Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | C++ நிரல் : உள்ளீட்டு-வெளியீட்டு செயற்குறிகள்
   Posted On :  24.09.2022 08:09 pm

11வது கணினி அறிவியல் : அலகு 9 : C++ ஓர் அறிமுகம்

C++ நிரல் : உள்ளீட்டு-வெளியீட்டு செயற்குறிகள்

கணினி அறிவியல் : C++ ஓர் அறிமுகம் : உள்ளீட்டுச்செயற்குறி, வெளியீட்டு செயற்குறி, I/O செயற்குறிகள் தொடராக்கம்

உள்ளீட்டு-வெளியீட்டு செயற்குறிகள் 


உள்ளீட்டுச்செயற்குறி (Input operator)


>> என்பது C++ ன் உள்ளீட்டு செயற்குறியாகும். இது விசைப்பலகையின் மூலம் மதிப்புகளைப் பெற்று வலப்பக்கம் உள்ள மாறியில் மதிப்பை இருத்துகிறது. எனவே, இது தரவு ஈர்ப்பு (extraction) அல்லது தரவு பெறும் (get from) செயற்குறி எனப்படும்.

இந்த செயற்குறிக்கு இரு செயலேற்பிகள் தேவைப்படுவதால், இது ஒரு இரும செயற்குறியாகும். விசைப் பலகையின் மூலம் பெறப்படும் உள்ளீட்டினை, முன்னதாகவே வரையறுக்கப்பட்ட cin என்னும் பொருளால் (சி-இன் என்று உச்சரிக்கப்படுகிறது) அடையாளம் காண்கிறது, இது முதல் செயலேற்பியாகும். இரண்டாவது செயலேற்பி ஒரு மாறியாக இருக்க


ஒன்றுக்கு மேற்பட்ட தரவு மதிப்புகளை >> எனும் செயற்குறி மூலம் பெற்று உரிய மாறிகளில் இருத்தி வைக்க முடியும். இதற்கு செயற்குறித் தொடராக்கம் (cascading of operator) என்று பெயர்.


எடுத்துக்காட்டு:


• cin >> num;

தரவு ஈர்ப்புச் செயற்குறி, உள்ளீட்டுத் தாரைப் பொருளான cin-லிருந்து தரவினை ஈர்த்து, வலப்புறமுள்ள மாறி num-ல் இருத்துகிறது. 

•  cin >>x >> y;

இது இரண்டு மதிப்புகளை ஈர்க்கும். cin முதல் மதிப்பை உடனடியாகப் பெற்று x என்னும் மாறியிலும் இரண்டாவது மதிப்பைப் பெற்று y என்னும் மாறியில் இருத்துகிறது. 


வெளியீட்டு செயற்குறி (Output Operator)


<< என்பது C++ல் உள்ள வெளியீட்டு செயற்குறியாகும். வலதுப்பக்கம் உள்ள மாறியின் மதிப்புகளைப் பெற்று இடதுப்பக்கம் உள்ள முன் வரையறுக்கப்பட்டுள்ள பொருளான cout-க்கு அனுப்புகிறது. இது தரவு விடுப்பு (insertion) அல்லது தரவு தரும் (put-to) செயற்குறியாகும். இரு ஒரு இரும செயற்குறியாகும்.

முன் வரையறுக்கப்பட்ட cout என்னும் பொருள் (சி - அவுட் என்று உச்சரிக்கப் படுகிறது) வெளியீட்டு சாதனமான திரையகத்தை அடையாளம் காண்கிறது. இதில் இரண்டாம் செயலேற்பி ஒரு மாறிலி, மாறி அல்லது கோவையாக இருக்கலாம்.


ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மாறி / மாறிலி / கோவையின் மதிப்புகளை << என்னும் செயற்குறி மூலம் திரையகத்திற்கு அனுப்பப்படுகிறது. இதற்கு செயற்குறித் தொடராக்கம் (cascading of operator) என்று பெயர். 

எடுத்துக்காட்டு:



I/O செயற்குறிகள் தொடராக்கம் (Cascading of I/O operators)


ஒன்றுக்கும் மேற்பட்ட உள்ளீட்டு மற்றும் வெளியிட்டு செயற்குறிகள் >> மற்றும் << ஒரே கூற்றில் பயன்படுத்தப்பட்டால் அதற்கு I/O செயற்குறிகளின் தொடராக்கம் என்று பெயர். 


cout ன் தொடராக்கம் (Cascading cout):

int Num=20;

cout << "A=" << Num; 

படம் 9.6 cout-ன் தொடராக்கத்தை விளக்குகிறது.


cin ன் தொடராக்கம் (Cascading cin)

cout >> “Enter two number: ”; 

cin >> a >> b; 

படம் 9.7 cin –ன் தொடராகத்தை விளக்குகிறது.



11th Computer Science : Chapter 9 : Introduction to C++ : C++ program: I/O Operators in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 9 : C++ ஓர் அறிமுகம் : C++ நிரல் : உள்ளீட்டு-வெளியீட்டு செயற்குறிகள் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 9 : C++ ஓர் அறிமுகம்