வங்கியியல் - வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் (NBFI) | 12th Economics : Chapter 6 : Banking
வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் (Non-Banking Financial Institutions – NBFIs)
ஒரு வங்கியல்லா நிதி நிறுவனம் (Nonbanking Financial Institution - NBFI) அல்லது வங்கியல்லா நிதி நிறுமம் (Non-banking Financial Company - NBFC) என்பது ஒரு நிதி நிறுவனம் ஆகும். அது முழு வங்கிக்கான உரிமம் கொண்டதும் அல்ல, மற்றும் மைய வங்கியால் கண்காணிக்கப்படுவதும் இல்லை.
வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் முழுமையான வங்கிப் பணிகளைச் செய்யாமல் மற்ற நிதி பரிமாற்றங்களை மேற்கொள்கின்றது. அவைகள் வைப்புக்களைப் பெற்றுக்கொண்டு கடன்களை வழங்குகின்றது. மக்களின் சேமிப்பைத் திரட்டி முதலீட்டு நடவடிக்கைகளுக்கு நிதியுதவி அளிக்கின்றது. சுருங்கச்சொன்னால் அவை கடன் பெற்று கடன் வழங்குகின்றது. அவை பண அங்காடியிலும் மூலதன அங்காடியிலும் செயல்படுகின்றன.
ஒரு வங்கியல்லா நிதி நிறுவனம் இருவகைப்படும். பங்குச் சந்தை மற்றும் இதர நிதி நிறுவனங்கள். இரண்டாவது வகையில் வருவது நிதி நிறுவனங்கள், நிதி கழகங்கள், சீட்டு நிறுவனங்கள், கட்டிட சங்கங்கள், முதல்நிலை பங்கு வெளியீட்டு நிறுவனங்கள், முதலீட்டு அமைப்புகள், யூனிட் டிரஸ்ட் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள்.