மாறுபாடு - ப்ரனெல் தொலைவு | 12th Physics : UNIT 7 : Wave Optics

   Posted On :  02.12.2022 03:25 am

12 வது இயற்பியல் :அலகு 7 : அலை ஒளியியல்

ப்ரனெல் தொலைவு

ஒளியின் நேர்கோட்டுப் பரவல், கதிர்ஒளியியலில் சாத்தியமாகும் தொலைவிற்கு ப்ரனெல் தொலைவு என்று பெயர்.

ப்ரனெல் தொலைவு

ஒளியின் நேர்கோட்டுப் பரவல், கதிர்ஒளியியலில் சாத்தியமாகும் தொலைவிற்கு ப்ரனெல் தொலைவு என்று பெயர். விளிம்பு விளைவு நிகழ்வில் ஒளி அலை வளைந்து செல்லும் இந்த ஒளியின் வளையும் பண்பு அதன் நேர்கோட்டுபரவலுக்கு முற்றிலும் எதிரானதாகும். ஆனால் இந்த விளைவு மையப்பெருமத்தை கடக்கும் வரை எந்த முக்கியத்துவத்தையும் பெறாது. அதாவது படம் 6.65இல் z தொலைவைக் கடக்கும் வரை எந்த முக்கியத்துவத்தையும் பெறாது. எனவே, ப்ரனெல் தொலைவு என்பது எந்த தொலைவு வரை ஒளி, கதிர் ஒளியியலுக்கு கட்டுப்படுகிறதோ அல்லது கதிர் ஒளியியலுக்கு கட்டுப்படாமல் அலை ஒளியியலுக்கு கட்டுப்படத்தொடங்குகிறதோ அந்தத் தொலைவே ப்ரனெல் தொலைவு எனப்படும்.


முதல் சிறுமத்திற்கான விளிம்பு விளைவுச் சமன்பாடு sinθ = λ/a ; θ = λ/a

ப்ரனெல் தொலைவின் வரையறையிலிருந்து, sin2θ =a/z; 2θ= a/z

இரண்டு சமன்பாடுகளையும் ஒப்பிடும்போது,

λ/a  = a/2z

எனவே, ப்ரனெல் தொலைவு Z


 

எடுத்துக்காட்டு 6.33

500 nm அலைநீளமுடைய ஒளி 5 mm அகலமுடைய துளையின் வழியேச் செல்லும்போது விளிம்பு விளைவு அடைகிறது. இந்நிகழ்வில் கதிர் ஒளியியலைப் பயன்படுத்தும் தொலைவினைக் காண்க

தீர்வு

a = 5 mm = 5 x 10-3 m;

λ = 500 nm = 500x10-9m; z = ?

ப்ரனெல் தொலைவு, z = a2 / 2λ

மதிப்புகளைப் பிரதியிடும்போது,

Tags : Diffraction மாறுபாடு.
12th Physics : UNIT 7 : Wave Optics : Fresnel’s distance Diffraction in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது இயற்பியல் :அலகு 7 : அலை ஒளியியல் : ப்ரனெல் தொலைவு - மாறுபாடு : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது இயற்பியல் :அலகு 7 : அலை ஒளியியல்