இயற்கை
வளங்களை முறையாக பயன்படுத்துதலும், பாதுகாப்பும்
இயற்கை வளங்கள் அவற்றின்
உயிரிய பொருளாதார மற்றும் பொழுதுபோக்கு மதிப்புக்களுக்காகப் பாதுகாக்கப்படுகின்றன.
இயற்கை வளங்களின் அதிகமான மற்றும் திட்டமிடப்படாத பயன்பாடு சுற்றுச்சூழலில் ஒரு
சமமற்ற நிலையை உருவாக்கி விடும். எனவே இயற்கை வளங்கள், அவற்றை
புதுப்பித்துக் கொள்வதற்கேற்ப, அவற்றினை பயன்படுத்துவதில்
ஒரு முறையான சமநிலை பராமரிப்பு அவசியமாகிறது. இவ்வாறு இயற்கை வளங்களை முறையாக
பராமரிப்பதும், பயன்படுத்துவதும் (சுற்றுச்சூழல் பாதுகாப்பு
எனப்படுகிறது.
எப்பொழுதும் நிலைத்து நிற்கும்
வகையில் நீடித்த உலகை நாம் கட்டமைக்க வேண்டும். ஆற்றலை முறையாகப் பயன்படுத்துதல், நீரை
சேமித்தல், மட்கும் தன்மையற்ற பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை
பயன்படுத்தாதிருத்தல், மற்றும் நாம் வசிக்கும் வளிமண்டலத்தை
முறையாக பராமரித்தல் ஆகியவை இவ்வுலகை நீடித்து நிலைத்திருக்கச் செய்யும் சில
வழிமுறைகள் ஆகும். எதிர்கால சந்ததியினருக்காக நமது வளங்களை முறையாக மேலாண்மை
செய்து பாதுகாப்பது மிக முக்கியமானதொன்றாகும்.