Home | 12 ஆம் வகுப்பு | 12வது பொருளாதாரம் | வணிக வங்கிகளின் கடன் உருவாக்க நுட்பம்

வங்கியியல் - வணிக வங்கிகளின் கடன் உருவாக்க நுட்பம் | 12th Economics : Chapter 6 : Banking

   Posted On :  15.03.2022 09:13 pm

12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 6 : வங்கியியல்

வணிக வங்கிகளின் கடன் உருவாக்க நுட்பம்

வங்கிக் கடன் என்பது வாடிக்கையாளர்களின் வைப்புகளிலிருந்து, தேவைப்படுவோருக்கு அவர்களின் விண்ணப்பம் மற்றும் ஒப்பந்தத்தின் போல் கடன் மற்றும் முன்பணம் கொடுப்பது ஆகும்.

வணிக வங்கிகளின் கடன் உருவாக்க நுட்பம் (The Technique of Credit Creation)

வங்கிகளின் கடன் உருவாக்கம் என்பது மிக முக்கிய செயல் ஆகும். வங்கிக் கடன் என்பது வாடிக்கையாளர்களின் வைப்புகளிலிருந்து, தேவைப்படுவோருக்கு அவர்களின் விண்ணப்பம் மற்றும் ஒப்பந்தத்தின் போல் கடன் மற்றும் முன்பணம் கொடுப்பது ஆகும். வங்கிகள் வழங்கும் கடன்கள் பொருளாதாரத்தில் நிகர பண அளிப்பினை அதிகப்படுத்தும். சுருக்கமாக சொன்னால் வங்கிகளின் கடனளிப்பு பணத்தை உருவாக்கும், அதே கடன்கள் வாங்கியோரால் திருப்பிச் செலுத்தப்படும் பொழுது கூடுதலாக உருவான பணம் மறைந்து போகும். இதை ஒருசிலர் மாயை (illusion) என்றும் கூறுகின்றனர்

வணிக வங்கிகள் கேட்பு வைப்புக்களின் அளவை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ முடியும். அதிக அளவு கடன்களை அதிகரிக்க முடியும். வணிக வங்கிகள் தங்களின் கடன் அல்லது முன்பணம் அளிக்கும் முறை மூலமாக அல்லது சொத்துக்களை வாங்கும் தன்மைகள் மூலமாகவும் தேவை வைப்புக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ முடிகிறது. இச்சக்தி வங்கிகள் வைப்புக்களை புதிய வைப்புக்களை உருவாக்குவதன் மூலம் சாத்தியமாகிறது. இது எப்படி சாத்தியம் பின் வரும் பகுதி நமக்கு விளக்குகிறது. அதற்கு முன்னர் வணிக வங்கிகள் உருவாக்கும் வைப்பு முறைகளை தெரிந்து கொள்ள வேண்டும்.

முதல்நிலை/செயலற்ற வைப்புக்கள் மற்றும் பெறப்படும் செயல்படும் வைப்புக்கள்

நவீன வங்கிகளால் உருவாக்கப்படும் வைப்புக்கள் இருவகைப்படும். அவைகள் முதல் நிலை அல்லது செயலற்ற வைப்புகள் (Primary or Passive Deposits) > மற்றும் பெறப்படும் அல்லது செயல்படும் வைப்புகள் (Derived or Active Deposits) ஆகும்.

ஒரு வாடிக்கையாளர் தனது ரொக்கப் பணத்தினை வங்கியில் செலுத்துகிறார் எனில் அவரது பெயரில் பற்று வைக்கப்படும். இது முதல்நிலை வைப்பு அல்லது செயல்படா வைப்பு என அழைக்கப்படுகிறது.

ஒருவருக்கு வழங்கப்படும் கடன், ரொக்கமாக கையில் கொடுக்கப்படாமல் அவர் கணக்கில் செலுத்தப்படும். இவ்வாறு செலுத்தப்படும் தொகை பெறப்பட்ட வைப்பு அல்லது செயல்படும் வைப்பு எனப்படுகிறது.

முதன்மை வைப்புக்கள்

•  முதன்மை வைப்புக்களைக் கொண்டே வங்கிகள் கடன்களும் முன்பணங்களும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது. 

• இதற்கான முயற்சிகளை வாடிக்கையாளர்களே செய்கின்றனர். இதில் வங்கிகளின் பங்கு செயலற்றது.

• எனவே இந்த வைப்புக்கள் செயலற்ற வைப்புக்கள் எனப்படுகின்றது.

