Posted On :  24.09.2022 08:15 pm

11வது கணினி அறிவியல் : அலகு 9 : C++ ஓர் அறிமுகம்

C++ உருவாக்கு சூழல்

C++ நிரல்களை உருவாக்க பல ஒருங்கிணைந்த உருவாக்க சூழல்கள் IDE உள்ளன. C++ எளிதாக நிரல்களை உருவாக்க, தொகுக்க மற்றும் இயக்க IDE மிகவும் உதவுகிறது.

C++ உருவாக்கு சூழல் (C++ Development Environment)


C++ நிரல்களை உருவாக்க பல ஒருங்கிணைந்த உருவாக்க சூழல்கள் IDE உள்ளன. C++ எளிதாக நிரல்களை உருவாக்க, தொகுக்க மற்றும் இயக்க IDE மிகவும் உதவுகிறது. பல IDE - க்கள் திறந்த மூல (open source) பயன்பாடுகளாகும். அதாவது, இதனை இலவசமாக பெற முடியும். 


நன்கு அறியப்பட்ட IDEயுடனான C++ தொகுப்பான்கள் (Familiar C++ Compilers with IDE)



Dev C++ ல் வேலை செய்தல் (Working with Dev C++)


C++ நிரல்களை உருவாக்க பல IDE - க்கள் உள்ளன. ஆனால் இந்த பாடப்புத்தகத்தில் "Dev C++” தொகுப்பானை பயன்படுத்துகிறோம். இந்த புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள நிரல்களும், செயல்முறை நுட்பங்கங்களும் “Dev C++” தொகுப்பானை தழுவியதாகும்.

Dev C++ ஒரு திறந்த மூல (Open Source) பல இயக்க அமைப்புகளிலும் இயக்கும் பணித்தளம் (Cross platform). லினக்ஸ் இயக்க அமைப்பில் பதிப்பு Dev C++ alpha பதிப்பை பயன்படுத்தலாம். இந்த பதிப்பு பகிர்ந்தளிக்கப்பட்ட GNU (General Public License) யுடன் கூடிய முழுமையான ஒருங்கிணைந்த உருவாக்க சூழல் ஆகும். இது Delphi யில் உருவாக்கப்பட்டுள்ளது. இதை http://www.bloodshed.net/dev/devcpp. html லிருந்து பதிவிறக்கம் செய்யலாம். 


1. Dev C++ ஐ நிறுவிய பிறகு, Dev C++ பணிக்குறியானது திரைமுகப்பில் தோன்றும். IDE- யை திறப்பதற்கு இரட்டை கிளிக் செய்யவும். Dev C++ IDE பின்வருமாறு தோன்றும்.


2. மூலக் கோப்பினை (source file) உருவாக்குவதற்கு File New Source file அல்லது Ctrl + N என்பதை தேர்ந்தெடுக்கவும். 


3. தோன்றுகின்ற திரையில் C++ நிரலை தட்டச்சு செய்து அதை சேமிக்க File Save அல்லது Ctrl + S என்பதை பயன்படுத்த வேண்டும். இது தானமைவாக. cpp என்ற நீட்டிப்பை கோப்பின் பெயருடன் சேர்த்துக்கொள்ளும். கோப்புப் பெயருடன் .cpp என்பதை தட்டச்சு செய்யத் தேவையில்லை.



4. கோப்பினை சேமித்தப்பின், Execute Compile & Run என்பதை கிளிக் செய்யவும் அல்லது F11 விசையை அழுத்தவும்.

நிரலில் ஏதேனும் பிழை இருந்தால் அது Compile log - ல் காண்பிக்கப்படும். நிரலில் பிழை ஏதும் இல்லை என்றால் பின்வரும் காட்சி தோன்றும். 



5. வெற்றிகரமான தொகுப்பிற்கு பிறகு வெளியீடு Output console பகுதியில் பின்வருமாறு தோன்றும். 



11th Computer Science : Chapter 9 : Introduction to C++ : C++ Development Environment in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 9 : C++ ஓர் அறிமுகம் : C++ உருவாக்கு சூழல் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 9 : C++ ஓர் அறிமுகம்