சுற்றுச்சூழல் மேலாண்மை | அறிவியல் - நினைவில் கொள்க | 10th Science : Chapter 22 : Environmental Management
சுற்றுச்சூழல்
மேலாண்மை
(அறிவியல்)
நினைவில்
கொள்க
• இயற்கை வளங்களைப் பாதுகாத்தல்
என்பது மனிதர்களின் அழிவுச் செயல்களிலிருந்து, இயற்கை வளங்களைப் பாதுகாப்பதும், பயன்படுத்துவதும் மற்றும் முறையாக மேலாண்மை செய்வதுமாகும்.
• இயற்கை வளங்களை பாதுகாத்தல்
என்பது ஒரு நாட்டின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு முக்கிய பங்கினை
அளிக்கிறது.
• காடுகள் ஒரு நாட்டின்
மக்களுக்கான மிகப்பெரிய சொத்தாக கருதப்படுகிறது.
• தேசிய பூங்காக்கள் என்பவை
அனைத்து வகையான (தாவர மற்றும் விலங்குகளை) வன உயிரிகளை பாதுகாப்பதற்காக, ஏற்படுத்தப்பட்ட
வரையறுக்கப்பட்ட பகுதி.
• சரணாலயங்கள் விலங்குகளுக்காகவே
மட்டுமே உருவாக்கப்பட்டவை.
• சூரிய மின் கலன் என்பது சூரிய
ஒளியை ஈர்த்து அதனை மின்னாற்றலாக மாற்றக்கூடிய கருவியாகும்.
• சூரியநீர் சூடேற்றிகள்
மின்சாரத்தை பயன்படுத்தாமல் சூரிய ஒளியின் மூலம் நீரை நேரடியாக வெப்பமாக்கக்
கூடியவை.
• மாட்டுச்சாணம் காற்றில்லா
சூழலில் நொதிக்கப்படும் போது உயிரி வாயு உருவாகிறது.
• மழைநீரை எதிர்கால பயன்பாட்டிற்காக
சேகரித்து சேமிக்கும் வழிகள் மழைநீர் சேமிப்பு எனப்படும்.
• தேவையற்ற பயன்படுத்த முடியாத
வழக்கொழிந்த மின் சாதனங்களை மின்னணுக் கழிவுகள் என்கிறோம்.