கடன் உருவாக்கம் என்பது கடன் மற்றும் முன்பண பெருக்கத்தினை குறிக்கும். வழங்கப்படும் ஒவ்வொரு கடனும் புதிய வைப்பினை உருவாக்குகிறது. முதல் நிலை வைப்புக்களை பெறும் பொழுது அப்பணம் முழுமையுமே வணிக வங்கிகள் கடனாக அளித்திட முடியாது. மைய வங்கி அறிவுறுத்தியிருக்கும் குறைந்தபட்ட விகித அளவுக்கு குறையாமல் வணிக வங்கிககள் ரொக்க இருப்பாக வைத்திருக்க வேண்டும்

உதாரணத்திற்கு வணிக வங்கிகள் 20 சதவிகித பணத்தினை வைத்துக்கொள்ள மைய வங்கி அறிவுறுத்தியிருக்கும். இச்சூழ்நிலையில் கடன் உருவாக்கத்தைப் பற்றி அறிவோம்.

1. வங்கிகள் ரொக்க கையிருப்பு விகிதத்தை விட அதிகமாக ரொக்கப் பணம் வைத்திருக்க மாட்டார்கள். அவ்வாறு இருந்தால் அந்தப் பணத்தை கடனாக வழங்கி விடுவார்கள்.

2. எல்லா மக்களும் ஒரே நேரத்தில் பணத்தை எடுக்கமாட்டார்கள். அதனால் குறைந்தபட்ச ரொக்க கையிருப்பு காலியாகி விடாது.

மேற்கண்ட அடிப்படையில் வணிக வங்கிகளின் கடன் உருவாக்கம் எவ்வாறு நிகழ்கிறது என உதாரணத்துடன் காண்போம். ஒருவர் வங்கியில் ₹1,000த்தினை செலுத்துவதாக எடுத்துக்கொள்வோம். அவ்வாறு செலுத்துப்படும் பணம், வாடிக்கையாளரின் கணக்கில் சேர்க்கப்பட்டு முதல்நிலை வைப்பாக இருக்கும். வங்கியின் மொத்த பண இருப்பில், அதாவது வங்கியின் ரொக்க பாதுகாப்பு பெட்டகத்தில் ₹1,000ம் அதிகரிக்கும். இந்த நிலையில் பொருளாதாரத்தில் உள்ள பண அளிப்பு அதிகரிக்காது. ஏனெனில் ரொக்கமாக வங்கியில் செலுத்தப்பட்ட ₹1,000 வாடிக்கையாளரின் வங்கிப்பணமாக உள்ளது.

மைய வங்கியின் அறிவுறுத்தலின்படி 20 சதவிகித குறைந்தபட்ச ரொக்க இருப்பான ₹200ஐ இருப்பில் வைக்க வேண்டிய தொகை போக ₹800 வங்கியில் கடன்கொடுக்க தயார் நிலையில் இருக்கும். இரண்டாவது நபர் கடன் கேட்டு விண்ணப்பிக்கும் பொழுது அவருக்கு ₹800 கடனாக அளிக்கப்படும். இங்கு கவனிக்கப்பட வேண்டியது, அவர் கேட்கும் கடன் ரொக்கமாக அளிக்கப்படாமல் அவரது கணக்கில் வைப்பாக வைக்கப்படும். இதுவே தருவிக்கப்பட்ட வைப்பு (Derived Deposit) ஆகும். அவரும், உடனே பணம் முழுவதையும் கணக்கிலிருந்து எடுக்கமாட்டார். அந்த தருவிக்கப்பட்ட வைப்பிலிருந்து ₹800ல் 20 சதவிகிதம் போக 1640 மீண்டும் கடன்கொடுக்க தயார் நிலையில் இருக்கும். மூன்றாவதாக ஒரு நபர், கடன் கேட்டு விண்ணப்பிக்கும்பொழுது, அவருக்கு ₹640ஐ கடனாக வழங்கி அவரது கணக்கில் வைப்பாக அளிப்பார்கள். அந்த தருவிக்கப்பட்ட வைப்பான ₹640ல் குறைந்தபட்ட தொகையான ₹128 போக, ₹512 கடன்வழங்க தயார் நிலையில் இருக்கும். இவ்வாறு புதிய தருவிக்கப்பட்ட வைப்புகளும், கடன் வழங்குதலும் தொடர்ந்து நடைபெறும்.

வணிக வங்கியின் வைப்புகளின் அளவு ₹1000 + 800 + 640 + 512 +.... என்று செல்லும். மொத்த வைப்புகளின் அளவு இறுதியாக ₹5000த்தினை அடையும். எவ்வாறெனில், பண பெருக்கியின் அளவு (Money Multiplier) = 1/20 x 100 = 5 ஆகும். ஆகவே, மொத்த கடன் உருவாக்கம் 1000 x 5 = ₹ 5000 ஆகும். இந்த கடன் உருவாக்க நடைமுறையின் காரணமாக ₹1000 என்ற வைப்பு ₹5000ஆக பெருகுகின்றது என்பதனை அறிந்து கொண்டோம்.


Tags : Banking வங்கியியல்.
12th Economics : Chapter 6 : Banking : Mechanism / Technique of Credit Creation by Commercial Banks Banking in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 6 : வங்கியியல் : வணிக வங்கிகளின் கடன் உருவாக்க நுட்பம் - வங்கியியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 6 : வங்கியியல்