பொருளாதாரம் - வங்கியியல் | 12th Economics : Chapter 6 : Banking
வணிக வங்கிகள் வாணிபத்திற்கான குறுகியகால கடனை அளித்தல், மற்றும் கடன் உருவாக்கம் செய்யும் நிறுவனங்கள் ஆகும்"
- கல்பர்ட்சன் (Culbertson)
புரிதலின் நோக்கங்கள்
1. மையவங்கி மற்றும் வணிக வங்கிகளின் பணிகள்
2. வங்கி சாரா நிதி நிறுவனங்களின் பணிகளைப் புரிந்துகொள்ளல்.
அறிமுகம் (Introduction)
பொருளாதார நடவடிக்கைளான வியாபாரம், வாணிபம், விவசாயம் ஆகியவற்றிற்கு தேவைப்படும் நிதி உயிர்வாழ இரத்தம் தேவைப்படுவதைப் போன்றது. வங்கிகள் வைப்புகளை ஏற்றுக் கொள்ளுதல், கடன்களை வழங்குதல் ஆகிய அடிப்படை நிதிநட்டிவக்கைகளை மேற்கொள்கின்றது. நவீன வாணிபத்தின் முதுகெலும்பாக வங்கித்துறை செயல்படுகிறது. நாட்டின் மேம்பாட்டிற்கு வங்கியமைப்பு மிகமுக்கிய பங்களிப்பினை செய்துவருகிறது. நாடுகளில் நிதிநிலைத் தன்மையை கருத்திற்கொண்டு வங்கிகளின் செயல்பாடுகள் நெறிப்படுத்தப்படுகின்றது.