இந்திய மக்களாட்சியின் சவால்கள்:
இந்திய மக்களாட்சியில் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் மற்றும் ஒட்டு மொத்த சமுகத்திற்குமான சவால்கள் உள்ளன. குறிப்பாக அனைவருக்குமான கல்வித் திட்டம் சரியாக செயலாக்கப்படாததால் இன்று இந்தியாவின் மிக முக்கிய பிரச்சினையாக எழுத்தறிவின்மை உள்ளது. வறுமை, மதவாதம், மத அடிப்படைவாதம், பாலினப் பாகுபாடு, பெண்களுக்கெதிரான வன்முறை, அரசியல் வன்முறை, சீர்திருத்தங்கள் செய்யப்படாமலே இயங்கி கொண்டிருக்கும் நீதித்துறை மற்றும் நிர்வாகத் துறை, குடிமைச் சமூகத்தின் குறைவான பங்களிப்பு, அரசியலில் அதிகரித்து வரும் குற்றவாளிகளின் எண்ணிக்கை, அதிகரித்து வரும் பொருளாதார குற்றங்கள், வளர்ச்சித் திட்டங்களில் மாநிலங்களுக்கிடையே பாகுபாடு காட்டும் மத்திய அரசு மற்றும் அனைவரையும் சரிசமமாக சென்றடையாத வளர்ச்சி போன்ற பிரச்சனைகள் இந்தியாவில் தலையாய பிரச்சனைகளாக உள்ளன. மேலும் நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்பு, பணிபுரிவதற்கான சுதந்திரம் மற்றும் கட்டுப்பாடுகளும் -சம நிலைகளும் (Checks and Balances) போன்ற இந்திய மக்களாட்சியின் அடிப்படை கட்டமைப்புகள் தான் தற்கால மற்றும் எதிர்கால சவால்களாக இந்தியாவிற்கு உள்ளன.
உங்களுக்குத் தெரியுமா?
அரசமைப்பின் 73-வது மற்றம் 74-வது சட்ட திருத்தத்திற்குப் பிறகும் இந்தியாவின் சில கிராமங்களில் உள்ளாட்சித் தேர்தலே பல ஆண்டுகளாக நடைபெறாமல் உள்ளதை நீங்கள் அறிவீர்களா?