Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | C++ : வெளியீடு வடிவமைப்பு
   Posted On :  24.09.2022 08:37 pm

11வது கணினி அறிவியல் : அலகு 9 : C++ ஓர் அறிமுகம்

C++ : வெளியீடு வடிவமைப்பு

எளிதாக படிப்பதற்கும் மற்றும் புரிந்து கொள்வதற்கும் தேவைப்படும் வெளியீட்டு திரையினை உருவாக்குவதற்கு வெளியீடு வடிவமைப்பு மிக முக்கியமானதாகும்.

வெளியீடு வடிவமைப்பு:


எளிதாக படிப்பதற்கும் மற்றும் புரிந்து கொள்வதற்கும் தேவைப்படும் வெளியீட்டு திரையினை உருவாக்குவதற்கு வெளியீடு வடிவமைப்பு மிக முக்கியமானதாகும். C++ நிரல் வெளியீடுகளை வடிவமைக்க கையாளுகைகள் என்பது (Manipulation) பயன்படுகிறது. கையாளுகைகள் என்பது, தரவு பெறும் (<<) மற்றும் தரவு ஈர்ப்பு (>>) செயற்குறிகளில் பயன்படுத்த சிறப்பாக வடிவமைக்கப்பட்ட செயற்கூறுகள் ஆகும்.

வெளியீட்டை வடிவமைக்க C++ பல்வேறு கையாளுகைகளை வழங்கியுள்ளது. endl, setw, setfill, setprecision மற்றும் setf போன்ற வை பொதுவாக பயன்படுத்தப்படும். கையாளுகை செயற்கூறுகளாகும். இச் செயற்கூறுகளை பயன்படுத்த பொருத்தமான தலைப்புக் கோப்புகளை நிரலுடன் இணைக்க வேண்டும். endl கையாளுகை iostream தலைப்புக் கோப்பின் உறுப்பு ஆகும். set w, set fill, set precision மற்றும் set f கையாளுகைகள் iomanip என்ற தலைப்புக் கோப்பின் உறுப்பு ஆகும்.


endl (வரியின் முடிவு)


C++ -ல் endl என்பது வரி உள்ளீ டாக பயன்படுகிறது. இது '\n'க்கு மாற்றாக பயன்படுகிறது. endl ஒரு புதிய வரியை செருகி, செருகும் புள்ளியை அந்த வரியின் தொடக்கத்தில் நிறுத்துகிறது. endl மற்றும் \n’) ஒரே மாதிரியான வேலைகளை செய்தாலும் இதற்கிடைய ஒரு வேறுபாடு உள்ளது.

endl - புதிய வரியை செருகி தற்காலிக நினைவகத்தை காலி செய்கிறது

'\n' - புதிய வரியை மட்டும் செருகுகிறது. 


எடுத்துக்காட்டு:

cout << "\n The value of num = " << num;

cout << "The value of num = " << num <<end;

இந்த இரண்டு கூற்றுகளும் ஒரே வெளியீட்டை தருகின்றன. 


setw ()


setw() கையாளுகை செயற்கூறு வெளியீட்டிற்காக ஒதுக்கப்பட்ட புலத்தின் அகலத்தை வரையறுக்கிறது. வெளியீட்டில் எழுதப்பட வேண்டிய குறைந்தபட்ச குறியுரு எண்ணிக்கையை புலத்தின் அகலம் நிர்ணயிக்கிறது. 


கட்டளையமைப்பு: 

setw (எழுத்துருக்களின் எண்ணிக்கை) 


எடுத்துக்காட்டு 9.10 சம்பளக் கணக்கீட்டிற்கான நிரல்

#include <iostream>

#include <iomanip>

using namespace std;

int main()

{

      float basic, da, hra, gpf, tax, gross, np;

      char name[30];

      cout << "\n Enter Basic Pay: ";

      cin >> basic;

      cout << "\n Enter D.A : ";

      cin >> da;

      cout << "\n Enter H.R.A: ";

      cin >> hra;

      gross = basic+da+hra; // sum of basic, da nad hra

      gpf = (basic+da) * 0.10; // 10% 0f basic and da

      tax = gross * 0.10; //10% of gross pay

      np = gross - (gpf+tax); //netpay = earnings - deductions

      cout << setw(25) << "Basic Pay : " << setw(10)<< basic<< endl;

      cout << setw(25) << "Dearness Allowance : "<< setw(10)<<da<< endl;

      cout<<setw(25)<<"House Rent Allowance : "<<setw(10)<< hra<<endl;

      cout << setw(25) << "Gross Pay : " << setw(10) << gross << endl;

      cout << setw(25) << "G.P.F : " << setw(10) << gpf << endl;

      cout << setw(25) << "Income Tax : " << setw(10)<< tax << endl;

      cout << setw(25) << "Net Pay : " << setw(10) << np << endl;

