Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | C++ -ல் முதல் எடுத்துக்காட்டு நிரல்
   Posted On :  24.09.2022 08:11 pm

11வது கணினி அறிவியல் : அலகு 9 : C++ ஓர் அறிமுகம்

C++ -ல் முதல் எடுத்துக்காட்டு நிரல்

“Welcome to Programming in C++” எனும் சரத்தை அச்சிடும் நமது முதல் C++ நிரல் காண்போம்.

C++ -ல் முதல் எடுத்துக்காட்டு நிரல் 


“Welcome to Programming in C++” எனும் சரத்தை அச்சிடும் நமது முதல் C++ நிரல் காண்போம்.

மேற்கண்ட நிரல் கீழ்காணும் வெளியீட்டைத் தருகிறது


Welcome to Programming in C++

இது அடிப்படை கூறுகளை உள்ளடக்கிய ஒரு எளிய C++ நிரல் ஆகும். இந்த கூறுகளைப் பற்றிப் பார்ப்போம். 


1 // C++ program to print a string

இது ஒருகுறிப்புரைகூற்று.// என்ற குறியுடன் தொடங்கும் அனைத்து கூற்றுகளும்குறிப்புரைகளாகும். நிரலில் உள்ள குறிப்புரைகளை நிரல் பெயர்ப்பியானது புறக்கணித்து, அவற்றைச் செயல்படுத்தாது. ஒன்றிக்கு மேற்பட்ட குறிப்புரைகளை /* ....... */ என்ற குறிக்குள் தர வேண்டும். 


2 # include <iostream> 

அனைத்து C++ நிரல்களும் include கூற்றுடன் # குறியுடன் தொடங்கும். # என்பது ஒரு முன்செயலி நெறியுறுத்தும். இந்த கூற்றுகள் நிரல் தொகுப்புக்கு முன்னதாகவே செயல்பட தொடங்கும்.

#include <iostream> எனும் கூற்று, iostream என்னும் தலைப்புக் கோப்பினை நிரலில் சேர்த்துக் கொள்ளுமாறு நிரல் பெயர்ப்பிக்கு உணர்த்துகிறது.

உள்ளீடு / வெளியீடு செயல்பாடுகளை பயன்படுத்தி கொள்ள வேண்டுமெனில் iostream என்னும் தலைப்பு கோப்பை ஒவ்வொரு C++ நிரலிலும் இணைக்க வேண்டும். சுருக்கமாக, iostream என்னும் தலைப்புக் கோப்பு, அதன் பொருள் உறுப்பினர்களான cin மற்றும் cout -டினை கொண்டுள்ளது. iostream என்னும் தலைப்பு கோப்பை நிரலில் கொடுக்க தவறினால் cin மற்றும் cout -க்கான பிழைச் செய்தியை சுட்டிக்காட்டும் மற்றும் உள்ளீட்டைப் பெறவோ அல்லது வெளியீட்டை அனுப்பவோ முடியாது. 


3 using namespace std; 

using namespace std; என்னும் வரியானது, standard namespace - சைப் பயன்படுத்துமாறு நிரல் பெயர்ப்பிக்கு கூறுகிறது. namespace என்பது இனக்குழு, பொருள் மற்றும் மாறிகளுக்குத் தேவையான குறிப்பெயர்களின் தொகுப்பாகும். ஒரு பெரிய செயல்திட்டத்தில் ஏற்படும் பெயர் முரண்பாடுகளைத் தவிர்க்கும் வழிமுறைகளை namespace கொடுக்கிறது. ANSI C++ தரக்குழுவினால் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


4 int main ( ) 

C/C++நிரலானது செயற்கூறுகளின் தொகுப்பாகும். ஒவ்வொரு C++ நிரலும் main() செயற்கூறினைக் கட்டாயமாக்கப் பெற்றிருக்க வேண்டும். செயல்படுத்தப்படும் கூற்றுகள் main( ) செயற்கூறினுள் இருக்க வேண்டும்.


நெளிவு அடைப்புக் குறிக்குள் {} உள்ள (வரிசை எண் 5 முதல் 8 வரை) கூற்றுகள் செயல்படுத்தப்படும் கூற்றுகளாகும். இது தொகுதி குறிமுறை எனப்படும். வரி 6-ல் உள்ள cout என்ற கட்டளை Welcome to Programming in C++ என்ற சரத்தை திரைக்கு அனுப்புகிறது. ஒவ்வொரு செயல்படுத்தப்படும் கூற்றுகளும் அரைப்புள்ளியுடன் (;) முடிய வேண்டும். வரி 7ல் உள்ள return எனும் சிறப்புச் சொல் ஒரு செயற்கூற்றுக்கு குறிப்பிட்ட மதிப்பை திருப்பி அனுப்ப பயன்படுகிறது. இதில் main( ) செயற்கூறுக்கு 0 என்ற மதிப்பை திருப்பி அனுப்புகிறது. 


11th Computer Science : Chapter 9 : Introduction to C++ : Sample program - A first look at C++ program in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 9 : C++ ஓர் அறிமுகம் : C++ -ல் முதல் எடுத்துக்காட்டு நிரல் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 9 : C++ ஓர் அறிமுகம்