்கு தொலைத் தொடுகோடுகள் x = [ π / 2|b| ]  + [ π / |b| ] k, k ஆகும்.

(iii) தொடுகோட்டுச் சார்பிற்கு மீப்பெருமமோ அல்லது மீச்சிறுமமோ இல்லை என்பதால் tan x க்கான வீச்சு வரையறுக்க முடியாது.



3. நேர்மாறு தொடுகோட்டுச் சார்பு மற்றும் அதன் பண்புகள் (The inverse tangent function and its properties)

தொடுகோட்டுச் சார்பனது அதன் முழுசார்பகம் \{ π/2 + kπ , k } −ல் ஒன்றுக்கொன்றான சார்பு அல்ல ஆயினும், tan x : [−π/2, π/2] → என்பது இருபுறச் சார்பு. சார்பகமாகவும் மற்றும் [−π/2, π/2] வீச்சகமாகவும் கொண்டு நேர்மாறு தொடுகோட்டுச் சார்பை வரையறை செய்வோம்.


வரையறை 4.5

எவ்வொரு மெய்யெண் xக்கும், tan y = x என்றவாறு [−π/2, π/2] −ல் உள்ள தனித்த எண் y tan–l x என வரையறுக்கப்படுகிறது. அதாவது, நேர்மாறு தொடுகோட்டுச் சார்பு tan–l : (−∞, ∞) → [−π/2, π/2] tan–l (x) = y என வறையறுக்கத் தேவையானதும் மற்றும் போதுமானதுமான நிபந்தனை tan y = x மற்றும் y [−π/2, π/2] ஆகும்.

y = tan–l x  வரையறையிலிருந்து பின்வருவனவற்றை அறியலாம்.

(i) y = tan–l x என்பதற்கு தேவையானதும் மற்றும் போதுமானதுமான நிபந்தனை அனைத்து x மற்றும் −π/2 ≤  y  ≤  π/2  ற்கு  x = tan y ஆகும்.

(ii) ஒவ்வொரு மெய்யெண் xக்கும் tan (tan–lx) = x ஆகும். மேலும் y = tan–lx ஒரு ஒற்றைச் சார்பு ஆகும்.

(iii) tan–l (tan x) = x என இருக்கத் தேவையானதும் மற்றும் போதுமானதுமான நிபந்தனை −π/2 ≤  x  ≤  π/2   ஆகும்.

இங்கு tan–l (tan π) = 0 ஆகுமே தவிர π ஆகாது என்பதனைக் கவனிக்கவும்.

குறிப்பு

(i) நேர்மாறு தொடுகோட்டுச் சார்பு பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம், tan : [−π/2, π/2] → மற்றும்  tan–l : → [−π/2, π/2] என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

(ii) கட்டுப்படுத்தப்பட்ட சார்பகமான [−π/2, π/2] என்பது தொடுகோட்டுச் சார்பின் முதன்மை சார்பகமாகும். y = tan–l xx , எனும் மதிப்புகள் y = tan–l x வின் முதன்மை மதிப்புகளாகும்.



4. நேர்மாறு தொடுகோட்டுச் சார்பின் வரைபடம் (Graph of the inverse tangent function)

y = tan–l x  ன் சார்பு மெய்யெண் கோட்டின் முழுவதுமான (−∞, ∞) − சார்பகமாகவும் மற்றும் [−π/2, π/2] − வீச்சகமாகவும் கொண்டுள்ளது. இங்கு −π/2 மற்றும் π/2 ஆகிய இடங்களில் தொடுகோட்டுச் சார்பு வரையறுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே y = tan–l x வரைபடமானது y = −π/2  மற்றும் y = π/2  ஆகிய இரு கோடுகளுக்கிடையே மட்டும்தான் அமையப்பெற்றிருக்கும் மற்றும் அவ்விரு கோடுகளையும் எவ்விடத்திலும் தொடுவதில்லை. மாறாக, y = −π/2  மற்றும் y = π/2  ஆகிய இவ்விரு கோடுகளும் y = tan–l xக்கு கிடைமட்ட தொலைத் தொடுகோடுகளாக இருக்கின்றன.

படம் 4.17 மற்றும் படம் 4.18 ஆகிய இரு படங்களும் முறையே [−π/2, π/2]  எனும் சார்பகத்தைக் கொண்ட y = tan x ன் வரைபடத்தையும் மற்றும் (−∞, ∞) எனும் சார்பகத்தைக் கொண்ட y = tan–l x ன் வரைபடத்தையும் சித்தரிக்கிறது.


