Home | 12 ஆம் வகுப்பு | 12வது பொருளாதாரம் | வட்டார ஊரக வங்கிகள் (RRBs)

வங்கியியல் - வட்டார ஊரக வங்கிகள் (RRBs) | 12th Economics : Chapter 6 : Banking

   Posted On :  15.03.2022 10:02 pm

12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 6 : வங்கியியல்

வட்டார ஊரக வங்கிகள் (RRBs)

இவ்வங்கிகளின் நோக்கம் விவசாயிகளுக்கு, குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகள் (small and marginal farmers)> நிலமற்ற விவசாய தொழிலாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் சிறு தொழில்முனைவோர்களுக்கு கடன் வழங்குவதன் மூலம் ஊரக பகுதியில் விவசாயம், வர்த்தகம், தொழில் மற்றும் இதர உற்பத்தி நடடிவக்கைகளை மேம்படுத்துவது ஆகும்.

வட்டார ஊரக வங்கிகள் (Regional Rural Banks - RRBs)

ஊரக நிதி வழங்கும் நிறுவனங்களில் அடுத்த முக்கியமான வங்கியமைப்பு வட்டார ஊரக வங்கிகள் ஆகும். இது கிராமின் வங்கிகள் (Gramin Banks) என்றும் அழைக்கப்படுகிறது. மறைந்த பிரதமர் திருமதி இந்திராகாந்தி அவர்களின் 20-அம்ச பொருளாதர திட்டத்தின் ஒரு முக்கிய அம்சம் கிராமப்புறங்களில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் கைவினைஞர்களை தொடர் கடன்சுழலில் (indebtedness) இருந்து விடுவிப்பதாகும். அக்கால கட்டத்தில் அமல்படுத்தப்பட்ட புதிய பொருளாதார திட்டத்தினை தொடர்ந்து வட்டார ஊரக வங்கிகள் 1975 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன. இவைகளுக்கான மூலதன 50% மைய அரசாலும் 15% மாநில அரசாலும் 35% நடத்துகின்ற வணிக வங்கிகளாலும் அளிக்கப்பட்டது.

இவ்வங்கிகளின் நோக்கம் விவசாயிகளுக்கு, குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகள் (small and marginal farmers)> நிலமற்ற விவசாய தொழிலாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் சிறு தொழில்முனைவோர்களுக்கு கடன் வழங்குவதன் மூலம் ஊரக பகுதியில் விவசாயம், வர்த்தகம், தொழில் மற்றும் இதர உற்பத்தி நடடிவக்கைகளை மேம்படுத்துவது ஆகும்.



வட்டார ஊரக வங்கிகளுக்கான சலுகைகள்

ஆரம்பத்தில் பங்குமூலதனத்தை வழங்கிய வணிகவங்கிகள் அவைகளுக்கான மேலாண்மை மற்றும் நிதி தொடர்பான உதவிகளை மற்றும் குறைந்த அளவாக 8.5 சதவிகித வட்டியில் கடன்களையும் வழங்கி வந்தன. மேலும், வணிகவங்கிகள் தனது அலுவலர்களை அயற்பணியாளர்களாக வட்டார வங்கிகளுக்கு அனுப்புவது, மற்றும் வட்டார ஊரக வங்கிப் பணியாளர்களுக்கு ஆகும் பயிற்சி செலவுகளை மேற்கொள்வது ஆகிய சலுகைகளை வழங்குகிறது. மத்திய ரிசர்வ் வங்கி வட்டார ஊரக வங்கிகளுக்கு கீழ்க்கண்ட சலுகைகள் வழங்கியுள்ளது.

அ) வட்டார ஊரக வங்கிக்கள் 3 சதவிகித ரொக்க இருப்பினையும், 25 சதவிகித சட்டபூர்வ நீர்மை இருப்பினை வைத்திருக்கவும் அனுமதிக்கப்படுகிறது

ஆ) நபார்டு வங்கி மூலம் இவைகளுக்கு மறு கடன்களையும் வழங்கி வருகின்றன.


Tags : Banking வங்கியியல்.
12th Economics : Chapter 6 : Banking : Regional Rural Banks (RRBs) Banking in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 6 : வங்கியியல் : வட்டார ஊரக வங்கிகள் (RRBs) - வங்கியியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 6 : வங்கியியல்