Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | C++ தரவு வகைகள், மாறிகள் மற்றும் வெளிப்பாடுகள்: நினைவில் கொள்க
   Posted On :  20.09.2022 05:51 pm

11வது கணினி அறிவியல் : அலகு 9 : C++ ஓர் அறிமுகம்

C++ தரவு வகைகள், மாறிகள் மற்றும் வெளிப்பாடுகள்: நினைவில் கொள்க

கணினி அறிவியல் : C++ ஓர் அறிமுகம் : C++ தரவு வகைகள், மாறிகள் மற்றும் வெளிப்பாடுகள்: நினைவில் கொள்க

நினைவில் கொள்க


• அனைத்து நிரலாக்க மொழிகளிலும் இரண்டு அடிப்படை உறுப்புகள் உள்ளன.


• C++-ல் தரவு இனங்களை மூன்று வகைகளாக பிரிக்கலாம். (1) அடிப்படைத் தரவு இனங்கள் (2) பயனர் வரையறுக்கும் தரவு இனங்கள் மற்றும் (3) தருவிக்கப்பட்ட தரவு இனங்கள்


• மாறிகள் என்பவை குறிப்பிட்ட தரவு இனங்களின் மதிப்புகளை தாங்கியுள்ள, பெயரிடப்பட்ட நினைவக இடங்களை குறிக்கிறது.


• C++-ல் ஐந்து அடிப்படை தரவினங்கள் உள்ளன. அவை char, int, float, double மற்றும் void.


• தொகுப்பானின் தரவரிசைப்படி ஒவ்வொரு தரவிற்கும் குறிப்பிட்ட நினைவக இடத்தை C++ தொகுப்பான் ஒதுக்குகிறது.


• மாறியின் பெயருடன் கூடிய தரவு வகைக்கு ஏற்ற நினைவக ஒதுக்கீடு பற்றி தொகுப்பானுக்கு தெரிவிப்பதே அறிவிப்பு ஆகும்.


• நிரலின் வெளியீட்டை வடிவமைப்பதற்கு கையாளுகை செயற்கூறுகள் பயன்படுகின்றன. கையாளுகை செயற்கூறுகள் என்பது தரவு விடுப்பு (<<) மற்றும் தரவு ஈர்ப்பு(>>) செயற்குறிகளுடன் பயன்படுத்துவதற்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட செயற்கூறுகள் ஆகும். 


• கோவை என்பது C++ விதிமுறைகளுக்குட்பட்ட சீராக உள்ள செய்முறைகள், மாறிலிகள் மற்றும் மாறிகளின் கூட்டாகும். 


• ஒரு அடிப்படை இனத்திலிருந்து மற்றொரு இனத்திற்கு மாற்றப்படும் முறையே இனமாற்றம் எனப்படும். C++ இரண்டு வகையான இனமாற்றத்தை வழங்குகிறது.


• உள்ளுறை இனமாற்றம் 


• வெளியுறை இனமாற்றம் 


11th Computer Science : Chapter 9 : Introduction to C++ : C++ Data Types, Variables and Expressions: Points to Remember in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 9 : C++ ஓர் அறிமுகம் : C++ தரவு வகைகள், மாறிகள் மற்றும் வெளிப்பாடுகள்: நினைவில் கொள்க - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 9 : C++ ஓர் அறிமுகம்