வங்கியியல் - விவசாய மறுகடன் மேம்பாட்டு கழகம் (ARDC) | 12th Economics : Chapter 6 : Banking
விவசாய மறுகடன் மேம்பாட்டு கழகம் (Agricultural Refinance Development Corporation - ARDC)
இந்திய விவசாயிகளுக்கு மத்திய மற்றும் நீண்டகால கடன்களே அதிகம் தேவை இருந்தபொழுதிலும் அதைப் பெறுவதில் சிக்கல்கள் இருந்தன. இவ்வகைக் கடன்களை அளிக்கும் ஒரே அமைப்பு ரீதியான நிறுவனம் நிலவள வங்கிகள் (Land Development Banks) ஆகும். ஆனால், அந்த வங்கிகள் போதுமான அளவு வெற்றியடையாமல் பின்தங்கியிருந்தது. அதே சமயம் இந்த நோக்கத்திலான கடன்களின் தேவை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வந்தது. இந்த இடைவெளியினைப் போக்கவும், பல்வேறு விவசாய மேம்பாட்டு திட்டங்களுக்கான நிதி ஆதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும் பாராளுமன்ற சட்டத்தின் அடிப்படையில் ஜூலை 1, 1963-ல் விவசாய மறுகடன் மேம்பாட்டு கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
விவசாய மறுகடன் மேம்பாட்டு கழகத்தின் நோக்கங்கள்
(i) மத்திய நிலவள வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள் மற்றும் பட்டியல் வங்கிகள் (Scheduled Banks) போன்ற தகுதிவாய்ந்த அமைப்புகளுக்கு தேவையான மறுநிதியினை வழங்குவது.
(ii) இந்தியரிசர்வ்வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட மத்திய நிலவள வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள் மற்றும் பட்டியல் வங்கிகள் வெளியிடும் கடன் பத்திரங்களை வாங்கி அதன் மூலம் நிதியளிப்பினை செய்வது.