}


வெளியீடு: 

Enter Basic Pay: 12000

Enter D.A : 1250

Enter H.R.A : 1450

Basic Pay : 12000

Dearness Allowance : 1250

House Rent Allowance : 1450

Gross Pay : 14700

G.P.F : 1325

Income Tax : 1470

Net Pay : 11905

(HOT: Try to make multiple output statements as a single cout statement)

மேலே கொடுக்கப்பட்ட நிரலில், ஒவ்வொரு வெளியீட்டுக் கூற்றும் இரண்டு setw( ) கையாளுகைகளைக் கொண்டுள்ளது. முதலில் கொடுக்கப்பட்டுள்ள setw(25) என்பது 25 இடைவெளிகளைக் கொண்ட ஒரு புலத்தையும், setw(10) என்பது 10 இடைவெளிகளையும் கொண்ட மற்றொரு புலத்தையும் உருவாக்குகின்றது. இப்புலங்களில் மதிப்புகளை இருத்தும் போது, அவை வலமிருந்து இடமாக தோன்றும்.


புலம் 1 மற்றும் புலம் 2-ல் சரம் “Basic Pay: '' மற்றும் value of basic pay வின் மதிப்பு 



setprecision ( )


கொடுக்கப்பட்ட இலக்கங்களின் எண்ணிக்கைக்கு இணையான எண்களை தசம எண்களாக காண்பிக்க பயன்படுகிறது. 


கட்டளை அமைப்பு: 

setprecision (இலக்கங்களின் எண்ணிக்கை); 


எடுத்துக்காட்டு:

#include <iostream>

#include <iomanip>

using namespace std;

int main()

{

      float hra = 1200.123;

      cout << setprecision (5) << hra;

}

மேலே கொடுக்கப்பட்ட குறிமுறையில் கொடுக்கப்பட்ட மதிப்பு 1200.123 தசமத்தையும் சேர்த்து 5 இலக்கமாக காண்பிக்கப்படும். எனவே, வெளியீடு 1200. 1 எனத் தோன்றும். 

setprecision ( ) இடமிருந்து வலது புறமாக மதிப்புகளை அச்சிடும். மேலே கொடுக்கப்பட்ட குறிமுறையில் முதலில் 4 இலக்கங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டு பின்பு தசம் பகுதியில் ஒரு இலக்கம் அச்சிடப்படும். 

setprecision காண்பிக்கப்பட வேண்டிய தசம இடங்களின் எண்ணிக்கையை பொறுத்துவதற்கு உதவுகிறது. இந்த வேலையை செய்வதற்காக setf() கையாளுகை செயற்கூறில் ios flag ஐ பொறுத்த வேண்டும். இது இரண்டு வடிவங்களில் பயன்படுத்தப்படும். அவை, (i) நிலையான (fixed) மற்றும் (ii) அறிவியல் (scientific)

setprecision கையாளுகைக்கு முன்னர், இது தசமப் புள்ளி எண்களை scientific வடிவில் fixed அல்லது Scientific என்ற இரண்டு சிறப்புச் சொற்களில் பொருத்தமானதை பயன்படுத்த வேண்டும்.


எடுத்துக்காட்டு :

#include <iostream>

#include <iomanip>

using namespace std;

int main()

{

      cout.setf(ios::fixed);

      cout << setprecision(2)<<0.1;

}

மேலே கொடுக்கப்பட்டுள்ள நிரலில், ios flagல் fixed வகை பொறுத்தப்பட்டுள்ளது. இது தசமப் புள்ளி எண்களை நிலையான வடிவில் அச்சிடுகிறது. எனவே, விடையானது, 0.10 என்று கிடைக்கும்.


cout.setf(ios::scientific);

 

cout << setprecision(2) << 0.1;


மேலே கொடுக்கப்பட்டுள்ள நிரலில், ios flag - scientific வகையாக பொறுத்தப்படுகிறது. இது தசமப் புள்ளி எண்களை scientific வடிவில் அச்சிடுகிறது. எனவே, இதன் வெளியீடு 1.00e-001




11th Computer Science : Chapter 9 : Introduction to C++ : C++: Formatting Output in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 9 : C++ ஓர் அறிமுகம் : C++ : வெளியீடு வடிவமைப்பு - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 9 : C++ ஓர் அறிமுகம்