ஒளியியல் கருவிகள் - கூட்டு நுண்ணோக்கி | 12th Physics : UNIT 7 : Wave Optics
கூட்டு நுண்ணோக்கி
படம் 6.86 கூட்டு நுண்ணோக்கி
கூட்டு நுண்ணோக்கியின் அமைப்பு படம் 6.86 இல்
காட்டப்பட்டுள்ளது. பொருளுக்கு அருகே உள்ள லென்சுக்குப் பொருளருகு லென்ஸ் என்று பெயர்.
இந்த லென்ஸ் பொருளின் மெய்யான, தலைகீழாக்கப்பட்ட மற்றும் உருப்பெருக்கப்பட்ட பிம்பத்தைத்
தோற்றுவிக்கும். இப்பிம்பம், இரண்டாவது லென்சான கண்ணருகு லென்சுக்கு பொருளாகச் செயல்படுகிறது.
கண்ணருகு லென்ஸ் ஓர் எளிய நுண்ணோக்கி போன்று செயல்பட்டு இறுதியாகப் பெரிதாக்கப்பட்ட
மாயபிம்பத்தைத் தோற்றுவிக்கிறது. பொருளருகு லென்சினால் தோற்றுவிக்கப்பட்ட தலைகீழான
முதல் பிம்பம், கண்ணருகு லென்சுக்கு நெருக்கமாக, ஆனால் அதன் குவியப்பரப்பிற்குள் இருக்கும்படி
சரிசெய்யும் போது, இறுதி பிம்பம் கிட்டத்தட்ட ஈரில்லாத் தொலைவில் அல்லது அண்மைப் புள்ளியில்
தோன்றும். இறுதிபிம்பம் உண்மையான பொருளைப்பொருத்துத் தலைகீழாகக் கிடைக்கும். கூட்டு
நுண்ணோக்கியின் உருப்பெருக்கத்திற்கான கோவையைப் பின்வருமாறு நாம் வருவிக்கலாம்.
1. கூட்டு
நுண்ணோக்கியின் உருப்பெருக்கம்
கதிர் ஒளிப்படத்திலிருந்து, பொருளருகு லென்சின்
நேரியல் உருப்பெருக்கம், பின்வருமாறு,
இங்கு, L என்பது கண்ணருகு லென்சின் முதல் குவியப்புள்ளிக்கும்,
பொருளருகு லென்சின் இரண்டாம் குவியப்புள்ளிக்கும் இடையே உள்ள தொலைவாகும். இதற்குக்
கூட்டு நுண்ணோக்கியின் குழலின் நீளம் (L) என்று பெயர், மேலும் f0 மற்றும்
fe இரண்டும் (L) ஐ விடக் குறைவாகத்தான் இருக்கும். இறுதி பிம்பம், அண்மைப்
புள்ளியில் அமைந்தால், கண்ணருகு லென்சின் உருப்பெருக்கம் me பின்வருமாறு
அண்மைப்புள்ளி குவியப்படுத்தலின் மொத்த உருப்பெருக்கம்
(m) பின்வருமாறு
இறுதிபிம்பம் ஈரில்லாத் தொலைவில் அமைந்தால்
(இயல்புநிலை குவியப்படுத்துதல்), கண்ண ருகு லென்சின் உருப்பெருக்கம் me
பின்வருமாறு
இயல்புநிலை குவியப்படுத்துதலில் ஏற்படும் மொத்த
உருப்பெருக்கம் m பின்வருமாறு கிடைக்கும்,
எடுத்துக்காட்டு
6.42
நுண்ணோக்கி ஒன்றின் பொளருகு லென்ஸ் மற்றும்
கண்ணருகு லென்ஸ் ஆகியவற்றின் குவியத்தூரங்கள் முறையே 5 cm மற்றும் 50 cm ஆகும். நுண்ணோக்கியின்
குழலின் நீளம் 30 cm எனில், (i) அண்மைப்புள்ளி குவியப்படுத்துதல் மற்றும் (ii) இயல்புநிலை
குவியப்படுத்தலில் ஏற்படும் உருப்பெருக்கங்களைக் கணக்கிடுக.
தீர்வு
f0 = 5 cm = 5x10-2m;
fe = 50 cm = 50x10-2m;
L = 30 cm = 30X10-2m; D = 25
cm = 25X10-2m
(i) அண்மைப் புள்ளியில் குவியப்படுத்தலில்
ஏற்படும்
மொத்த உருப்பெருக்கம்,
மதிப்புகளைப் பிரதியிடும்போது,