பொருளாதாரம் - மைய வங்கியின் தோற்ற வரலாறு | 12th Economics : Chapter 6 : Banking
மைய வங்கியின் தோற்ற வரலாறு (History of Central Bank)
1656-ல் நிறுவப்பட்ட ஒரு தனியார் வங்கியிலிருந்து தோன்றியதுதான் உலகின் முதல் மைய வங்கியான ஸ்வீடன் நாட்டு ரிக்ஸ் வங்கி. இம்மைய வங்கி 1897-ஆம் ஆண்டு பணத்தை வெளியிடுவதற்கான முழு உரிமையை பெற்றது. ஆனால், வங்கிக் கலையின் அடிப்படையில் 1864ல் தோற்றுவிக்கப்பட்டு பணத்தை வெளியிட்ட முதல் மைய வங்கி இங்கிலாந்து வங்கியாகும் (Bank of England).
1920-ஆம் ஆண்டு பிரஸ்ஸல்ஸ் நகரில் கூட்டப்பட்ட பன்னாட்டு நிதிய மாநாட்டில் (International Finance Conference) எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் 1921 முதல் 1954ஆம் ஆண்டுவரையான காலகட்டத்தில் பெரும்பாலான நாடுகளில் மையவங்கி அமைப்புகள் தோற்றுவிக்கப்பட்டன. தென் ஆப்பிரிக்க ரிசர்வ் வங்கி (1921), சீன மைய வங்கி (1928), நியூசிலாந்து ரிசர்வ் வங்கி (1934), இந்திய ரிசர்வ் வங்கி (1934), சிலோன் மைய வங்கி (1950) மற்றும் இஸ்ரேல் மைய வங்கி (1954) போன்றவை அந்தந்த நாடுகளில் ஆரம்பிக்கப்பட்ட மைய வங்கிகளில் சில.