Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | C++ நிரல்: நினைவில் கொள்க

C++ ஓர் அறிமுகம் - C++ நிரல்: நினைவில் கொள்க | 11th Computer Science : Chapter 9 : Introduction to C++

   Posted On :  20.09.2022 02:41 am

11வது கணினி அறிவியல் : அலகு 9 : C++ ஓர் அறிமுகம்

C++ நிரல்: நினைவில் கொள்க

கணினி அறிவியல் : C++ ஓர் அறிமுகம் : C++ நிரல்: நினைவில் கொள்க

நினைவில் கொள்க


C++ 1979ம் ஆண்டு AT & T பெல் ஆய்வுக் கூடத்தில் ஜேர்ன் ஸ்ட்ரௌஸ்ட்ரப் அவர்களால் உருவாக்கப்பட்டது. 


குறியுருத் தொகுதி என்பது ஒரு C++ நிரலை எழுதுவதற்கு அனுமதிக்கப்படும் எழுத்துகளின் தொகுப்பாகும். 


C++ சிறப்புச் சொற்கள் நிரல் பெயர்ப்பிக்கு குறிப்பிட்ட அர்த்தத்தை தெரிவிக்கும் சொற்களாகும். 


குறிப்பெயர்கள் என்பது C++ நிரலில் வெவ்வேறு பகுதிகளுக்கு கொடுக்கப்படும் பெயர்களாகும். இவை பயனரால் வரையறுக்கப்பட்ட, மாறிகள், செயற்கூறுகள், அணிகள், இனக்குழுக்கள் போன்றவை ஆகும். 


ஒரு நிரலை நிறைவேற்றும் போது மதிப்புகள் மாறாத தரவுகள் நிலையுருக்கள் ஆகும். எனவே, நிலையுருக்கள் மாறிலிகள் என்றும் அழைக்கப்படுகிறது. 


C++ல் பல வகையான நிலையுருக்கள் உள்ளன. முழுஎண், மிதப்புப் புள்ளி எண் எழுத்துரு சரம். 


செயற்குறிகள் கணித, தருக்க செயல்பாடுகளை செய்யப் பயன்படும் குறியீடுகளாகும். 


C++ நிரலை உருவாக்குவதற்கு வரம்புக்குறிகளாக பயன்படுத்தப்படும் குறியீடுகள் நிறுத்தற்குறிகளாகும். இவை வரம்புச் சுட்டி என்றும் அழைக்கப்படுகிறது. 


தரவு ஈர்ப்பு (>>) மற்றும் தரவு விடுப்பு (<<) தரவை பெறவும், வெளியீட்டை அனுப்பவும் பயன்படுகிறது.



Tags : Introduction to C++ C++ ஓர் அறிமுகம்.
11th Computer Science : Chapter 9 : Introduction to C++ : C++ program: Points to Remember Introduction to C++ in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 9 : C++ ஓர் அறிமுகம் : C++ நிரல்: நினைவில் கொள்க - C++ ஓர் அறிமுகம் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 9 : C++ ஓர் அறிமுகம்