குறிப்பு

(i) நேர்மாறு தொடுகோட்டுச் சார்பு திடமாக ஏறும் சார்பு மற்றும் (−∞, ∞) எனும் சார்பகத்தில் தொடர்ச்சியானது.

(ii) y = tan–l xன் வரைபடம் ஆதி வழியாகச் செல்கிறது.

(iii) ஆதியைப் பொறுத்து வளைவரை சமச்சீராக இருப்பதால் சார்பு y = tan–l x ஆனது ஒரு ஒற்றைச் சார்பாகும்.


எடுத்துக்காட்டு 4.8

முதன்மை மதிப்பு காண்க: tan–l (√3).

தீர்வு

tan–l (√3) = y என்க. எனவே, tan y = √3. ஆகையால்,  y =  π/3 ஏனெனில் π/3 [−π/2, π/2] எனவே, tan–l (√3) ன் முதன்மை மதிப்பு π/3 ஆகும்.


எடுத்துக்காட்டு 4.9

மதிப்பு காண்க 

(i) tan–l (−√3) 

(ii) tan–l[tan(3π/5)]

(iii) tan(tan–l (2019))

தீர்வு

(i) tan–l (−√3) = tan–l[tan(−π/3)] = −π/3 , ஏனெனில் −π/3 [−π/2, π/2].

(ii) tan–l[tan(3π/5)]

tan θ = tan(3π/5) எனுமாறு θ [−π/2, π/2]. நாம் கண்டறிய வேண்டும்.

தொடுகோட்டுச் சார்பின் காலம் π  என்பதால், tan(3π/5) = tan(3π/5 −π) = tan(−2π/5)  

எனவே, tan–l[tan(3π/5)] = tan–l[tan(−2π/5)]  = −2π/5 , ஏனெனில் −2π/5 [−π/2, π/2].

(iii) tan(tan–l x) = x, x என்பதால், tan(tan–l (2019)) = 2019 ஆகும்.


எடுத்துக்காட்டு 4.10

மதிப்பு காண்க tan–l(−1) + cos–l(1/2) + sin–l(−1/2).

தீர்வு

tan–l (−1) = y என்க. எனவே, tan y = −1 = − tan(π/4) = tan(−π/4). 

இங்கு −π/4 [−π/2, π/2] என்பது குறிப்பிடதக்கது. எனவே, tan–l (−1) = −π/4 .

இனி, cos–l (1/2) =  y எனில் cos y = 1/2 = cos π/3 .

π/3 [0, π] என்பதால் cos–l (1/2) = π/3

மேலும், sin–l(−1/2) = y எனில் sin y = −1/2 = sin(−π/6)

−π/6 [−π/2, π/2] என்பதால் sin–l(−1/2) = −π/6 .

எனவே , tan–l(−1) + cos–l(1/2) + sin–l(−1/2) =  −π/4 + π/3 − π/6 = − π/12 .


எடுத்துக்காட்டு 4.11

நிரூபி tan(sin–l x) =

தீர்வு

x = 0 எனில், இருபுறமும் 0 ஆகும்

0 < x < 1. என்க.

θ = sin–l x என்க. எனவே 0 < θ < π/2 ஆகும். தற்போது sin θ = x /1 என்பதால்,.

எனவே tan (sin–l x) =

அடுத்தாக −1 < x < 0 என்க. எனவே, θ = sin–l x என்பதிலிருந்து −π/2 < θ < 0.

sin θ = x /1 என்பதால், tan θ =

இம்முறையிலும் tan (sin–l x) = என கிடைக்கின்றது.

சமன்பாடுகள் (1), (2) மற்றும் (3) ஆகியவற்றிலிருந்து tan (sin–l x) =   , −1 < x < 1 என நிறுவப்படுகின்றது.

Tags : Definition, Graph, Properties, Solved Example Problems வரையறை, வரைபடம், பண்புகள், எடுத்துக்காட்டு கணக்குகள்.
12th Maths : UNIT 4 : Inverse Trigonometric Functions : The Tangent Function and the Inverse Tangent Function Definition, Graph, Properties, Solved Example Problems in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 4 : நேர்மாறு முக்கோணவியல் சார்புகள் : தொடுகோட்டுச் சார்பு மற்றும் நேர்மாறு தொடுகோட்டுச் சார்பு (The Tangent Function and the Inverse Tangent Function) - வரையறை, வரைபடம், பண்புகள், எடுத்துக்காட்டு கணக்குகள் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 4 : நேர்மாறு முக்கோணவியல் சார்புகள்