Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணிதம் | கோடான்ஜெண்ட் சார்பு மற்றும் நேர்மாறு கோடான்ஜெண்ட் சார்பு (The Cotangent Function and the Inverse Cotangent Function)

வரையறை, வரைபடம், பண்புகள் - கோடான்ஜெண்ட் சார்பு மற்றும் நேர்மாறு கோடான்ஜெண்ட் சார்பு (The Cotangent Function and the Inverse Cotangent Function) | 12th Maths : UNIT 4 : Inverse Trigonometric Functions

   Posted On :  24.02.2024 12:32 am

12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 4 : நேர்மாறு முக்கோணவியல் சார்புகள்

கோடான்ஜெண்ட் சார்பு மற்றும் நேர்மாறு கோடான்ஜெண்ட் சார்பு (The Cotangent Function and the Inverse Cotangent Function)

கோடான்ஜெண்ட் சார்பு என்பது cot x = 1/tan x ஆகும். tan x = 0 அல்லது x = nπ, n ∈ ℤ எனும் மதிப்புகளைத் தவிர x −ன் ஏனைய மெய்யெண் மதிப்புகளுக்கு கோடான்ஜெண்ட் சார்பு வரையறுக்கப்படுகிறது.

கோடான்ஜெண்ட் சார்பு மற்றும் நேர்மாறு கோடான்ஜெண்ட் சார்பு (The Cotangent Function and the Inverse Cotangent Function)

கோடான்ஜெண்ட் சார்பு என்பது cot x = 1/tan x ஆகும். tan x = 0 அல்லது x = nπ, n எனும் மதிப்புகளைத் தவிர xன் ஏனைய மெய்யெண் மதிப்புகளுக்கு கோடான்ஜெண்ட் சார்பு வரையறுக்கப்படுகிறது. எனவே, கோடான்ஜெண்ட் சார்பின் சார்பகமானது \{ nπ : n } மற்றும் அதன் வீச்சகம் (−∞, ∞) ஆகும். tan x போன்று கோடான்ஜெண்ட் சார்பும் ஓர் ஒற்றைச் சார்பாகவும் மற்றும் அதன் காலம் π ஆகவும் உள்ளது.



1. கோடான்ஜெண்ட் சார்பின் வரைபடம் (The graph of the cotangent function) 

கோடான்ஜெண்ட் சார்பு (0, 2π)\{ π } எனும் கணத்தில் தொடர்ச்சியாக இருக்கிறது. (0, 2π)\{ π }.−ல் முதலில் கோடான்ஜெண்ட் சார்பின் வரைபடத்தை வரைவோம். முதல் மற்றும் மூன்றாம் காற்பகுதியில் கோடான்ஜெண்ட் மிகையெண் மதிப்புகளை மட்டுமே பெறுகிறது. இரண்டாவது மற்றும் நான்காவது காற்பகுதிகளில் குறையெண் மதிப்புகளை மட்டுமே பெறுகிறது. கோடான்ஜெண்ட் சார்பிற்கு மீப்பெரும்மோ அல்லது மீச்சிறுமமோ இல்லை. x (0, π/2] எனும்போது கோடான்ஜெஸ்ட் சார்பு, ∞ −லிருந்து 0 −க்கு இறங்குகிறது; . x   [π/2, π) எனும்போது 0 −லிருந்து −∞ −க்கு இறங்குகிறது; x   (π/2, 3π/2] எனும்போது −∞ லிருந்து 0 வரை இறங்குகிறது; x [3π/2, 2π) எனும்போது, 0−லிருந்து −∞ வரை இறங்குகிறது


y = cot x , x (0, 2π)\{ π } −க்கான வரைபடம் படம் 4.27−ல் காண்பிக்கப்பட்டுள்ளது

(0, 2π)\{ π }−ல் அமைந்த y = cot x ன் வரைபடம் போல (2π, 4π)\{3π} , (4π, 6π)\{5π}, … , மற்றும் …, (−4π, −2π)\{−3π}, (−2π, 0)\{−π}. ஆகிய இடைவெளிகளிலும் y = cot x ன் வரைப்படம் திரும்ப, திரும்ப அமைகிறது. \{ nπ : n } − சார்பகமாகக் கொண்ட கோடான்ஜெண்ட் சார்பின் முழு வரைபடமும் படம் 4.28−ல் காண்பிக்கப்பட்டுள்ளது.




2. நேர்மாறு கோடான்ஜெண்ட் சார்பு (Inverse cotangent function)

கோடான்ஜெண்ட் சார்பு அதன் முழுசார்பகத்தில் \{ nπ : n } ஒன்றுக்கொன்று சார்பு அல்ல. ஆயினும் கட்டுபடுத்தப்பட சார்பகமான (0, π)−ல், cot : (0, π) → (−∞, ∞) ஆனது இருபுறச் சார்பாகும். எனவே, (−∞, ∞) சார்பகமாகவும், (0, π) வீச்சாகவும் கொண்டு நேர்மாறு கோடான்செண்ட் சார்பை வரையறுப்போம்.


வரையறை 4.8

நேர்மாறு கோடான்ஜெண்ட் சார்பான cot−1 : (−∞, ∞) → (0, π) என்பது cot−1  (x) = y என வரையறுக்க தேவையானதும் மற்றும் போதுமானதுமான நிபந்தனைகள்  y (0, π) மற்றும் cot y = x ஆகும்.



3. நேர்மாறு கோடான்ஜெண்ட் சார்பின் வரைபடம் (Graph of the inverse cotangent function)

நேர்மாறு கோடான்ஜெண்ட் சார்பான y = cot−1 x என்பது சார்பகமாகவும் மற்றும் (0, π) − வீச்சாகவும் கொண்ட சார்பாகும். அதாவது cot−1 x : (−∞, ∞) → (0, π) ஆகும்

படம் 4.29 மற்றும் படம். 4.30 ஆகியவற்றில் வரைபடங்கள் முறையே முதன்மை சார்பகத்தில் கோடான்ஜெண்ட் சார்பின் வரைபடம் மற்றும் நேர்மாறு கோடான்ஜெண்ட் சார்பின் வரைபடம் அதற்குரிய சார்பகத்திலும் கொடுக்கப்பட்டுள்ளன.


Tags : Definition, Graph, Properties வரையறை, வரைபடம், பண்புகள்.
12th Maths : UNIT 4 : Inverse Trigonometric Functions : The Cotangent Function and the Inverse Cotangent Function Definition, Graph, Properties in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 4 : நேர்மாறு முக்கோணவியல் சார்புகள் : கோடான்ஜெண்ட் சார்பு மற்றும் நேர்மாறு கோடான்ஜெண்ட் சார்பு (The Cotangent Function and the Inverse Cotangent Function) - வரையறை, வரைபடம், பண்புகள் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 4 : நேர்மாறு முக்கோணவியல் சார்புகள்