Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணிதம் | சீகண்ட் சார்பு மற்றும் நேர்மாறு சீகண்ட் சார்பு (The Secant Function and Inverse Secant Function)

வரையறை, வரைபடம், பண்புகள் - சீகண்ட் சார்பு மற்றும் நேர்மாறு சீகண்ட் சார்பு (The Secant Function and Inverse Secant Function) | 12th Maths : UNIT 4 : Inverse Trigonometric Functions

   Posted On :  24.02.2024 12:26 am

12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 4 : நேர்மாறு முக்கோணவியல் சார்புகள்

சீகண்ட் சார்பு மற்றும் நேர்மாறு சீகண்ட் சார்பு (The Secant Function and Inverse Secant Function)

சீகண்ட் சார்பு என்பது கொசைன் சார்பின் தலைகீழ்ச்சார்பு என வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே, y = sec x = 1/cos x என்பது cos x = 0 எனும்போது தவிர ஏனைய x மதிப்புகளுக்கு வரையறுக்கப்படுகிறது.

சீகண்ட் சார்பு மற்றும் நேர்மாறு சீகண்ட் சார்பு (The Secant Function and Inverse Secant Function)

சீகண்ட் சார்பு என்பது கொசைன் சார்பின் தலைகீழ்ச்சார்பு என வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே, y = sec x = 1/cos x என்பது cos x = 0 எனும்போது தவிர ஏனைய x மதிப்புகளுக்கு வரையறுக்கப்படுகிறது. ஆகையால், y = sec x ன் சார்பகம் \{(2n + 1) π/2 : n } ஆகும். −1 ≤ cos x ≤ 1 என்பதால், y = sec x என்பது (−1, 1) −ல் எம்மதிப்புகளையும் பெறாது. எனவே, சீகண்ட் சார்பின் வீச்சகம் (−∞,1] [1,∞) ஆகும். சீகண்ட் சார்பிற்கு மீப்பெருமமோ அன்றி மீச்சிறுமமோ இல்லை. y = sec x என்பதுகொண்ட காலம் சார்பு மற்றும் இரட்டைச் சார்பாகவும் அமைகிறது.



1. சீகண்ட் சார்பின் வளைவரை (The graph of the secant function)

0 ≤ x  ≤ 2π , x ≠ π/2 , 3π/2 −ல் சீகண்ட் சார்பின் வளைவரை படம் 4.23−ல் காண்பிக்கப்பட்டுள்ளது. முதல் மற்றும் நான்காம் காற்பகுதிகளில் அதாவது −π/2 < x  < π/2 இடைவெளியில், y = sec x மிகையெண் மதிப்புகளை மட்டுமே பெறுகிறது. அதே சமயம் இரண்டாவது மற்றும் மூன்றாவது காற்பகுதிகளில் அதாவது π/2 < x  < 3π/2  இடைவெளியில் குறையெண் மதிப்புகளையே பெறுகிறது.


0 ≤ x  ≤ 2π , x ≠ π/2 , 3π/2, எனும்போது சீகண்ட் சார்பு தொடர்ச்சியாக இருக்கும். x [0, π/2) எனும்போது சீகண்ட் சார்பின் மதிப்பு 1 முதல்வரை உயரும். மேலும், x (π/2, π] எனும்போது சீகண்ட் சார்பின் மதிப்பு −∞ முதல் −1 வரை உயரும். x [π, 3π/2) எனும்போது −1 முதல் – ∞ வரை இறங்கும். x (3π/2, 2π] எனும்போதுமுதல் 1 வரை இறங்கும். y = sec x ஒரு 2π −காலம் கொண்ட சார்பாகும், எனவே 0 ≤ x  ≤ 2π , x ≠ π/2 , 3π/2 க்கான வளைவரைப் பகுதியே, [2π, 4π]\{5π/2, 7π/2}, [4π, 6π]\ {9π/2, 11π/2}, … மற்றும், …  [−4π, −2π]\ {−7π/2, −5π/2}, [−2π, 0]\ {−3π/2, − π/2},  ஆகிய இடைவெளிகளில் திரும்ப, திரும்ப அமைகின்றது. தற்போது y = sec xன் முழுவரைபடமும் படம் 4.24−ல் காண்பிக்கப்பட்டுள்ளது.




2. நேர்மாறு சீகண்ட் சார்பு (Inverse secant function)

sec x : [0, π]\{ π /2} → \(−1,1)  எனும் சீகண்ட் சார்பு கட்டுப்படுத்தப்பட்ட சார்பகமான [0, π]\{ π /2} −ல் ஓர் இருபுறச் சார்பு ஆகும். எனவே நேர்மாறு சீகண்ட் சார்பு என்பது \(−1,1) என்பதை சார்பகமாகவும் மற்றும் [0,π]\{π/2} வீச்சகமாகவும் கொண்டு வரையறுக்கப்படுகிறது.


வரையறை 4.7

sec y = x மற்றும் y [0, π]\{ π /2} எனும்போது நேர்மாறு சீகண்ட் சார்பு sec−1 \(−1,1) → [0, π]\{ π /2} sec−1 (x) = y என வரையறுக்கப்படுகிறது.



3. நேர்மாறு சீகண்ட் சார்பின் வரைபடம் (Graph of the inverse secant function) 

நேர்மாறு சீகண்ட் சார்பு, y = sec−1 x என்பது \(−1,1) − சார்பகமாகவும் மற்றும் [0, π]\{ π /2} − வீச்சாகவும் கொண்ட சார்பாகும். அதாவது, sec−1 : \(−1,1) → [0, π]\{ π /2}.

படம் 4.25 மற்றும் படம் 4.26 ஆகியவற்றில், முறையே முதன்மை சார்பகத்தில் சீகண்ட் சார்பின் வரைபடமும் மற்றும் நேர்மாறு சீகண்ட் சார்பின் வரைபடம் அதற்குறிய சார்பகத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது.



குறிப்புரை

y = sec x அல்லது cosec x எனும் வரைபடத்தை எளிதாக வரைய கீழ்க்காணும் வழிமுறையைப் பின்பற்றவும்.

(i) y = cos x அல்லது sin x வரைபடத்தை வரையவும்.

(ii) x வெட்டுத்துண்டுகள் சந்திக்கும் புள்ளிகளில் செங்குத்து தொலைத் தொடுகோடுகளை வரையவும். y மதிப்புகளின் தலைகீழியாக எடுத்துக் கொள்ளவும்.

Tags : Definition, Graph, Properties வரையறை, வரைபடம், பண்புகள்.
12th Maths : UNIT 4 : Inverse Trigonometric Functions : The Secant Function and Inverse Secant Function Definition, Graph, Properties in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 4 : நேர்மாறு முக்கோணவியல் சார்புகள் : சீகண்ட் சார்பு மற்றும் நேர்மாறு சீகண்ட் சார்பு (The Secant Function and Inverse Secant Function) - வரையறை, வரைபடம், பண்புகள் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 4 : நேர்மாறு முக்கோணவியல் சார்புகள்